ஸ்மோக்கீஸ் – த பிரௌனி பார்

ஸ்மோக்கீஸ் – த பிரௌனி பார்

நீங்கள் உங்களின் இனிப்பு சுவையை பூர்த்தி செய்வதற்கும் அத்துடன் கொடூரங்களில்லா முறையில் தயாரிக்கப்பட்ட சொக்களேற்றுக்களை சுவைப்பதற்கும் இல்லாவிடில் அதற்கும் மேலாக விசேடமாக சொக்கலேட் தெரிவுகளை சுவைப்பதற்கும் விரும்புவதாக இருந்தால் ஸ்மோக்கி சரியான இடமாக அமையும். பிரபலமான மரக்கறி உணவு ஆர்வலர் ஒருவரால் நடத்தப்பட்டு வரும் நிலையில் முற்றுமுழுதாக கொடூரமான முறையில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு உணவையோ அல்லது அசைவம் கலந்த உணவுகளையோ கொண்டிருக்காமல் முழுவதும் மரக்கறி உணவுகளை கொண்டதாக இது அமைவதுடன் அது நிலையான உற்பத்திகளை உறுதிப்படுத்தும் ஒரு இடமாக உள்ளது.  இங்கு விஜயம் செய்த மீட்லெஸ் மண்டே அமைப்பு அங்கு இருக்கும் உணவுகள் மற்றும் குடி பானங்களை சுவைப்பதற்கு விரும்பியிருந்தது. ஆனால் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் இங்கு அதிருப்தியை உணர்ந்திருக்கவில்லை.

பிரௌனீஸ் மற்றும் குடிபானங்கள்

 மீட்லெஸ் மண்டே அமைப்பு குழு அங்கிருக்கும் சொக்களேட்டுக்களில் வழமையான சில தெரிவுகளுக்கு சென்றிருந்த போதிலும் பீனட்டலா பிரௌணி அதிகளவான நிலக்கடலை மற்றும் நியூடெலாவினை கொண்டிருந்தது. அந்த பிரௌனிகள் சூடாக இருந்தது மிகவும் மெருதுவான முறையில் சுவையூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தது.

சொக்கலேட்  மற்றும் பீனட்டலா பிரௌனீஸ்

ஸ்மோக்கியின் குறியீடான குடிபானம் – பிரௌனீயின் விசேட குடிபானமான கலவை, அது உண்மையில் சரியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  உண்மையான ஒரு  பிரௌனி வடிவத்துக்கு பால் கலந்த தயாரிப்பாக அது இருந்ததுடன் அது அதற்குரிய உயர்ரக தரத்தினை கொண்டிருந்தது. இங்கே  பழங்களின் வகை தேனீர் பரிமாறப்படுகின்றன. பெரிகள் முதல் புதினா வரையிலும் டாக் சொக்களேட்டுக்களும் அங்கு காணப்படுகின்றன.

முக்கிய தரவுகள்

சகல மக்களும் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்பதில் ஸ்மோக்கிஸ் நிறுவனம் அக்கறையாக காணப்படுகின்றது ஏனென்றால் அவர்களின் சகல பொருட்களும் 400 ரூபாய்க்கு குறைவாக காணப்படுவதுடன் ஒரு சில தெரிவுகள் 150 முதல் 200 ரூபா வரையிலான விலைக்குள் உள்வாங்கப் படுகிறது. அத்துடன் கொழும்பின் எந்த பகுதிக்கும் இங்கிருக்கும் உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு சொக்கலேட் விரும்பியாக இருந்தால் அத்துடன் இரக்கமும் சூழலுக்கு உகந்ததுமான தயாரிப்புக்களை விரும்புவதாக இருந்தால் ஸ்மோக்கீஸ் பார் சரியான தெரிவாக இருக்கும்.

மௌன்ட்லவினியா ஹோட்டல்

இலங்கையில் முழுமையான மரக்கறி உணவினை வழங்கும் ஒரு முதலாவது ஹோட்டல் மௌன்ட்லவினியா ஹோட்டல் ஆகும். ஒவ்வொரு போயா தினத்தில் அங்கு முழுமையான மரக்கறி உணவு தொகுதியே பரிமாறப்படுகிறது. அது ரெஸ்டாரண்டில் வழங்கப்படும். அங்கு 100க்கும் அதிகமான மரக்கறி உணவு தெரிவுகள் உள்ளன. குறிப்பிட்ட வரையறை செய்யப்பட்ட விருந்தினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த உணவக தொகுதி தற்பொழுது மிகவும் விரும்பப்படும் ஒன்றாக மாறியுள்ளது. வாரத்தில் ஒரு தடவை மாதத்தில் ஒரு தடவை மரக்கறி உணவை நாடிச்செல்வதற்கு பொருத்தமான மையமாக மாறியுள்ளது. ஒரு போயா தினத்தில் மீட்லெஸ் மண்டே குழு அங்கு சென்று இருந்தது. அங்கு அவதானிக்கப்பட்ட விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.

இலங்கை உணவு வகைகள்

 மீட்லெஸ் மண்டே இலங்கை எப்பொழுதும் இலங்கை உணவுக்கு அடிமையாக இருக்கும் நிலையில் அவற்றினை கொடூரங்களற்ற வகையில் ஆரோக்கியமான வழியில் பெறுவதற்கு விரும்புகிறது. மரக்கறி உணவு பல்வேறு இலங்கை மரக்கறி வகைகளை இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட அரிசி வகைகளை கொண்டதாக அமைந்துள்ளது. கீரை வகைகளும் அங்கு பரவலாக காணப்படுகின்றன.  பல் வேறு தெரிவுகள் காணப்பட்டாலும் நமது தெரிவாக தெரு கீரை இருந்தது. அதில் நீரிழிவு நோய்க்கு எதிரான மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன.

நமது உயர் தெரிவுகளாக மரமுந்திரிகை மற்றும் திபத்து வறுவல் ஈரபலாக்காய் கறி ஆகியவை இருந்தன. இவை அனைத்தும் மிகவும் சுவையாக மசாலாக்கள் கலக்கப்பட்டு அதிக காரமின்றி தயாரிக்கப்பட்டிருந்தது. அதிகளவான மசாலா சுவைகளை உட்கொள்ள விரும்பாதவர்களும் அதனை உண்ண முடியும். உண்மையில் அது சகலருக்குமான ஒரு தெரிவாக இருந்தது. பலாக்காய் கறி இலங்கையின் மிகவும் பிரபலமான ஒரு கறியாகும். அதனை இந்த ஹோட்டலில் போயா தினத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மீட்லெஸ் மண்டே இந்த இரண்டு உணவு வகைகளையும் பரிந்துரை செய்கின்றது அதாவது இலங்கையில் இவ்வாறான மரக்கறி உணவுகளை பெற விரும்புவோர் அதனை தெரிவு செய்ய முடியும்.

பச்சை காய்கறி மற்றும் ஆரம்ப உணவுகள்

இங்கு வைக்கப்பட்டிருந்த பச்சை காய்கறி உணவுகளை கண்டு நாம் வியந்தோம். அது பல்வேறு வகைகளில் காணப்பட்டிருந்தன. நீங்கள் ஆரோக்கியமான பச்சை காய்கறிகளை அங்கு பெற்றுக்கொள்ள முடியும். நிச்சயமாக அது உங்களுக்கானது. அதற்கு மேலதிகமாக குறித்த பச்சைக் காய்கறி கலவை தொகுதி பல்வேறு மரக்கறி தெரிவுகளை கொண்டிருந்த அதேவேளை மருத்துவ ரீதியான மரக்கறி வகைகள் இலைகள் போன்றவையும் காணப்பட்டன. ப்ரோக்கோலி முதல் சவ்சவ் வரை ஆன மரக்கறிகளும் பீட்ரூட் முதல் ஹமாஸ் மற்றும் தண்டிழா, இனிப்பு உருளைக்கிழங்கு, பலவகை கலவைகள் பூசணிக்காய்,முதல்  சிவப்பு கோவா போன்ற பல்வேறு அம்சங்களுடன் சுவைமிகு தெரிவுகள் காணப்பட்டன.

மீட்லெஸ்மண்டே குழு  பூசணி மற்றும் காளான் கலவையை முதலாவது தெரிவாக கொண்டதுடன் மிளகாய் அன்னாசி கலந்த உணவும் அதேபோல உருளைக்கிழங்கு கலவையும் சிறப்பானதாக இருந்தது, (புளி மாம்பழம் கொடித்தோடை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கலவைகள்).  இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த உணவு வகைகளை நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் இழக்கக் கூடாது.  இவற்றுள் மிகவும் பிரபலமான தெரிவாக கொடித்தோடை  உணவுத் தொகுதி இருந்ததுடன் மிகவும் கடுமையானதாக அது இருந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் நன்றாக கலக்கப்பட்ட இனிப்பு பழ வகைகள் மற்றும் இலங்கை மசாலாக்கள் மேலதிக சுவையை தருவதாக அமைந்திருந்தன.

பழவகை உணவுகள்

மரக்கறி உணவுகள் காணப்பட்ட உணவு தொகுதியில்  அதாவது உண்மையில் இந்த விடயம் மரக்கறி உணவுகளை விரும்புவர்களது கனவு பலித்து இருப்பதாகவே எண்ண முடியும். கிட்டத்தட்ட 30 வகையான பழவகை உணவுகள் சகலருக்கும் இங்கு தெரிவாக வழங்கப்பட்டிருந்தது. சொக்லேட் விரும்புபவர்களுக்கு சொக்லெட் புட்டிங் காணப்பட்டது. அதேநேரம் பல்வேறு கேக் வகைகளும் காணப்பட்டன ஃபாரஸ்ட் கேக் அல்லது சொக்லேட் கேக் இருந்தது. மௌண்ட்லவினியா ஹோட்டலில் பயன்படுத்தப்படும் சொக்லேட் உள்ளூரில் கொடூரமற்ற உற்பத்திகள்  மூலம் தயாரிக்கப்பட்டதாகும். அத்துடன் அன்னாசி கலவை பழக்கலவை  ஆகியவையும் அங்கு இருந்தன.

 ஏனைய தெரிவுகள்

ஏனைய குறிப்பிடத்தக்க உணவு பிரிவுகளாக இனிப்பு சோழ வறுவல் அன்னாசி வறுவல், சோறு பாஸ்தா தர்பூசணி மற்றும் வெள்ளரி கலந்த உணவு வகைகள் ஆகியவையும் அங்கு காணப்பட்டிருந்தன

முக்கிய தரவுகள்

இந்த உணவுத் தொகுதி தெரிவு ஒன்று 2000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தில் ஒரு தடவை போயா தினத்தில் இதனை பெறமுடியும் இருந்தபோதிலும் நீங்கள் நாளாந்த அடிப்படையில் மரக்கறிகள் அடங்கிய கொடூரங்கள் அற்ற உணவு உற்பத்திப் பொருட்களுடன் உணவுகளை இந்த ஹோட்டலின் உணவுப் பட்டியலில் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும். அந்த உணவுகள் கவர்னர் ரெஸ்டாரண்டில் பரிமாறப்படும் முன்னரே ஒரு மேசையை ஒதுக்கீடு செய்து செல்வது சிறந்ததாக இருக்கும். குறித்த உணவுக்கு அதிக கேள்வி காணப்படும் நிலையில் பெருமளவான நாட்களில் முழுவதுமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீட்லெஸ் மண்டே திட்டம் மௌண்ட்லவினியா ஹோட்டலில் போயா தினத்தில் வழங்கப்படும் இந்த மரக்கறி உணவு சுய தெரிவு முறைமையை சகல உணவு விரும்பிகளுக்கும் பரிந்துரை செய்கின்றது. முதலாவதாக மரக்கறி உணவுகளை நோக்கி செல்ல விரும்பும் ஒருவர் இந்த சுய தெரிவினை நாடிச்செல்வது மிகவும் சரியானதாக இருக்கும் எனநாம் நினைக்கின்றோம்.  அங்கு பல்வேறு தெரிவுகளை அவர்கள் தமது விருப்ப உணவுகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும் ஏற்கனவே கொடூரங்கள் இல்லாத வகையிலும் மரக்கறி உணவை உட்கொண்டு வருபவர்கள் பல்வேறு தெரிவுகளுடனான சுய உணவு தெரிவு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு இந்த சுய உணவு தொகுதியை தெரிவு செய்வது மிகவும் பொருத்தமான விடயமாக இருக்கும் அதே நேரம் மௌண்ட்லவினியா ஹோட்டல் ஒரு சிறந்த நிறுத்தமாக உள்ளது.

குயிக் தாய்

குயிக் தாய்

மீட்லெஸ்மண்டே குழுவினர் தமது மதிய உணவினை பெற்றுக் கொள்வதற்காக சிறந்த இடம் ஒன்றினை தேடியபோது குயிக்தாய் அவர்களின் தெரிவாக இருந்தது. கொழும்பில் அமைந்திருக்கும் மெயிட்லான்ட் பிளேசில் அது உள்ளது. அது ஒரு ரெஸ்டாரன்ட் என்பதுடன் தாய்லாந்து  உணவுகளை குறிப்பாக அதிர்ச்சி தரும் வகையில் பலவகையான மரக்கறி உணவுகளை வழங்கும் ஒரு இடமாகும்.

உணவுகளும் குடி பானங்களும்

உணவகத்தில் எமது மீட்லெஸ் மண்டே திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக நாம் பொரித்த பீன் தயிர் மற்றும் காளான் ஆகியவற்றை ஆரம்பத்தில் ஓடர் செய்திருந்தோம். அந்த பட்டர் கலந்த காளான் பொரியல் மிகவும் சிறப்பான வகையில் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு  உணவுகளுடன் இணைக்கப்பட்டிருந்தது.  அதேநேரம்  அந்த உணவானது மிகவும் ஆழமாக பொரிக்கப்பட்ட அதேநேரம் பட்டர் மற்றும் மிளகாய் வெள்ளைப் பூடு தக்காளி சோஸ் கலக்கப்பட்டு மிகவும் அழகாக காணப்பட்டது. அதேநேரம் பொரிக்கப்பட்ட அந்த உணவும் மிளகாய் வெள்ளைப்பூடு சோசுடன்  சுவையாக காணப்பட்டது.

பிரதான உணவாக நாம் மரக்கறி பிரைட் ரைஸ் ஒன்றிற்கு ஆடர் செய்திருந்தோம் உண்மையில் அசைவம் இல்லாத திங்கள் செய்தியுடன் இணைந்திருப்பதாக அந்த முடிவு எடுக்கப்பட்டது அத்துடன் காளான் (675 ரூபா) மேலும் வெள்ளைப் பூடு கலந்த கங்குன் (725 ரூபா) போன்றவை ஆடர் செய்யப்பட்டிருந்தன.  இந்த உணவுகளின் அளவானது இரண்டு அல்லது மூன்று பேருக்கு போதுமானதாக இருந்தது. ஆனாலும் அது ஒவ்வொருவரினதும் அளவினை அடிப்படையாகவே கொண்டு தீர்மானிக்க முடியும். சோறு சரியான வகையில் ஈரலிப்பாகவும் தேவையான அளவில் மசாலாக்களை கொண்டதாகவும் இருந்ததால் மேலதிகமாக சுவையூட்டுவதற்கு எதனையும் சேர்க்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. காளான் வகைகள் மாற்று வழியில் சிந்திப்பதற்கு வழிவகுத்தது. எம்மைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த தெரிவாகவே இருந்தது. இந்த கறியானது சகல மசாலாக்களையும் சரியான முறையில் கொண்டதாக அமைந்தது. தேங்காய் பால் இதற்கு மிகவும் பொருத்தமானதாக காணப்பட்டது. மேலும் இந்தக் கறியானது பிரைட் ரைஸ்  உணவுக்கு மிகவும் சரியான தெரிவாகவே இருந்தது என்பதனை நம்மால் உணர முடிந்தது. அதேபோல கீரை வரவேற்கத்தக்க தெரிவாக இருந்த அதேவேளை நன்றாக சமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது.

 இங்கு பலவகையான குடிபானங்கள் காணப்படுகின்றன. உடன்குடி பானங்கள் முதல்  குளிர்ந்த தேநீர் வரையில் பல பிரிவுகள் காணப்பட்டன. எண்ணைத் தன்மை உடைய இந்த உணவுகள் அனைத்தையும் உட்கொண்ட பின்னர் அந்த கொழுப்புத் தன்மையை நீக்குவதற்காக நாம் கிரீன் டீ ஒன்றுக்கு ஆர்டர் செய்திருந்தோம் அது உண்மையில் அசைவம் இல்லாத திங்கள் உணவுக்கு புத்துணர்ச்சி தரும் முடிவாக இருந்தது.

முடிவு

இந்த உணவின் பின்னர் நாம் மிகவும் மகிழ்வாக இருந்தோம். இந்த சூழல் மிகவும் அமைதியான சூழலாக காணப்பட்டதுடன் போதிய இடத்தினை கொண்டதாகவும் அமைந்திருந்தது. மேலும் இயற்கை ஒளி உள் வருவதற்கான சாத்தியங்களும் அதிகளவில் காணப்பட்டன. உண்மையில் இந்த தாய் உணவகத்தின் சிறப்பு பற்றி கூறுவதாக இருந்தால் சகல விடயங்களையும் கூறமுடியும். மரத்திலான தளபாடங்கள் மூங்கிலாலான மேசை விரிப்புகள் மிகவும் கவர்ச்சிகரமான இருந்தது அதேநேரம் குறித்த உணவகத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர் ஏனெனில் அந்த உணவுகள் சுவையானதாகவும் திருப்திகரமானதாகவும் அமைந்தன.