இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. 

இவ் இரசாயனம் கலந்த பொருட்களிலிருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் அமைப்பு முறைகளில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. குறிப்பாக சுவாச அமைப்பு பாதிக்கப்படுவதை எடுத்து காட்டலாம். மேலும் மனித சமூகங்களுக்கும் பல நோய்கள் பரவுவதற்கும் ஒரு நெருக்கமான காரணமாக இருக்கின்றது. உலக சுகாதார அமைப்பால் (WHO) வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டின் அறிக்கையில் ” இலங்கையில் தினமும் சுமார் 80 நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீங்கு விளைவிக்கும் நச்சுப்பதாரத்தங்களை  கொண்ட தயாரிப்புக்கள் நுகர்வோர்களின் இலக்கு மற்றும் பார்வையாளர்களை கையாள ஆக்கபூர்வமான சொற்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்படுகின்றது. எல்லோரும் அறிந்த விடயம், பூமியானது பல ஆபத்துக்களை சந்தித்து வருகிறது. எனவே அனைத்து உயிரினங்களின் இருப்புக்காகவும் அவற்றை பாதுகாப்பதற்காகவும், நிலைபேறான ஓர் நிலையை ஏற்படுத்துவதற்காகவும் எமது பொறுப்பு காணப்படுகிறது. இது எங்களின் தருணம் என உணர்ந்து எதிர்கால ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். 

விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புக்களை எவ்வாறு நிவர்த்திசெய்தல் ?

நெல் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை என்பது இலங்கையில் பழமையான காலத்தில் இருந்து பரவலாக பயன்படுத்தப்படும் பிரபலமான விவசாய முறைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. நெற்பயிர்ச்செய்கை அதன் உணவு , பிணைப்புக்கள் மற்றும் அதன் கலைவடிவங்களில் இணைந்துள்ள ஒரு தேசமாக உள்ளது. ஆனால், தற்போது எமது நாடு ஒரு மனநிறைவுடன் இருக்க முடியாது என்றே கூறலாம். 

குறைந்த செலவில் தரம் மற்றும் விளைச்சல் இரண்டிலும் அதிகமாக இருக்கும் அறுவடை முறையை மரபுரிமையாக கொண்டிருக்கும் செயல் பற்றி ஒரு சேதன/ இயற்கை சார் விவசாயியாக நான் பெற்ற 6 வருட கால அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நெற் பயிர்ச்செய்கை

முக்கியமாக, எந்தவொரு பயிரையும் பயிரிடும் போது மண்ணினுடைய தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும். இது வளமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் பயிர்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் நோய்க்கட்டுப்பாடு தொடர்பான தீர்வுகளை சுற்றியுள்ள சூழலை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். 

அத்துடன் மண்ணின் பாதுகாப்பு , நன்னீர் முகாமைத்துவம் மற்றும் நன்மை பயக்கும் உயிரினங்களின் வளர்ச்சி குறித்தும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு தாவர நோய்களைக்  கட்டுப்படுத்தவும் உயிரினங்கள் நன்மை பயக்கின்றன. அதேநேரத்தில் களைகள் போன்ற்வற்றை கட்டுப்படுத்த இயந்திர தீர்வுகள் காணப்படுகின்றது. மேலும் இலங்கையின் பாரம்பரிய நாற்றுக்களை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகள் உள்ளன என்பதையும் எனது சொந்த அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளேன். இவ் சாதகமான விடயங்களில் ஆரோக்கியமான மற்றும் விரிவான வேர்கட்டமைப்பு, புதர்களின் வளர்ச்சி, அறுவடையின் விளைச்சல் மற்றும் உயரம் அதிகரிப்பு போன்றவையும் உள்ளடங்குகின்றது.

மண்ணிற்கு உரமிடுதல் 

  • அறுவடைக்கு பின்பு மிகுதியாக காணப்படும் உலர்ந்த நெல் செடிகளுக்கு தீ வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது மண் அரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும் , மண்ணின் வரட்சியை குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் நுண்ணிய உயிரினங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலையும் உருவாக்குகின்றது. 
  • மண்ணை உழுவதற்கு முன் “Mee trees (Mousey me), Karanda (Indian Beech),Giniseeriya (Gliricidia), Nika, Wild Sunflower “ ஆகியவற்றின்  இலைகளை வயலில் சேர்க்கவும். இது மண்ணில் அடங்கியுள்ள உப்பு மற்றும் பயிர்களுக்கு பாதகம் விளைவிக்கும் நோய்களை கட்டுப்படுத்தி  சமநிலைப்படுத்துகிறது.
  • பயறு வகைகளை முன்கூட்டியே பயிரிடுதல்.
  • வெளிப்புறத்தில் காணப்படும் நீர் போன்றவை வயலுக்கு உள்ளே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • முதற் கட்டத்தில்,  நீர் மட்டம் குறைவாக காணப்படும் நிலையிலே உழவை/உழுதலை மேற்கொள்ளவேண்டும் . அதன் பிறகு  வைக்கோல், உரம், இலைகள் மற்றும் கிளிரிசிடியா (Gliricidia)  இலைகளை நிரப்பி மண்ணை உரமாக்க வேண்டும். இவ் நிலையில் மண்ணில் அடங்கியுள்ள உப்பை சமப்படுத்த “நெல் உமி  மற்றும் நிலக்கரி” பயன்படுத்தப்படுகின்றது.
  •  இவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில் நாற்றை நாட்டுவதற்கு  மண் தயாராக உள்ளது எனலாம். இவ் புத்துயிர் பெற்ற ஆரோக்கியமான மண் இப்போது வளர்ச்சியை ஊக்குவிக்க நாற்றுகளை சிறப்பாக வளர்த்து பாதுகாக்க தயாராக உள்ளது. 

இவ்வாறு இருப்பினும், கூடுதல் செலவில் நச்சுநிறைந்த இரசாயன பொருட்களை மண்ணில் பயிர் செய்வதற்கு சேர்க்கப்படுவதனால் மேற்கூறிய இயற்கை செயன்முறைகள் பின்னடைந்து பூமியை பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக போராடும் சுற்றுச்சூழல் அமைப்பில் “வளம் குறைந்த மண் மற்றும் ஆரோக்கியமற்ற பயன்பாடுகள்” தோற்றுவிக்கப்படுகின்றன. 

நெல்லில் மூன்று முக்கிய நிலைகள் உள்ளன. அவையாவன.

  • அடைகாக்கும் காலம் –  0/35 நாட்கள்
  • இனப்பெருக்க காலம் –  35/70 நாட்கள்
  • முறையான பருவ நிலைக்கு வரும் காலம் (வளர்ச்சி நிலை ) – 70/90 நாட்கள்

ஆரோக்கியமான மண்ணில் நன்றாக வளரும் ஒரு பயிர் எந்த நேரத்திலும் பூச்சியால் பாதிக்கப்படலாம். இவ் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை விரட்டும் தீர்வானது விலங்குகளின் மூலம் காணப்படுகிறது. விவசாய இரசாயன பொருட்களின் பயன்பாடு என்பது இயற்கையை அடிப்படையாக கொண்ட தீர்வுகளின் மத்தியில் ஓர் வெளிப்படையாகத் தெரியாத ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.

பயிர் அறுவடை செய்யத் தயாராக இருக்கும்போது, நெற் செதில்கள் (paddy flakes) காலையில் கவர்ந்து இயற்கையின் ஆசீர்வாதங்களைப் பெறுவது போல,  இவ் முக்கியமான நேரத்தில் விவசாயி இரசாயனங்களை தெளிக்கும் போது, நச்சுபதார்த்தம் நெற்கதிர்களில் சிக்கி, அறுவடையின் தரத்தை குறைகின்றது.

மேலும், இரசாயன பொருட்களின் பயன்பாடு மண்ணின் தரம், உயிர்பல்வகைத்தன்மை மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றைக் கொன்று விளைச்சலைக் குறைக்கும் சந்தர்ப்பத்தையும் தோற்றுவிக்கின்றது. சேதன விவசாய முறையானது  இயற்கையை அடிப்படையான மற்றும் சூழலுக்கு நட்புறவான ஓர் முறையாக காணப்படுவதால் தீங்கினை நிவர்த்திசெய்கிறது.

நாம் இயற்கையை பாதுகாக்கும் வகையிலான விவசாய முறையை பழக்கப்படுத்திக்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். நாம் முன்னோர்களுக்கு மற்றும் விவசாயத்தில் இணைந்த நுகர்வோர்களுக்கு பல ஆண்டுகளாக நாம் தெரிந்தோ தெரியாமலோ இரசாயன நச்சுபதார்த்தங்களை அளித்திருக்கிறோமா? இயற்கையினுள் எமது தீர்வுகளை சிந்திக்கும் தருணம் இது ! எம்மால்  மாற்றலாம், மற்றும் சூழல் நடப்புறவை பேணும் இயற்கை சார்ந்த விவசாய கட்டமைப்பை வளர்ப்போம். ஏனெனில், இயற்கையின் விதிகளுக்கு அப்பால் எதுவும் இல்லை.