தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம் வீட்டில் இருந்து கொண்டே எமக்கு விரும்பிய உணவு வகைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இவ் உணவகமும் நடைமுறைப்படுத்துகிறது. (Online Order)

கிகு உணவகம் ஜப்பானிய செல்வாக்குடன் மேற்கத்திய உணவு வகைகளை வழங்குகின்றது. குறிப்பாக “உணவு மெனுவில்” வீகன் மற்றும் சைவ உணவு வகைகளின் விருப்பங்களும் அடங்கியுள்ளன. அத்துடன் ஓட்ஸ் உணவு மற்றும் பழச்சாறுகளையும் எம் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். அவை முறையே நீங்கள் “ஒவோ-லக்டோ” சைவ உணவுமுறையை கடைபிடிப்பவராக இருப்பின் முட்டையுடன் சேர்ந்த பல உணவு வகைகளும் அங்கே தயாரிக்கப்படுகின்றது.

தாவர அடிப்படையிலான உணவு வகைகளை கடைபிடிப்பவர்கள் சில உணவகங்களில் தமது உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிகு உணவகத்தில் தாவர அடிப்படையிலான உணவு வகைகளில் என்ன வகையான சேர்மானங்கள் உள்ளடக்கப்படுகின்றன என்பதை மெனுவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எமது விருப்பங்களை இலகுவாக கூறுவதற்கான வாய்ப்பை இங்கே காணமுடிகின்றது என்றே கூறலாம். 

நாங்கள் உணவினை தெரிவு செய்யும் பொருட்டு, காலை உணவை தவிர்த்து வேறு வகையான வீகன் உணவினை தெரிவுசெய்ய தயாரானோம். அவை முறையே “Vegan Sarvoury Waffle” ஐ தேர்ந்தெடுத்தோம். அவை எங்களுக்கு பரிமாறப்பட்டது. மிகவும் அடர்த்தி நிறைந்ததாக காணப்படாத போதிலும் அவை மென்மையானதாகவும் உணவினை உட்கொள்ளும் போது ஓர் ரசனையை தந்தது எனலாம். அவற்றுடன் உணவினை மேலும் அலங்கரிக்க வைக்கப்பட்ட மிருதுவான கொத்தமல்லி வகைகளும் எங்களுக்கு பிடித்திருந்தது.

மேலும் காளானில் (Mushroom) தயார் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது. அது மொறு மொறுப்பாக மிகவும் சுவையாக காணப்பட்டது. அவற்றுடன் சேர்த்து உட்க்கொள்வதற்காக வைக்கப்பட்ட “Vegan mayo mayo whip & Spicy teriyaki drip” போன்றவற்றையும் எமது குழு மிகவும் விரும்பியது. இனிப்பு மற்றும் உமாமி சுவை எமக்கு ஓர் சரி சமநிலையை உணர்த்தியது. இவ் உணவு வகை உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் இதனை சூடாக சாப்பிடுவதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். 

 உணவுக்கு பின் சாப்பிடும் இனிப்பு பண்டமாக “The vegan peanut butter brownie” ஐ தெரிவு செய்தார்கள். இது மிகவும் பார்ப்பதற்கு கருமையாகவும், உயர்தர வகையான உணவுகளில் ஒன்றாக தோற்றமளித்ததுடன் இவற்றை உட்க்கொள்ளும் போது அணியில் இருந்த எல்லோராலும் ரசனை பாராட்டப்பட்டது. இங்கே சாக்லேட் முதல் வேர்க்கடலை, வெண்ணெய் விகிதம் சரியாக இருப்பதை உணர்ந்து மீண்டும் அதனை பெற்றுக்கொள்ள ஒழுங்கு செய்தோம். அத்துடன் “ஓட் பாலை” (Oat milk) பற்றி குறிப்பிட விரும்புகின்றோம். இந்த தாவர அடிப்படையிலான பால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட நிலையில் விநியோகிக்கப்படுகின்றது. இது முற்றிலும் வீகன் உணவு முறையை கடைபிடிப்பவர்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை. இது பார்ப்பதற்கு தடிப்பற்ற நிலையில் காணப்பட்டாலும் இவற்றுள் ஓட்ஸ் நிறைந்த சத்துக்கள் காணப்படுகின்றன.

“MMSL” குழுவை சேர்ந்த நாங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் உணவகங்களை மென்மேலும் கவனிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இது இலங்கையில் மேலும் நட்புறவான வகையில் உணவக கலாச்சாரத்தை ஏற்படுத்தும் மாற்றத்தை கொண்டு வருகிறது.  

மொத்தத்தில், உணவகத்தின் சுற்றுப்புறத்தோடு உண்மையாக உணவை அனுபவிக்க வளாகத்தில் இருக்கும் கிகு ஒரு நீண்ட மதிப்பாய்வுக்கு தகுதியானது. இவ் உணவகத்தின் உட்புறத்தின் வர்ணனை பற்றி அதிகம் பேசப்படுகிறது மேலும் இந்த விருப்பத்துடன் மீண்டும் வேறு வகையான தாவர அடிப்படையிலான உணவு வகை முறைகளை தெரிவு செய்து மீளாய்வினை தொடர எங்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த நேரங்களை விரும்புகிறோம்.

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு