Nuga Café


கிரீன்பாத்திலமைந்திருக்கும் நுகா கபேயானது கொழும்பில் இருக்கும் ஆரோக்கியமானதும் ஸ்திரமானதுமான உணவை பெற்றுக்கொள்ளும் இடங்களில் மிகவும் புதிய வரவாக உள்ளது.  ஒவ்வொரு வகையிலும்  வெகான் மற்றும் தூய மரக்கறி உணவுகளுடனான பரந்தமெனு இங்கு உள்ளது. தெரிவுகள் பலவாககாணப்படும் நிலையில் அதன் சுவையும் அபரிபிதமானதகாவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவை அனைத்துக்கும் மேலாக சகல மரக்கறிகளும் இயற்கை முறையில் உருவாக்கப்பட்டவை.

மீற்லெஸ்மண்டே நுஹா கபேக்குசெல்வதற்குத் தீர்மானித்தது. அங்கு வெகான் மற்றும் மரக்கறியிலான பல மாதிரிகளை சுவைத்துப்பார்ப்பதற்கு நுஹா கபே தீர்மானித்தத்து.

ஆரம்ப மற்றும் பிரதான உணவுகள்

மெக்சிகன் இத்தாலி மற்றும் மேற்குலக உணவுகள் முதல் இலங்கையின் சோறும் கறியும் வரையிலான பல்வேறு தெரிவுகள்  நுஹாகபேயில் உள்ளது.

நாம் அங்கு சென்ற நிலையில் முதலில் வெள்ளைப்பூடு பாண் ஒரு தொகுதி எமக்கு வழங்கப்பட்டது. அந்த பாண் சூடானதாகவும் மிகவும் ஆழமாக வெதுப்பப்பட்டதாகவும் இருந்த அதேநேரம் சுவைக்காக வெள்ளைப்பூடு கலந்த பட்டர் பூசப்பட்டிருந்தது.

ஆரம்பிப்பதற்காக நாம் ஹம்மஸ்/Hummus (600 ரூபா) ஒன்றினையும் கலந்த மரக்கறி மற்றும் ரொட்டியினையும், வழங்குமாறு கோரியிருந்தோம். அதில் கரட், செலரி வெள்ளரி, லெட்டுஸ், ஒலிவ்ஸ், வெள்ளரி உள்ளிட்ட பல வகையான மரக்கறிகள் காணப்பட்டன.  இந்த ஹம்மஸ் சுவையான மசாலாக்கள்  கலந்த கழிஉணவாக காணப்பட்டது .அத்துடன் ஒலிவ் எண்ணையும் கலக்கப்பட்டிருந்த நிலையில் மரக்கறி கலந்த உணவுக்கு மிகவும் சிறப்பான உபஉணவாக இது அமைந்திருந்தது.

பிரதான உனவுக்காக மரக்கறி பஸ்தாவும் சீன டொபு ரோள் உடன் இனிப்பு உருளைக்கிழங்கும் எம்மால் கோரப்பட்டது. மரக்கறிபஸ்தா (820 ரூபா) ஸ்பகதி பஸ்தாவாக இருந்ததுடன் குடிசை வெண்ணெயுடன்  இணைத்து ரோஸ்ட் பண்ணப்பட்டிருந்த்தது. அதில் தக்காளி சோஸ் சுச்சானி புறோகோலி காளான் அஸ்பராகாஸ் ஆகிய மரக்கறிகளும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த உணவு இரண்டு வெள்ளைப்பூடு பாண் சகிதம் பொதுவான அளவிலான உணவாக பரிமாறப்பட்டது. உண்மையில் அதனை சுவைத்து நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

ரொபு ரோள் மற்றும் இனிப்பான உருளைக்கிழங்கு (820ரூபா ) நுஹா கபேவின் இன்னோரு வெகான் உணவாக உள்ளது. சுடப்பட்ட ரொபு மற்றும் முட்டைகத்தரி , உடன் வெள்ளரி , இனிப்பு உருளைக்கிழங்கு , குடைமிளகாய், ஆகியவர்றுடன் அடிப்பகுதியில் அவகாடோ வைக்கப்பட்டிருந்தது. பீட்றூட் சுவையூட்டியுடன் வழங்கப்பட்ட இந்த உணவானது இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் பிரெட்புருட் சிப்ஸையும் துணையாக கொண்டிருந்தது. இந்த சிப்ஸ் மிகுந்த சுவையைகொண்ட உணவாக இருந்தநிலையில் தட்டிலிருந்து மிகவும் வேகமாகவே மறைந்துவிட்டது.  சுடப்பட்ட டொபு ஆனது மிகவும் சரியான முறையில் பல மசாலாக்கள், வாசனை திரவியங்களால் மெருகூட்டப்பட்டிருந்தது. பீட்ரூட் சுவையூட்டி மூலம் அது மேலும் சுவையூட்டப்பட்டிருந்த நிலையில் மிகவும் சமன் செய்யப்பட்ட ஒரு உணவாக இது அமைந்துவிட்டது.

பழவகை உணவு

நுகா கபேயில் வெகான் சொக்லேட்கெக் உள்ளது. (450ரூபா) இதனை உண்பதற்கான ஆர்வத்தினை  நாம் கொண்டிருந்தோம்.  பால் அற்ற இந்த கேக் ஒருபுறம் மிகவும் மிருதுவானதாக காணப்பட்ட அதேநேரம் ஈரலிப்பினையும் கொண்டிருந்தது. இனிப்பினை தேடும் உங்களின் வாய்க்கு மிகவும் பொருத்த்தமான சொக்லேட் கேக்காக அது அமைந்திருந்தது.

குடிபானங்கள்

நுகாகபேயின் இஞ்சி தேனீர் சர்க்கரையுடன் (ரூபா 200) எமது  வெகான் அல்லது மரக்கறி உணவுக்குமிகவும் பொருத்தமான குடிபானமாக அமைந்திருந்தது. சிறு துண்டுகளாக இஞ்சி அந்த தேனீரில் கலக்கப்பட்டிருந்தது. அதனால் மிகுந்த உற்சாகம் கிடைக்கும் நிலை காணப்பட்டது. அத்துடன் சர்க்கரை மிகவும் பொருத்தமான இனிப்பூட்டியாக காணப்பட்டது.

இங்கு பால் அடிப்படையிலான குடிவகைகளும் கானப்படுகின்றன. அவை பாதாம் மற்றும் சோயா மூலம் மிருகப் பாலுணவற்றதாக்கப்பட்டுள்ளது.

முடிவு

முழுதாக நோக்கும் நிலையில் இது ஒரு சிறப்பான அனுபவமாக அமைகின்றது. சேவையும் மிகவும் சிறப்பானதாக காணப்பட்டதுடன் வழங்கப்படும் ஓடர்கள் 15 நிமிடங்களில் வழங்கப்படுகிறது. மிகவும் நட்புடனும் பணிவாகவும் அந்த பணியாளர்கலளும் காணப்படுகின்றனர். போதிய இட வசதியை கொண்டிருக்கும் அதேநேரம் பண்ணை வீடுகளைப்போன்ற அனுபவத்தை தரும் இயற்கை ஒளியினை அது கொண்டிருக்கிறது.