சாஹ்ரா ரிஸ்வான்

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலால்  இந்த தாவர உணவு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.  சிலிக்கான் மற்றும் மீட்லஸ் மண்டே அமைப்புக்கள் இணைந்து பிரபல சமையல் நிபுணர் தோராவுடன் ஆரம்பமானது.

 இந்த பயிற்சிப் பட்டறை.  மிகவும் இலகுவாக மரக்கறி வகைகளை பயன்படுத்தி சமைக்கக்கூடிய பல்வேறு உணவுகளை அவர் அறிமுகம் செய்தார் அத்துடன் இந்த சமையல் தொடர்பாக விளக்கமளிக்கும் போது அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பாகவும் கூறப்பட்டது. இந்த பயிற்சி பட்டறை மிகவும் செயல்திறன் மிக்கதாக நடத்தப்பட்டது .பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு வரும் உணவுகளை சமைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் தாவர உணவுகளை உட்கொள்பவர்களும்  அசைவ உணவுகளை உட்கொள்பவர்களும்  கலந்திருந்தனர்.  அனைவரும் இந்த உணவுகளை குறிப்பாக சூப் கிரேக்கர் மற்றும் பலவகை உணவுகளை எவ்வாறு துரிதமாக தயாரிக்க முடியும் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களின் பதில்கள் இவ்வாறு அமைந்திருந்தன.

”நான் கமஸ் மற்றும் கிரேக்கர் ஆகியவற்றை விரும்புகிறேன் அது உண்மையில் மிகவும் சிறந்ததாக இருந்தது. நான் சைவ உணவுகளை விரும்பி உட்கொள்பவர் நான் நினைக்கின்றேன் இலங்கையில் சகல கறிகள்  மரக்கறிகள் கிடைக்கும் நிலையில் தாவர உணவினை உட்கொள்வது மிகவும் சிறந்தது என கருதுகின்றேன் மரக்கறி உணவுகளை பரிமாறும் பல்வேறு ஹோட்டல்களை இலங்கையில் காணமுடியும்’ 

• * தினா ராஸ்ட் ஜெர்மனி

 நானும் அந்த உணவினை விரும்புகிறேன் ஆனால் நான் மரக்கறி உணவுகளை உட்கொள்பவர் அல்ல எதிர்வரும் காலத்தில் அவ்வாறு மரக்கறி உணவுகளை உட்கொள்பவராக வாழ விரும்புகிறேன் 

• கதரினா கையில் ஜெர்மனி 

அந்த உணவு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது நான் இரண்டு வருடங்களாக தாவர உணவுகளை உட்கொண்டு வந்தேன். இந்த நிலையில் இதுபோன்ற எதனையும் முன்னர் பெற்றிருக்கவில்லை இந்த உணவு ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. மரக்கறி உணவுகள் இவ்வாறான சுவையில் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை 

• தாஸ்லோ ரொபேட்ஸ் 

நான் முழுவதும் அனுபவித்தேன் இந்த நிலையில் புதிய சில உணவு சமையல் குறிப்புகளையும் அறியமுடிந்தது.  இந்த நிலையில் என்னால் எனது விருந்தினர்களுக்கு இவ்வாறான உணவுகளை சமைத்து வழங்க முடியும் அத்துடன் இவ்வாறாக இலங்கையில் மிகவும் இலகுவாக மரக்கறி உணவுகளை உட் கொள்பவராக இருக்க முடியும். ஏனென்றால் சகலவிதமான மரக்கறி உணவுகளும் இலங்கையில் கிடைக்கின்றன அத்துடன் நாம் சுய ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டிய தேவை மட்டுமே உள்ளது. அதேவேளை உணவினை அலங்கரிப்பதும் மிகவும் முக்கியமானது ஏனென்றால் இந்த உணவுகள் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்.

•  ரொஹானா  ஜயரட்ன 

இது நமது முதலாவது சந்தர்ப்பம் அதாவது முதற்தடவையாக மரக்கறி உணவுகளை சமைப்பது எப்படி என்ற வகுப்பில் நான் கலந்து கொள்கின்றேன் . எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு சுவையாக பேக்கரி உணவுகளை வழங்க முடியும் என்று நினைக்கவில்லை .எதிர்காலத்தில் நான் இன்னும் பல பேக்கரி உணவுகளை உண்பதற்கு விரும்புவேன். இங்கு வைக்கப்பட்ட சொக்லேட் பந்துகள் மிகவும் சுவையானவையாக தேங்காயுடன் கலக்கப்பட்டிருந்தது. இதனால் அது மிகவும் சிறப்பான சுவையினை கொண்டிருந்தது. ஆரோக்கியத்தையும் இலக்கு வைத்து இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்க படுகின்றன.

• யூசுப் 

எனக்கும் இது முதல் தடவை மரக்கறி உணவுகள் சுவையற்ற ஒரு உணர்வினை கொண்டிருக்கின்றோம் ஆனால் உண்மையில் அது மிகவும் சிறந்தது நான் அந்த உணவினை நன்றாக அனுபவித்தேன் .

ஹரிணி

இந்த செயல் அமர்வில் கலந்து கொண்டவர்கலின் தாவர உணவு தொடர்பாக கொண்டிருந்த அணுகுமுறை அல்லது நிலைப்பாட்டினை மிகவும் வெற்றிகரமாக மாற்றும் வகையில் செயலமர்வு இருந்தது தாவர உணவுகள் தொடர்பான கருத்துக்கள் சில நிராகரிக்கப்பட்டது .

ஏனென்றால் உணவுகள் சமைத்து முடிந்தது அவை அனைத்தும் மிகவும் சுவையான காணப்பட்டன. சகல விதத்திலும் அதாவது உணவினை வழங்குவது அதன் சுவை ஆரோக்கிய நலன்கள் தயாரிப்பதற்கு குறுகிய நேரம் இலகுவான பொருட்கள் ஆகியவை அனைத்தும் இணைந்து மிகவும் வெற்றிகரமான நிகழ்வொன்றினை வழங்கியது. சபையோர் இந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் உணவுகளையும் அலங்காரம் தொடர்பாக கூறியிருந்தாலும் அவற்றினை செய்வது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை.. சமையலாளர் தோரா மரக்கறிகளுக்கு மேலதிக பெறுமதி சேர்ப்பவராக இருந்தார் அவர் உணவின் ஆரோக்கியம் ஏனைய விடயங்கள் தொடர்பாக கூறியிருந்தார் அந்த வகையில்  மரக்கறி உணவுகளை உட்கொள்வது தற்பொழுது இன்றியமையாதது.