“தாவர உணவுகளை தெரிவு செய்வது எமக்கும் ஏனையோருக்கும் பூமிக்காகவும் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடு ,அதுதான் எதிர்கால”

“Going vegan is the least and the best we can all do for ourselves, for others and for the planet! It is the future!” ~Sue Iruge.

“தாவர உணவுகளை தெரிவு செய்வது எமக்கும் ஏனையோருக்கும் பூமிக்காகவும் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடு ,அதுதான் எதிர்காலம்” –
 சு இருகே

 சு இருகே நீண்டகாலமாக தாவர உணவினை உட்கொண்டு வரும் ஒருவர் அத்துடன் ஜூன் 2017 இடம்பெற்ற மீட்லெஸ் மண்டே சமூக ஊடக போட்டியின் வெற்றியாளர் .

” நான் ஏன் தாவர உணவினை தெரிவு செய்தார் என்பது தொடர்பாகவும் அத்துடன் இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட உணவினை ஏன் உண்ணக்கூடாது என்பதற்கான முக்கியத்துவம் தொடர்பாகவும்   சிந்திக்கின்றறார்.  நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் தாவர உணவினை உட்கொள்வதற்கு தீர்மானித்திருந்தேன் எந்தச் சந்தர்ப்பத்திலும் கேட்பதற்கான சிறந்த உரை என்ற தலைப்பில் கேரி யொரெஸ்கி யூடியூப்பில் வழங்கியிருக்கும் உரையின் பின்னர் இந்த முடிவினை நான் மேற்கொண்டிருந்தேன் முதல் முதலாக பால் உற்பத்திப் பொருட்கள் முட்டைகள் போன்றவற்றினை உண்பதில் உள்ள தவறினை என்னால் அறியமுடிந்தது. 

 அத்துடன் பண்ணை விவசாயம் குறித்த பூரண விளக்கத்தையும் அதனால் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. இது எமது முகங்களில் அடித்தது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தியது . இந்த நிலையில் இவ்வாறான விடயங்களுக்கு தொடர்ந்தும் நாம் பங்குதாரர்களாக இருக்க கூடாது என்பதனை தீர்மானித்திருந்தேன். அத்துடன் தாவர உணவினை உட்கொள்வதற்கான முடிவினை என்னால் எடுக்க முடிந்தது ஆரம்பத்தில் இது மிகவும் கடினமான செயற்பாடாக இருந்தது ஏனென்றால் நான் விலங்கு உற்பத்திகளை அதிகம் விரும்பி உட்கொள்கிறேன்.   

ஆனால் சில மாதங்களில் புதிய ஒரு உலகினை எனக்காக உருவாக்கிக்கொள்ள முடிந்தது. முன்னர் இவ்வாறான ஒரு உலகம் இருப்பதனை நான் உணர்ந்திருக்கவில்லை. .உண்பது ஒரு பிரச்சனை அல்ல ஏனென்றால் தற்பொழுது சகல விடயங்களும் தாவர மயமாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் எனது ஆரோக்கியமும் அதிகரித்து வருகின்றது 

மவுண்ட் லவினியா ஹோட்டலில் மீட்லெஸ் மண்டே திட்டத்தினூடாக தாவர உணவுத் தொகுதி ஒன்றினை உண்பதற்கான சிறந்த சாத்தியம் ஒன்று எனக்கு கிடைத்தது. இதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன் அத்துடன் அந்த சந்தர்ப்பத்தை சொர்க்கம் என்றே என்னால் கூறமுடியும் அதிகளவான சுவையான உணவுகள் அங்கு இருந்தது என்பதற்கு அப்பால் அது ஒரு சிறந்த விடயமாக இருந்தது. அந்த உணவு முற்று முழுதாக அசைவம் நீக்கப்பட்டதாக காணப்பட்டதுடன் எந்த ஒரு பால் முட்டை விலங்கு உற்பத்தி பொருட்களும் உள்வாங்கப்படவில்லை. மக்கள் இவ்வாறான தாவர உணவு வகைகளை எதிர்பார்க்கின்றனர் 

இந்த நிலையில் இவ்வாறான விருந்து அதனை நிரூபித்துள்ளது விலங்குகளுக்கு எந்தவிதமான துன்புறுத்தல்களையும் வழங்காமல் இவ்வாறாக சுவையான உணவுகளை உண்ண முடியும் என்பது நிரூபணமாகியது நமது ஆரோக்கியத்திற்கும் சூழலுக்கும் பாதிப்பின்றி நாம் அதனை தொடர முடியும் என்று அவர் கூறினார்

அசைவமற்ற திங்கள் திட்டம் மக்கள் மத்தியில் அசைவ உணவுகள் அல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி அசைவற்ற வாழ்க்கை தெரிவுகளை நோக்கி செல்ல வேண்டியவன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியது கல்கிசை ஹோட்டலின் கவர்னர் ரெஸ்டாரண்டில் நடத்தப்பட்ட உணவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற இருவருக்கு கல்கிசை ஹோட்டலில் கவர்னர் ரெஸ்டாரண்டில் மரக்கறி  மதிய உணவினை உட்கொள்வதற்கான 2 பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது அத்துடன் ஒவ்வொரு போயா தினத்தில் பரந்த மரக்கறி உணவு தெரிவுகளை அவர்கள் மேற்கொள்ள முடியும் 

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு