வெசாக் என்பது ஒரு மத மற்றும் கலாச்சார விழாவாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் வைகாசி மாதத்தில் முழு பௌர்ணமி நாளில் பௌத்த மதத்தினரால் அனுஷ்ட்டிக்கப்படுகிறது . இவ் தினம் ஆனது கவுதம புத்தரின் ஜனனம் , ஞானம் , முத்தி நிலைக்கு செல்வதை நினைவு கூறுகின்றது. சிறப்பாக இறை புத்தர் தனது காலத்தில் பிரசகித்த நல்வாழ்வு மற்றும் நல்ல நடைமுறைகளை எடுத்துயம்புகின்றது. இவ் தினம் ஆனது இலங்கையில் மட்டும் அல்லாது சிங்கப்பூர் , தாய்வான் , இந்தியா , யப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இவ் போயா  நாளில் இலங்கையில் பௌத்த சமயத்தவர்களின் வீடுகளில் மற்றும் தெருக்களில் வெசாக் கூடு என்று அழைக்கப்படும் வெசாக் விளக்குகள் ஏற்றப்படுகின்றது.  “ Dhamma “  புத்தரின் நினைவுக்கு ஒரு பிரசாதத்தை இவ் விளக்குகள் குறிக்கின்றன . பண்டைய காலங்களில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன . அதனை தொடர்ந்து வர்ணமயமான விளக்குகள்  வடிவங்களில் செய்யப்படடன.   பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பௌத்த மதத்தினரின் வாழ்வில் ஓர் தூய்மையை பிரதிபலிக்கும் வெண்மையான ஆடையும் பார்ப்பதற்கு சமாதானத்தை எல்லோர் மனதிலும் இறை புத்தர் வடிவில் நிலை பெற செய்யும் என்பதில் உறுதியானது. 

சிறப்பாக இவ் வெசாக் தினத்தின் போது நன்கொடைகள் , யாத்திரைகள் மற்றும் கிராம புறங்களில் இருந்து நகரங்களுக்கு பார்வையிடும் ஒரு பருவத்தை குறிக்கின்றது. மேலும் இவ் தினத்தில் தன்சல் வழங்குவது மிகவும் ஆத்மார்த்தமான புத்தபெருமானிற்கான கடமை என நினைவுபடுத்துகிறார்கள். தன்சல் என்பது உணவு , பானங்கள் , மற்றும் இனிப்புடன் கூடிய ஸ்டால்கள் ஆகும். இது தெருக்களில் அழகான கூடாரங்களை கொண்டு வடிவமைத்த மக்களிற்கு அவர்களது அன்பை பகிர்ந்துகொள்வதற்கும் அவ் உணவுகளை அவர்களுக்கு வழங்குவதாகவும் இது காணப்படுகிறது. பெரும்பாலான தன்சால் மாலையில் திறக்கப்படுகிறது, மக்கள் வெசாக் அலங்காரங்களைக் காண பயணிக்கும்போது அவர்களுக்கு உணவை பரிசளிப்பதாகவும் இது அமைகின்றது எனலாம் .

ஸ்டால்களில் பலவகையான சைவஉணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அட்டவணைகள் மற்றும் நாற்காலிகள் கொண்ட ஒரு மூடப்பட்ட இடத்தில் அரிசி மற்றும் கறியின் முழு உணவு, அல்லது வேகவைத்த பயறு அல்லது வேர் காய்கறிகளின் சிற்றுண்டி உணவு ஆகியவை மிகவும் பொதுவானவை. ஐஸ்கிரீம்  மற்றும் தேநீர்  பானங்கள் சாலையோரங்களால் வழங்கப்படுகின்றன. “தன்சலில் உணவை உட்கொள்வது என்ற கருத்து இனி ஏழைகளுக்கோ அல்லது பயணிகளுக்கோ கட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் மக்கள் மற்றும் சமூகங்களின் அனைத்து குறுக்கு பிரிவுகளுக்கும் திறந்திருக்கும்” என்பதை பல இலங்கை கல்வியலாளர்கள் கூறியுள்ளனர்.

இங்கே இவ் இரண்டு மத நாட்களில் உணவானது பொதுவாக நன்கொடையாக இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் சுகாதார சேவை திணைக்களம் தமது சேவையில் எவ்வகையான சுத்தமான உணவுகள் மக்களிற்கு சென்றடைகின்றது என்பதை உறுதியளிப்பதில் அவர்களது கடமையை செய்வதிலும் பாராட்டப்பட வேண்டியது.

இத்தகைய சிறப்பு மிக்க தினத்தை இன்றைய ஆண்டு மிகுந்த சமூக இடைவெளியை பேணுவதனுடன் நாம் செயற்பட வேண்டிய காலமாக  உள்ளது. “ COVID 19 “ எனும் தொற்று நோயினால் இன்றைய நாளில் தன்சல் ஐ மேற்கொள்ளமுடியாது. ஆனால் அவ் நன்கொடைகள் எதோ ஒரு வடிவத்தில் வறிய மக்களையும்  இவ் நோயால்  இடர்களை நோக்கும் சமூகத்துக்கும் எங்களான பங்களிப்பை வேறு வழிகளில் மேற்கொள்ள முடியும் என்பதில் அச்சமில்லை. இதனை இங்கு பலர் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நாம் நம்புகிறோம். அவர்களுக்கான பண உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அன்பளிப்பு செய்தல் மற்றும் பிற அன்பான செயல்கள் இவ் வெசாக் தினத்தில் மக்களுக்கான  ஓர் வேறுபட்ட  தன்சல் ஆக காணப்படும்.  ஒரு எதிர்கால சுபீட்ச்சத்தை எம் நாட்டில் எல்லோர் மத்தியிலும்  நோயின்றி கொண்டுவரும் என்ற பிரார்த்தனைகளை சிறப்பான இவ் புனித நாளில்  பிரார்த்திப்போமாக!