சிலிக்கான் ட்ரஸ்ட் மற்றும் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் சிந்தனை மிக்க உணவு தொடர்பாக ஹியூமானே சொசைட்டி இன்ரர்நஷனல் அமைப்பல், வியட்நாம் ஜியா அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர். இந்த கருத்தரங்கு வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருக்கும் புத்த நிலையத்தில் நடத்தப்பட்டது. அந்த மாலை நிகழ்வில் பூட்டானின் கெம்போ வென்ஷுக் தேரர், இவர் பூட்டானில் ஜான்சன் திங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்திருந்தார், ஹியூமானே சொசைட்டி இன்ரர்நஷனல் மற்றும் பண்ணை விலங்குகள் ஆசிய பசுபிக் திட்டத்தின் முகாமையாளர் ரொபேட் லூசியஸ், ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிலிகான் ட்ரஸ்ட் நிறுவனத்தின் கவிந்து எதிரிசிங்க,  திட்டம் தொடர்பாக சமர்ப்பணம் செய்திருந்தார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர், கலோரி பெறுமானங்களை உடைய தாவர உணவுகள் கொட்டப்படுவது குறித்தும் அவற்றினை உணவுக்காக மரபணுரீதியாக உருவாக்கப்படும் விலங்குகளுக்கு வழங்கப்படுவது தொடர்பாகவும் தெரிவித்திருந்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் சரியான முறையில் உணவினை பெற்றுக்கொள்வதால் வெளியேற்றம் வெகுவாக

குறைவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இறைச்சி உணவினை கைவிடுவதால் அந்த உற்பத்தி குறைவடையும் போது வெளியேற்றங்கள் குறைவதற்கான சாத்தியங்களும் உள்ளன. அத்துடன் அணுகுமுறை ரீதியான மாற்றங்களையும் மக்கள் முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளது. உறுதியான வாழ்க்கை முறையினை பின்பற்றுவதன் மூலம் நஞ்சற்ற விவசாய கட்டமைப்புகள் மூலமும் ஆரோக்கியமான சூழல் ஒன்றினை உருவாக்க முடியும். அத்துடன் 2009ஆம் ஆண்டில் இலங்கையில் தனிநபர் சட்டம் ஒன்று மூலமாக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ரத்னதேரர் வழிவகுத்திருந்தார்

இந்தக் கருத்தரங்கம் சிலிக்கான் ட்ரஸ்ட்டுக்கு மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. சிலிக்கான் ட்ரஸ்ட் நிறுவனத்தால் அண்மையில் உருவாக்கப்பட்ட அசைவ வகைகள் நிகழ்ச்சித்திட்டத்தை  சரியான முறையில் முன்னெடுப்பதற்கு அதிக உள்ளீடுகளை இது வழங்கியது. மிற்லெஸ் மண்டே திட்டங்களில் எவ்வாறு ஏனைய நாடுகள் செய்யப்படுகின்றன என்பதனை அறிந்து கொள்வது மிகவும் விருப்பமான விடயமாக இருந்தது. இது இலங்கையில் மிகவும் புதிதான ஒன்று ஆனால் இந்த கருத்தரங்கின் மூலமாக வெற்றியினை பெற முடியும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும்

இல்லை, எதிர்வரும் நாட்களில் அது சாத்தியமாகும் என்ன கவிந்து கூறுகிறார்.

இந்த நிகழ்வில்கலந்துகொண்டிருந்த பேச்சாளர்களால், அடிப்படையில் பௌத்தம் மற்றும் சூழல் பாதுகாப்பு புத்தரின் சிந்தனைகள் மற்றும் அவரது சூழலுக்கு இசைவான வாழ்க்கை வடிவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், மனிதர்கள் நமது பூமி சூரியன் பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு முதலில் முக்கியத்துவத்தினை வழங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவருடைய சமூகம் பரம்பரையினர் மற்றும் எம்மைச் சூழ்ந்திருக்கும் சூழல் ஆகியவற்றுக்கு இரண்டாவதாக முக்கியத்துவம்

கொடுக்க வேண்டும்.

விலங்குகள் மனச்சாட்சியான சிந்தனைகளையோ காரணங்களையோ கொண்டிருப்பதற்கான இயல்பினை கொண்டிருக்கவில்லை. நாம் அதிக புலமையுடன் இருக்கின்றோம் மேற்குலக நாடுகளை சேர்ந்த பெருமளவான உளவியலாளர்கள் நாம் அவ்வாறு விலங்குகளுக்கு கேடு விளைவிப்பதில் இருந்து  விலகிக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் தார்மீக கோட்பாடுகலுக்கு அமைவாக நாம் அவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது. நாம் எவ்வாறு மனிதர்கள் மீது கவனம் செலுத்துகிறோமோ அதேபோலவே விலங்குகள் மீதான அக்கறையினையும் கொண்டிருக்க வேண்டும், என ஹியூமானே சொசைட்டி சர்வதேசம் – பண்ணை விலங்குகள் ஆசிய பசுபிக் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ரொபேட் லூசியாஸ் தெரிவித்தார்.  விலங்குகள் எம்மிலிருந்து வேறுபடவில்லை ஆனால் அவர்களின் உணவுப்பழக்கமே வேறுபாடாக உள்ளது.

பேச்சாளர்கள் இந்த நவீன தொழில்நுட்பங்கள் தற்போதைய சூழலை அழிப்பதற்கு பயன்படக் கூடாது என்ற கருத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியிருந்தார்கள். ஆனால் அந்த நவீன சாதனங்களை சிறந்த நலன்களுக்காக பாவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலதிகமாக சூழலை பாதுகாக்கும் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தும்போது எந்தவிதமான தவறுகளுக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். நவீன சமூகங்களாக நாம் காடழிதல்  மற்றும் கைத்தொழில் மயமாதல் காரணமாக ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பாதிப்புகள் தொடர்பாக போதுமான அளவில் அறிந்திருக்கின்றோம். இதனால் உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் எவ்வாறு தவறாக வழி நடத்தப் பட்டார்கள் விலங்குகளை நுகர்வதற்கான உயர் மட்டத்தில் அவர்கள் எவ்வாறு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. கைத்தொழில் புரட்சி இவ்வாறு அந்தத் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களைத் தவிர்த்து அதனுடைய முறைமை ஒன்றை நோக்கி செல்வதற்கான உதாரணமாக அது எவ்வாறு அமைந்திருந்தது என்பது குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயங்களில் மரபணுரீதியாக உருவாக்கப்பட்ட விலங்குகள்,  விலங்குகளின் இயற்கையான நடத்தையில் மாற்றம் செய்யப்பட்டது, அத்துடன் இறுதியில் வை இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் வரை நோயின் தாக்கம் தவிர்க்கப்படுவதற்காக நோய்களை கட்டுப்படுத்துவதற்காக இரசாயன பதார்த்தங்கள் விலங்குகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறான படிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது