
தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]
நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம் வீட்டில் இருந்து கொண்டே எமக்கு விரும்பிய உணவு வகைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இவ் உணவகமும் நடைமுறைப்படுத்துகிறது. (Online Order) கிகு உணவகம் ஜப்பானிய செல்வாக்குடன் மேற்கத்திய உணவு வகைகளை வழங்குகின்றது. குறிப்பாக “உணவு மெனுவில்” வீகன் மற்றும் சைவ உணவு வகைகளின் விருப்பங்களும் அடங்கியுள்ளன. அத்துடன் ஓட்ஸ் உணவு மற்றும் பழச்சாறுகளையும் எம் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். அவை முறையே நீங்கள் “ஒவோ-லக்டோ” சைவ உணவுமுறையை கடைபிடிப்பவராக இருப்பின் முட்டையுடன் சேர்ந்த பல உணவு வகைகளும் அங்கே தயாரிக்கப்படுகின்றது. தாவர அடிப்படையிலான உணவு வகைகளை கடைபிடிப்பவர்கள் சில உணவகங்களில் தமது உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிகு உணவகத்தில் தாவர அடிப்படையிலான