ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்காக இளைஞர்கள் மாநாடு நவம்பர் 28ஆம் திகதி இடம்பெற்றது. இந்த மாநாட்டில் ஆரோக்கியம் தொடர்பான ஊக்குவிப்பு அமர்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. நான்கு நாட்கள் நடந்த இந்த மாநாடு வடக்கு மற்றும் வடமேல் மாகாண இளைஞர்கள் தீர்மானங்களை வகுத்தல் மற்றும் நிலையான சமூகத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையிலான மாநாடாக அமைந்திருந்தது. அனுராதபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆண்கள் பெண்கள் என்ன இது தரப்பினரையும் சமநிலைப்படுத்தி 100க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சிறந்த உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்

ஆரோக்கியத்தின் 2 கருதுகோள்களை மற்றும் உடல்ரீதியான விடயங்கள் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாகவும் இங்கே வலியுறுத்தி கூறப்பட்டது. இந்த விடயத்தில் இலங்கை எவ்வாறான அபிவிருத்தி தந்திரோபாயங்களை உள்ளூர் மட்டங்களில் தொடர்புபடுத்த முடியும் என்பது தொடர்பாக சிலிக்கான் ட்ரஸ்ட் விளக்கியிருந்தது.  முதலாவதாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் அத்துடன் நிலையான அபிவிருத்தி இலக்கு 3 சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலன்புரி தொடர்பில் மட்டுமல்லாமல் ஏனைய நிலையான அபிவிருத்தி இலக்குகளை நிலையான அபிவிருத்தி இலக்கு 12 அதாவது பொறுப்புணர்வுடன் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பாகவும் நிலையான அபிவிருத்தி இலக்கு 13 கூறும் காலநிலை செயற்பாடுகள் குறித்தும் நிலையான அபிவிருத்தி இலக்கு 15 கூறும் நிலத்தின் மீதான வாழ்வு தொடர்பாகவும் பேசப்பட்டது..

உணவு உற்பத்தி மற்றும் காலநிலை மாற்றம்

இரண்டாவதாக இந்த மாநாட்டில் நிலையான வாழ்க்கை வடிவத்தினை ஏற்றுக்கொள்ளுதல் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த உள்ளூர் உணவு முறையை குறிப்பாக உற்பத்தி தயாரிப்பு விநியோகம் அனுமதி நுகர்வு மற்றும் வழங்கல் கழிவு முகாமைத்துவம் உட்பட அனைத்தும் நிலையியல் தன்மையை கொண்டதாக இது அமைய வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. குறிப்பாக உற்பத்தி என்ற விடயத்தில் கவனம் செலுத்தும்போது உணவு உற்பத்தியானது காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பினை வழங்கும் ஒரு துறையாகும். உலகளாவிய உணவு முறை ஒட்டுமொத்த வாயு வெளியேற்றங்களில்  19 முதல் 29 வகையான வெளியேற்றங்களை வழங்குகின்றது. அதேபோல விவசாயத்துறை ஆனது ஒட்டுமொத்தமாக இருபத்தைந்து வீதத்தினை வழங்குகின்றது.. கைத்தொழில் துறை சார் கால்நடை விநியோகச் சங்கிலி மனிதர்கள்  அடிப்படையிலான பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் 14.5 வீதமான பங்களிப்பினை வழங்குவதாக அமைகின்றது..

இலங்கையில் இறைச்சி உற்பத்தி துறை

வரைவுகள் மற்றும் தரவுகள்