சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்கள்,  உள்ளூர் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏனைய பிரதிநிதிகள் முயற்சியாளர்கள் மற்றும் இளைஞர்களை தலைமைத்துவமாக கொண்டிருக்கும் அமைப்புகள் ஆகிய தரப்பினரின் இணைப்பாக சிறந்த தளம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியாக நடத்தப்பட்ட சமாதான கண்காட்சி மற்றும் கொழும்பு உணவு திருவிழா 2017 மூலமாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் ஆகியவற்றுடன் ஸ்திரமான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தது.

இரண்டு நாட்கள் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வுகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு அதேபோல உரிமைகளுக்கான பாதை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் செயற்பாட்டு பிரசாரம் ஆகிய அமைப்புகள் இணைந்து கொழும்பில் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் சிலிக்கன் ட்ரஸ்ட் அமைப்பானது மரக்கறி உணவினை பின்பற்ற வேண்டிய தேவை குறித்து பல்வேறு ஊக்குவிப்பு பிரசாரங்களை நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தது. அத்துடன் காலநிலை மாற்ற பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான தெரிவாக அது அமையும் என்றும் இலங்கை மீட்லெஸ் மண்டே அமைப்பு பிரசாரங்களை மேற்கொண்டது.

இங்கு ஊடக வலையத்தில் சிலிகான் ட்ரஸ்ட் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் உரை நிகழ்த்தும் போது,  நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான சிந்தனை மிகு நுகர்வின் அவசியம் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார் திருமதி வொசிதா விஜயநாயக்கா.

அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,  சூழலுக்கு உகந்த நுகர்வினை ஏற்றுக்கொண்டு அதன் மூலமாக காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவது மிகவும் முக்கியமான விடயமாக இருக்கின்றது அத்துடன் சூழலுக்கு உகந்த வகையில் அதாவது வளங்கள் அதிகமாக சுரண்டப் படாத வகையில் பயன்படுத்த படவேண்டும் என்பதனையும் சிந்தனையில் கொண்டு இந்த நுகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இங்கு சிலிக்கான் ட்ரஸ்ட் அமைப்பின் இலக்குகள் தொடர்பாக சிறிய விளக்கம் வழங்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியிலான தொடர்புகளை விஸ்தரித்தல் என்ற ஆரம்பத்துடன் அந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட நிலையில் பால்நிலை சமூக நீதி மற்றும் விலங்குகளின் நலன்புரி ஆகியவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இதனை  ஊக்குவிப்பு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் விளக்கமளிக்கப்பட்டது. இயற்கையான விவசாய திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுவது தொடர்பாகவும் அதில் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் முக்கியமான தொடர்பினை கொண்டிருப்பதாகவும் வொசிதா விளக்கமளித்திருந்தார்.

மேலும், மீட்லெஸ் மண்டே  நிகழ்ச்சித்திட்டம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்திற்கு மிகவும் கணிசமான அளவில் பங்களிப்பினை