The Good Market Shop


த குட்மார்க்கட் ஷொப் ஆரோக்கியமானதும் இயற்கை முறை விவசாயம் மூலம்கிடைக்கப் பெறும்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மத்தியில் கவனம் செலுத்துகிறது. ரேஸ்கோஸ் மைதானத்துக்கு அருகில் அமைந்திரிருக்கும் லக்பகன வளாகத்தில் இது அமைந்துள்ளது. அத்துடன் உடலாரோக்கியத்திலும், அசைவமற்ற உணவுகளிலும் , விழிப்புணர்வுடனான நுகர்விலும் கவனம் செலுத்துவோருக்கு இந்த இடம் பல தெரிவுகளை வழங்குகிறது.

 சமூக சமையல் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை அறிவதற்காக மீற்லெஸ் மண்டே ஶ்ரீலங்கா குழு த குட்மார்க்கட் ஷொப்புக்கு மதிய உணவுக்காக ஒரு விஜயத்தை மேற்கொண்டது.  பின்பகுதியில் இருக்கும் கபேயானது முதலில் தனி ஒரு வர்த்தகரால் நடத்தப்படு வந்த நிலையில் தற்போது சமூகங்களின் சமையல்களடங்கிய   நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஆரோக்கியமானதும் ஏற்கக்கூடியதுமான உணவையும்   குடிபானங்களையும், பெற்றுக்கொள்ளமுடியும்.

பொருட்களின் வகைகள்

முற்றுமுழுதாக இயற்கை உற்பத்தி பொருட்களால் இந்த கடைகளில் இருக்கும் சகல ராக்கைகளும் நிரப்பப்பட்டுள்ளன. மிகவும் தீவிரமான பரிசோதனைகள் மூலம் இந்த உணவு பொருட்களின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த குட்மார்க்கட் ஷொப்பின் பிரதான அம்சங்களில் ஒன்றாக வாரம்முழுவதும் குட்மார்க்கட் விற்பனையாளர்களால் பாலுற்பத்தி பொருட்கள் வரையான வெகான் மாற்றீடுகள் வழங்கப்படுகின்றன. வெகான் சங்கிலியில் மரமுந்திரிகை வெண்ணெய், வெகான் தேங்காய் யோகட், சோயா பால், பாதம் பால், மரமுந்திரிகை பால்  ஆகியவற்றை சனிக்கிழமைவரை காத்திருக்காமல் பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன் உலர்ந்த பழ துண்டுகளும் அங்கு காணப்படுகின்றன. உதாரணமக கூறுவதாக இருந்தால் தர்ப்பூசணி , மாம்பழம், அன்னாசிப்பழம் போன்றவற்றின் உலர் வடிவங்களை பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன் இயற்கை முறையிலான நட்ஸ்வகைகள் அல்லது பழ வகைகளையும் பெறமுடியும் . மார்மலடஸ், ஜாம், இயற்கை முறையிலான நிலக்கடலை வெண்ணெய் போன்றவையும் அங்கு உள்ளன.

இயற்கை முறை மூலமான பல்வேறு பழங்கள் மற்றும் மரக்கறிகள் காணப்படுவதுடன் நாடளவிய ரீதியில் இருக்கும் பண்ணையாளர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும்  பெற்றுக்கொள்ளப்படும் பலவகை முட்டைகளையுமிங்கு பெறமுடிகிறது.  அத்துடன் உங்களால் இயற்கை உற்பத்தி மூலமான மா வகைகளையும் இங்கு பெறமுடியும், (குரக்கன், அரிசி,தேங்காய், கடலை, முழுகோதுமை, ஆட்டா)  மற்றும் இயற்கை முறை விதைகள் , தானியங்கள் ( பூசணி விதை,  சியா விதைகள், பசில் விதைகள், குயினோஆ, ஓட்ஸ்) அத்துடன் வெதுப்பகஉற்பத்தி பொருட்கள் மற்றும் இயற்கை இனிப்பூட்டிகளாகியவற்றையும் பெறமுடியும். அத்துடன் சில அரிய வகை மசாலாக்கள் மற்றும் மூலிகைகள், வீடு , செல்லப்பிராணிகள், மற்றும் பூங்கா பராமரிப்புபொருட்களையும் சகலதும் இயற்கைபொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப்பொருட்கள் போன்றவற்றையும் இங்கு பெறமுடியும்.

உணவு மற்றும் குடிபானங்கள்

கடையின்பின் பகுதியில் சிறிய சமையலறையினை காணமுடியும் சமூக சமையலாளர்களால் இது நடத்தப்படுகிறது. வாரத்தினொவ்வொரு நாளும் பலவகையான வியாபாரிகளிங்கு தமது நிலையத்தை நடத்துகின்றனர். அதன் காரணமாக பல வகையான தெரிவுகளை உணவு மற்றும் குடிபானங்களில் பெறமுடியும். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில்  உணவுகள் சிலவற்றை பெறமுடியும்.

  • ஜீவாஸின் காலை உணவும் மதிய உணவும் (கறியும் சொறும், இடியப்பம், மரவள்ளி,பாற்சோறு)
  • மில்க் அன்ட்ஹொனி கபே  மூலமாக குயிச்சஸ் டாட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள்
  • மாஸ்கிச்சனிலிருந்து இயற்கை தாவர சூப்
  • கெமிகெதரவின் பல வகையான அப்பங்கள்
  • ஸ்மோகீஸ் வழங்கும் வெகான் ஐஸ்கிறீம் மற்றும் வெகான் பிறவுனிஸ்
  • புருட்புள் பொப்சிகள்சின் பழ வகைகள்
  • கெமிகெதரவின் மருத்துவ பானங்கள், பலமூட்டும் குடிபானங்கள், ஸ்மூதிஸ், மற்றும் உடன் குடிபானங்கள்
  • ஹன்சா அன்ட் ஒர்கானிக் லைப் வழங்கும் உள்ளூர் கோப்பி மற்றும் தேனீர் வகைகளை பெறமுடியும்

ஆரோக்கியமான வாழ்வினை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த குட்மார்க்கட் செயற்பட்டுவரும் நிலையில் நாம்மெனுவில் கூறப்பட்டசில வெகான்/ மரக்கறி மற்றும் ஆரோக்கியமான உணவினை பெற்றிருந்தோம்.

பருகுவதற்காக நாம் கறிவேப்பிலை ஜூஸ் (260 ரூபா) , ஆரோக்கியம்தரும் சக்தி பானம் (350 ரூபா),  கொடித்தோடை மற்றும் வாழைப்பழம் ஸ்மூதி ( 350 ரூபா), ஆகியவற்றைகெமி கெதரவிலிருந்து பெறமுடிந்தது. மீட்லெஸ்மண்டெ செய்தியின் உண்மைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த பாலுக்கு பதிலாக செவ்விளநீரை பயன்படுத்துமாறு நம் கோரியிருந்தோம். அதனால் பாலுணவற்ற தெரிவை உறுதிப்படுத்த முடியும்.

தோடம்பழம் கறிவேப்பிலை செவ்விளநீர் ஆகியவற்றின் கலவையாக கறிவேப்பிலை ஜூஸ் காணப்பட்டது ஆனால் சீனி சேர்க்கப்படவில்லை கறிவேப்பிலை இணைந்து தோடம்பழம் செவ்விளநீரும் மிகவும் சுவையான இனிப்பு சுவையை வழங்கியிருந்தது மிகவும் சூடான நாளொன்றில் ஆரோக்கியமான புத்துணர்வூட்டும் பானம் ஒன்றினை நீங்கள் நாடுவதாக இருந்தால் நிச்சயமாக அதனை முயற்சி செய்து பார்க்க வேண்டும். கெவின் சக்தி தரும் பானங்கள் தெரிவிலிருந்து ஆரோக்கியமான பானங்களை பெற்றுக்கொள்ள முடியும். வாழைப்பழம் வெல்பினல, தோடம்பழம் செவ்விளநீர் ஸ்பினாச் வல்லாரை ஆகியவை கலந்த பானமாக அது அமையும்..

கொடித்தோடை மற்றும் வாழைப்பழ ஸ்மூதி ஆனது கொடித்தோடை வாழைப்பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை கலந்ததாக அமைந்திருந்தது இந்த புத்துணர்ச்சி தரும் பானம் இனிப்பாகவும் மிகவும் சிறிய அளவில் காரத்தன்மையும் கொண்டிருந்தது சில சந்தர்ப்பங்களில் கொடையின் விதைகள் அந்த பானத்திற்கு மேலும் சுவையூட்டியது. அத்துடன் வாழைப்பழத்தின் இனிப்புடன் அது இணைந்திருந்தது.

மதிய உணவு