இந்த உணவகம் கொழும்பில் அமைந்திருக்கும் ரேஸ் ஹவுஸ் தொகுதியில் மூன்றாம் மாடியில் காணப்படுகிறது. அதற்கு அருகில் உடற்பயிற்சி கூடம் உள்ளது. இங்கே ஆரோக்கியமானதும் நிலையானதுமான வாழ்க்கை வடிவங்களை இலக்கு வைத்து உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் ஆரோக்கியமான உணவுகளை சுவையாக வழங்குவதும் இந்த உணவகத்தின் இலக்காக அமைந்துள்ளது. வெண்ணெய் கேக் சொக்கலேட் பிஸ்கட்டுகள் ஆகியவற்றுக்கு மாற்றாக பல பிரிவுகள் இங்கு காணப்படுகின்றன. அவை அனைத்தும் எதிர்மறையான வாய்ப்புக்களை கொண்டிருக்கவில்லை என்பது முக்கியத்துவமானது. இந்த உணவகம் ஆரோக்கியமான உணவினை வழங்கும் ஒரு கட்டமாக சனிக்கிழமைகளில் நடைபெறும் குட் மார்க்கட் நிகழ்வில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு அவர்கள் பல்வேறு உணவுகளை வழங்கியிருந்தார்கள் குறிப்பாக பீநட் மற்றும் ஸ்கோபியோ உருண்டைகள் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் மாதுளை ஜாம்  தேங்காய்பேஸ்ட்  வால்நட் மற்றும் கிரனொலா ஆகியவை மூலம் தயாரிக்கப்படுகிறது. குட் மார்க்கெட் தொகுதியில் வெற்றிகரமாக இயக்கியதை தொடர்ந்து அந்த நிறுவனம் தற்பொழுது தமது சொந்த கடையினை அமைக்க முடிந்துள்ளது. இதன் உணவுப் பட்டியலில் ஆரோக்கியமான காலை உணவு வகைகள் மற்றும் மதிய உணவு இரவு உணவு ஆகியவையும் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த உணவகம் குணதிலக மற்றும் டில்ஷான் பஸ்நாயக்க ஆகியோரால் நடத்தப்படுகிறது.  ருஷினி மிகவும்  மரக்கறி உணவுகளை உட்கொண்டு வரும் ஒருவர். கொழும்பில் இருக்கும் உணவகங்கள் மரக்கறி உணவுகளுக்கான சரியான தெரிவுகளை கொண்டிருக்காத நிலையில் தனது கணவருடன் இணைந்து ஒரு உணவகத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருந்தார். கொழும்பு வீதிகளில் பல உணவகங்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இவர்கள் தமது உணவகத்தையும் ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் குறித்த உணவுப் பொருட்களில் காணப்படும் உள்ளீடுகளை மிகவும் வெளிப்படையாக கூறுவதுடன் கலோரிப் பெறுமானம் நல்ல கொழுப்பின் அளவு காபோஹைதரேட் புரதத்தின் அளவு உட்பட சகல விடயங்களையும் தமது உணவுப் பட்டியலில் உள்வாங்கியுள்ளனர்

உணவுகளும் குடிபானங்களும்

 இந்த உணவகம் தமது இலக்கினை அடையும் வகையில் ஆரோக்கியமானதும் சுவையானதுமான உணவுகளை தயாரிக்கின்றது. சகல இலங்கையர்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் அவை காணப்படுகின்றன. சகல உணவுகளுக்கும் அளவுகளும் விலைகளும் வழங்கப்பட்டுள்ளன. குடிபானங்கள் அதாவது பெரி பழவகைகளின் கலப்பு கொக்கோ இளநீர் மற்றும் கொடித்தோடை எலக்ட்ரோலைட் மீ, (இளநீர் தேசிக்காய் மற்றும் புதினா ஆகியவற்றின் கலப்பு) உட்பட பல்வேறு குளிர்பானங்கள் உடன் இங்கு இருக்கும் உணவுகள் உண்ண முடியும் .

இந்த உணவகத்தின் குறியீடாக மரக்கறி சாண்ட்விச் காணப்படுகிறது. தொபு, ஹமஸ், வெங்காய சட்னி, வீட்டில் செய்யப்பட்ட மாதுளை ஜாம் போன்றவற்றை கொண்டதாக அது அமைந்துள்ளது. இதன் விலை 450 ரூபா.

மரக்கறி உணவுகள் நொறுக்குத் தீனிகளையும் கொண்டிருக்கின்றன கொக்கோனட் எனப்படும் உணவானது கிரனோலா, மாதுளை ஜாம் ஆகியவற்றை  கொண்டவை.   இது போன்றவை அங்கு காணப்படுகின்றன இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் குட் மார்க்கெட் நடத்தப்படும்போது இந்த நிறுவனத்தினை அணுக முடியும். ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு அவர்கள் தமது உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றனர்

அதன் இரண்டாவது கிளை நவலோக மருத்துவமனைக்கு அருகில் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் சிலோன் குரஸ்பிட்டில் திறக்கப்பட்டுள்ளது. இங்கே முன்னரே உணவுகள் ஓடர் செய்யப்படவேண்டும். அதன் மூலம் அவர்கள் துரிதமாக உணவினை தயாரித்து வழங்க முடியும். இந்த நிலையில் கொடூரங்களை உற்பத்திகள் மூலமான தயாரிப்புகள் மூலம் கிடைக்கப்பெறும்இந்த உணவகத்திற்கு நீங்களும் ஒரு தடவை செல்ல வேண்டும் என மீட்லெஸ்மண்டே பரிந்துரை செய்கிறது.