ஹெலா போஜூன் – பகுதி 1 ஜெயா வீதி , வத்தரமுல்லை

நாம்  பலவகையான கடல் உணவுகள் பற்றி அறிந்திருந்தாலும், இலங்கை சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு புகலிடமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந் நாடு வளமான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், சைவ உணவுகளில் மிகவும் பிரயோகப்படுத்தும் தெங்கு வளத்தினையும் கொண்டமைந்ததாகும்.   இவ்வாறு சைவ உணவுகளின் உற்பத்தி திறனை கொண்ட போதிலும் அனைத்து வீடுகளிலும் மாசி கருவாடு சம்பல் மற்றும் அனைத்து காய்கறிகளுடனும் சமையலில் இணைக்கபடுவதையும் இலங்கையில் காணமுடிகிறது. எனினும் இவற்றை நாம் களைந்து சைவ உணவினை பிரதிநிதித்துவ படுத்தும் முகமாக “உலகின் மிக சைவ நட்பு உணவு வகைகள் நம் கையில் உள்ளது” என்பதில் அச்சமில்லை. 

அதனால்தான், ஹெலா போஜூன் (Hela Bojun) மையங்கள் வடக்கின் யாழ்ப்பாணம் முதல் தெற்கின் மாத்தறை வரை பல இடங்களில் அமைந்துள்ளன. எவ்வாறாயினும் எங்கள் மதிய உணவிற்கான இடம் வத்தரமுல்லை பகுதியை தெரிவுசெய்தோம். இது செஸ்த்திரிபாயா கட்டிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது . வார நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் இந்த திறந்த வெளி உணவு கடையில்  வளாகத்தின் மையத்தில் ஒரு திறந்த சமையலறை உளது. நீர் அல்லிகள் மற்றும் நாரைகளுடன் பள பளக்கும் பளபளக்கும் குளங்கள் பூக்கும் அழகிய நிலப்பரப்பு பகுதியை இது சூழவுள்ளது. 

இதைவிட விலைமதிப்பற்றது என்னவென்றால், அது முற்றிலும் பெண்களால் இயக்கப்படுகிறது. உள்ளூர் உணவு நுகர்வு ஊக்குவிப்பதற்கான மகளிர் விவசாய விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த உணவு மையங்கள் இப்பகுதியின் பெண்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும்போது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அதிகாரம் அளித்து பயிற்சி அளிக்கின்றன.

ஹெல போஜூன் (Hela Bojun) , பத்தரமுல்லையில் ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, கிட்டத்தட்ட அதே நேரத்தில் அரை கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் வாழ்ந்ததால், இவ் வகையான ஓர் ஆரோக்கியமான இடத்தை இதற்கு முன் கண்டுபிடிக்காத சோகம் குறித்து எங்களுடன் பயணித்த சுரம்யா  புலம்பிக் கொண்டிருந்தார்.. ரொட்டி , இடியப்பம் பிட்டு மற்றும் உளுந்து தோசை முதல் பலவிதமான இனிப்பு வகை உணவுகள் வரை, ஹெலா போஜூன் சுவாரஸ்யமாக இருந்தது. , நாட்டின் பிரதான அரிசி மற்றும் கறியை பரிமாறுவதற்கான நேரம் தற்போதாக அமையவில்லை.  மதிய உணவு நேரம் வாருங்கள்,  இங்கு கிடைக்கும் உணவு வழக்கமான அரிசி மற்றும் கறிக்கு வரவேற்கத்தக்க மாற்றமாகும் என்று கேள்விப்பட்ட வாடிக்கையாளர்களின் நிலையான நீரோட்டத்துடன் இந்த இடம் முனு முனுத்து கொண்டிருந்தது.  ஏறக்குறைய 17 விற்பனையாளர்கள் அடுப்பிலிருந்து நேராக உணவை சமைத்து பரிமாறிக் கொண்டிருந்தார்கள், அதனால்தான் எங்கள் வாராந்திர மதிப்புரைகளில் ஹெலா போஜூன் இரண்டு பகுதிகளுக்கு தகுதியானவர் என்று நாங்கள் உணர்ந்தோம்.

எங்களுடைய குழு புதிய பழச்சாறுகளுடன் சைவ உணவு வகைகள் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினோம். குழுவில் ஒருவர் பப்பாளி பழச்சாற்றை வைத்திருந்தபோது மற்றவர் விளாம்பழ பழச்சாறை சுவைக்க தொடங்கினார், அவை பணத்திற்கான முழுமையான மதிப்பு (ஒவ்வொன்றும் வியக்க வைக்கும் வெறும்  ரூ .50 ஆகும்). உண்மையில் அதன் சுவை வீட்டில் நாம் குடிப்பதை போன்று மிகவும் திருப்தி அளித்திருந்தது.  அங்கே மிகவும் ஆச்சரியம் மிகுந்தது காலநிலை ஏற்பாட்டில் மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் எதோ ஒரு சிறிய முயற்சி எங்களின் பார்வைக்கு தென்பட்டது .  அவர்கள் ஒருநாளில் பயன்படும் பிளாஸ்டிக் இல் தயாரித்த உரிஞ்சி குழாய்களை ஆதரிக்கவில்லை. அதற்கான பிரசுரங்களை அவர்கள் பிரதி நிதித்துவப்படுத்தியிருந்தார்கள்.   

காலை சைவ உணவு வகையில் , எமது குழுவில் இருந்து சுரம்யா தேங்காய்ப்பூ கலந்த ரொட்டி,  குரக்கன் தோசை , மரக்கறியை உள்ளடக்கிய கட்லெட்டுக்கள் (குறிப்பாக பலாக்காய் ) மற்றும் அதனுடன் சேர்த்து சாப்பிடுவதற்காக முகுனுவென்னா (உள்ளூர் மூலிகை) , கரட் (ரூ 20) மற்றும் சாம்பார் என்பது எமது குழுவின் விருப்பிற்கு வழங்கப்பட்டது. இதனுடன் நாம் மேலும் காலை சாப்பாட்டிற்க்கு உரிய சைவ உணவுகள் என்ன இருக்கின்றன என ஆராய முற்படுகிறோம் . ஆம் அத்துடன் அங்கே உடனடியாக சூடான பரிமாற்றங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றது . உணவினுடைய தர உறுதிப்படுத்துதல் , சுகாதாரம் மற்றும் தொழில்முறை ஆகியவற்றையும் உள்ளடக்கிய பரிமாற்ற முறையை எண்கள் குழு கவனிப்பதில் தவறவில்லை .  அது எங்களுக்கு மிகவும் திருப்தி அளித்திருந்தது. 

எமது அடுத்த காலை உணவை தேடும் முறையில் எமது குழுவில் இருந்த ரமேஷ் இடியப்பத்தை வாங்க முற்படுகின்றார். அத்தனை சத்து மிக சிவப்பு அரிசிமா இடியப்பம் என்பது அவரின் பார்வையிலும் கதையிலும் தென்பட்டது . நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அது தயாரிக்கப்பட்டு அத்துடன் சாம்பார் மற்றும் தேங்காய் பூ சாம்பலுடன் (ரூ 20) பரிமாறப்பட்டிருந்தது. இதனுடைய சுவை வீட்டில் தயாரிப்பதற்கு ஒப்பீடாக அமைந்திருந்தது. உண்மையில் வணிகத்தில் பெண்கள் ஐ பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தோம் . தொழில்முனைவோர் சவால்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் சாதகமான மாற்றத்தை கொண்டுவருகின்றது என்பதில் ஐயமில்லை .  

எங்கள் பிரதான சைவ உணவு பற்றிய பார்வையில் பெலி பழத்தின் பூக்களால் செய்யப்பட்ட இயற்கை மூலிகை அடங்கிய பெலிமல் தேநீரை சுவைத்துக்கொள்ளவும் சில உள்ளூர் இனிப்பு வகையான உணவினையும் எடுத்து சைவ உணவை ஆராய்வதினை ஹெல பாஜுன் உடன் நிறைவு செய்ய முனைத்திருந்தோம். அவ் இனிப்பு வகைகள் அரிசிமா மற்றும் தேங்காய்ப்பால் மற்றும் பிற தாவர அடிப்படையிலான பொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருந்தது.  

நாங்கள் ஹெலா போஜூனை நேசித்தோம், உணவுக்காக மட்டுமல்ல, அது எதைக் குறிக்கிறது என்பதையும் அந்த இயற்கை நிரம்பிய சூழலில் அமைதியான ஒரு உணவளிக்கும் இடமாக எங்களுக்கு தென்பட்டது.    எங்கள் முழுமையான உணவுக்கான பெறுமதி வெறும்  ரூ .500 / க்கும் குறைவானதாக இருந்தது.. , மேலும் இறுக்கமான பட்ஜெட்டில் இருப்பவர்களுக்கு இது எவ்வளவு அற்புதமானது என்று கற்பனை செய்து பாருங்கள். அது நிச்சயமாக ஒரு சேவையாகும்.

சைவ அல்லது சைவ உணவினை உட்கொள்வது தொடர்பில் உண்மையில் நம் நாட்டில் கிடைக்க பெறுகின்ற வளங்களை நினைத்து நாம் அதிர்ஷ்டசாலிகளே என்பதை நினைவில் கொள்ள வைக்கின்றது. ஹெலா போஜூன் பாகம் இரண்டில், இந்த அற்புதமான நிறுவனத்தை நடத்தும் பெண்களுடன் ஈடுபட நாங்கள் திட்டமிட்டுள்ளோம், நிச்சயமாக அதிக உணவை பற்றிய விளக்கத்தினை பெற்று கொள்ளலலாம் என்பதில் எமக்கு அவ்வளவு நம்பிக்கை. 

இதற்கிடையில், ஹெலா போஜூன் பற்றிய உணவு மதிப்புரைகளை மேலும் வீடியோ வாயிலாக தெரிந்துகொள்வதற்கு எங்கள் சமூக ஊடகம் (FB page)  வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம். அடுத்த ஒரு சைவ உணவு பற்றிய விளக்கத்தை கொடுக்கும் வரைக்கும் உங்களிடம் இருந்து எங்கள் குழு விடைபெறுகின்றது.

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு