இறைச்சி மற்றும் பாலுணவு குறைவான உற்பத்திகளை நோக்கிய உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐநாவின் அழைப்பு

உணவு வடிவங்களில் விலங்குணவு உற்பத்திகளில் இருந்து பாரிய மாற்றத்தை நோக்கி செல்லுதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் தரப்பினரின்  மாநாட்டின் இருபத்திரண்டாவது பதிவின் மூலம் ஒரு முக்கியத்துவத்தை வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கும் சில முக்கிய விடயங்களை உள்வாங்குவதற்கு முடியுமாக இருந்தது. பொருளாதார செயற்பாடுகளில் காணப்படும் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களை வகை பிரிப்பதன் மூலம் அதன் மூலமான சமூக தாக்கங்களை அந்த அறிக்கையானது அடையாளம் கண்ட அதே நேரம் முக்கியத்துவம் கொடுத்து கையாளப்பட வேண்டிய விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன் உலகளாவிய நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகியவை திறமான மட்டங்களில் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பதனையும் அது உறுதிப்படுத்துவதற்கான தன்மையினை கொண்டிருந்தது.  அந்த அறிக்கையின் பிரகாரம் விவசாய உற்பத்தி இறைச்சி மற்றும் பால் உணவுப் பொருட்களின் உற்பத்தி ஆகியவை உலகளாவிய நன்னீர் நுகர்வில்  70 வீதமான பகுதியை கொண்டிருந்தது. அத்துடன் அதற்காக மொத்த நில பயன்பாட்டின் 38 வீதமான பகுதி அதற்கு தேவைப்பட்டிருந்தது. 

அதேபோல உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்கு 14 வீதமான பங்களிப்பினை அவை வழங்கியிருந்தன ஆகவே விலங்குகளின் விநியோகச் சங்கிலி ஆனது காலநிலை மாற்றத்திற்கு மிகவும் முக்கியமான பங்களிப்பினை வழங்குவதாக அமைந்திருந்தது

காலநிலை மாற்றத்துக்கான பங்களிப்பு

முதலாவது தரவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் விலங்குகளிலிருந்து அதாவது மாடுகள் ஆடுகள் செம்மறி ஆடு போன்ற விலங்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் இறைச்சியானது அதிகளவானவெளியேற்றத்தை கொண்டிருந்தது. மாடு மற்றும் பண்ணை விலங்குகளின் பால் உற்பத்தி 41 மற்றும் 20 வீதமான வெளியேற்றங்களுக்கு வழிவகுக்கின்றது. அதேநேரம் பண்டி மற்றும் கோழிப்பண்ணை முட்டை போன்றவை மூலமாக முறையே 9 மற்றும் 8 வீதமான வெளியேற்றம் காணப்படுகிறது

கவலைக்கான காரணம் 

அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கையில், விவசாயத்தின் மூலமான தாக்கங்கள் சனத்தொகை பெருக்கம் விலங்குணவு உற்பத்திகளில் அதிகரிப்பு ஆகியவை காரணமாக கணிசமான அதிகரிப்பினை சந்திப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. அல்லது படிம எரிபொருள் போலல்லாது அதற்கு மாற்றீடான ஒன்றினை பெற்றுக்கொள்வது மிகவும் சிக்கலான விடயமாகும். மக்கள் உணவினை உட்கொள்ள வேண்டும் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான அளவில் தாக்கங்களை குறைப்பது உலகளாவிய ரீதியில் உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகின்றது. அதாவது விலங்குகளிலிருந்து நாம் வெளியேற வேண்டிய தெரிவே இங்கு காணப்படுகிறது.

அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டும் விடயங்களாக, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பு காணப்படும் சந்தர்ப்பங்களில் அதிகளவான புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை நோக்கி நகர்வது பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் என்ற ரீதியில் நிலையானவையாக காணப்படவில்லை. இந்த விடயங்களில் இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பொருட்களே அதிக புரதம் நிறைந்த உணவுகளாக கூறப்படுகின்றது. விலங்கு அதற்கான கேள்வியினை அதிகரிக்க செய்வது உலகளாவிய ரீதியில் காணப்படும் பண்ணை தொழில் துறையினருக்கு பல தடைகளை ஏற்படுத்தும் அதேநேரம் பண்ணை வளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.

 அத்துடன் வர்த்தகரீதியான செயற்பாடுகள் உள்வாங்கப்பட்டு இருக்கும் நிலையில் விலங்குகளின் நலன்புரி தொடர்பில் கவனம் செலுத்த முடியாத நிலை அங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. மேலதிகமாக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி இந்த விடயங்களில் அதிகளவான வெளியேற்றங்களை எதிர்காலத்தில் தரும் என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. அதிக அளவில் பயன்படுத்துதல் அந்த உயிரினங்களின் இறப்புகள் அதேபோல ஏனைய விலங்குகளின் இழப்பு ஏற்படும் ஆபத்துக்கள் போன்றவற்றையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறமுடியும். அத்துடன் பொருட்களையும் பிரச்சினையும் அதிக அளவாக உட்கொள்வது சுற்றுச்சூழலுக்கான தாக்கத்தினை ஏற்படுத்துவது மட்டுமன்றி எமது ஆரோக்கியத்திலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது உடற்பருமன் மற்றும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு அது காரணமாக அமைகின்றது.

வாழ்க்கை வடிவத்தில் மாற்றம் 

மற்றொரு வித்தியாசமான நோக்கில் நாம் ஒவ்வொருவரும் நமது உணவு பழக்கவழக்கங்கள் ஊடாக காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பினை வழங்குகின்றோம். பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் என்ற அடிப்படையிலும் எமது உணவு பழக்கங்கள் காரணமாக அமைகின்றன. பல்வேறு ஆய்வுகளின் மூலம் 2000 சராசரி கலோரிப் பெறுமானத்தை கொண்ட இறைச்சி வகை உணவு 2000 சராசரி கலோரிப் பெறுமானத்தை கொண்ட மரக்கறி  உணவினை காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகளவான பசுமை குடில் வாயு வெளியேற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. வேறுவிதமாக கூறுவதாக இருந்தால் அசைவ உணவுகளை உட்கொள்வோர் வெளியேற்றும் காபனின் அளவானது மரக்கறி உணவுகளை உட்கொள்வோர் காட்டிலும் இருமடங்கு அதிகளவாக காணப்படுகின்றது. என ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 உணவு வடிவங்களில் ஏற்படும் மாற்றம் விலங்கு மற்றும் பால் உற்பத்திப் பொருட்களில் நுகர்வினை உடனடியாக குறைந்த நிலையில்  பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கைக்கு பின்னரான பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இடைவெளியை காணப்படும் நீண்ட பிரதிபலிப்புகளை உணவு மற்றும் இறைச்சி உணவு பால் உணவு ஆகியவற்றில் காணப்படும் வீழ்ச்சி பாரிய பிரதிபலிப்புகளை கொண்டிருக்கும்.

இறைச்சி மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் இல்லாத உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுவது உலகளாவிய ரீதியில் மிகவும் அவசரமான தேவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார ரீதியானதும் சூழலுக்கு இசைவான மாற்றீடுகளை பரிந்துரை செய்திருக்கும் அந்த அறிக்கை மரக்கறி வகை உணவுகளை சுட்டிக்காட்டி இருக்கும் அதேவேளை இறைச்சி உற்பத்தித் துறைக்கு பதிலாக மரக்கறி சார் உணவு உற்பத்தி துறை ஸ்திரமான நுகர்வு மற்றும் உற்பத்தியை நோக்கி கொண்டு செல்ல முடியும். இதனால் ஆரோக்கியம் மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை ஒவ்வொரு தனி நபர்களும் கொண்டிருக்கும் கூட்டு பொறுப்புணர்வு உறுதிப்படுத்த படுகின்றது. காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் காணப்படும் பொறுப்புணர்வை அது சுட்டிக்காட்டுகின்றது. மேலும் இறைச்சி உற்பத்தி துறையினை மூடுதல் ஆகியவை ஸ்திரமான பண்ணை உற்பத்தி வடிவங்களுக்கு வழிவகுக்கும் அதேநேரம் கருணை நிறைந்த பண்ணை செயற்பாடுகளின் மூலம் விலங்குகளின்நலன்புரி உறுதிப்படுத்தப்படும்.

இலங்கையின் தேசிய தீர்மான பங்களிப்பும் கால்நடைகள் துறையும் 

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பின் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக ஐநாவின் ஏனைய நிறுவனங்களும் விவசாயம் மற்றும் பண்ணை தொழில் துறை ஆகியவற்றின் மூலம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக்கொண்டிருப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால் விநியோகச் சங்கிலி காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் அதே நேரம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. 

இந்த விடயத்தை நோக்கும்போது தெற்காசியா இலத்தின் அமெரிக்கா கரீபியன் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்கள் மிகவும் குறைவான உற்பத்தி முறைகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் இலங்கையும் இவ்வாறாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் உற்பத்தி மிகவும் குறைவாக காணப்பட்டாலும் தொகை அதிகமாகவும் இடங்களில் காணப்படும் குறைப்பு போன்றவை பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் சரிவினை காட்டுகின்றது. 

 காலநிலைக்கு உகந்ததும் கருணை நிறைந்ததுமான பண்ணை செயற்பாடுகளை அறிமுகம் செய்து அவற்றினை ஏற்றுக் கொள்வதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கும் அதே வேளை துறை ரீதியான பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் போதிய சரிவு காணப்படும்.

இலங்கையின் தேசிய தீர்மான பங்களிப்புகள் குறித்த அண்மைய ஏற்பாடுகளின் பிரகாரம் காலநிலை மாற்றங்கள் தொடர்பான செயற்பாடுகள் பண்ணை தொழிலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பண்ணை தொழில் துறையானது எதிர்காலத்தில் தேசிய பங்களிப்புகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்களுக்கு அமைவாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இருந்தபோதிலும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்த விடயம் குறிப்பிட்டளவான பங்களிப்பினை கொண்டிருக்கின்றது அத்துடன் விலங்கு மற்றும் பண்ணை தொழிலில் கவனம் செலுத்தப்படுமாக இருந்தால் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் வீழ்ச்சியடைவதற்கு அது காரணமாக அத்துடன் புரட்சி உற்பத்தியிலும் சரிவு ஏற்பட வேண்டிய தேவை தொடர்பாகவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேசிய மைய பங்களிப்புக்கள் தொடர்பான பரிந்துரைகளை அமல்படுத்தும் போது முக்கியமாக நாடு இரக்கம் நிறைந்த கொள்கைகளை அணுகு முறைகளை பின்பற்ற வேண்டும் இவை அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமல்ல காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் பாதிக்கப்பட்டுள்ளது

கொள்கை மாற்றத்தை நோக்கிய முதல் படிகள்

நாட்டின் தேசிய நிர்ணய பங்களிப்புகள் போன்றவற்றின் பகுதியாக இசைவாக நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு இலங்கை அடுத்து ஒரு நீல பசுமை யுகம் என்ற தொனிப்பொருளிலான மாநாடு மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் ஆசிய-பசுபிக் காலநிலை மாற்ற இசைவாக்கம் என்ற அமைப்பின் ஐந்தாவது மாநாடு 2018 அக்டோபர் 17 முதல் 19 வரையான திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

 இந்த மாநாடுகள் வெப்பநிலையை 2 சதம பாகையாக   ஏற்றுக்கொள்ளுதல் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளிகளை நீக்குதல் போன்ற விடயங்களில்   கவனம் செலுத்தியது. காலநிலை மாற்ற விடயங்களில் மரக்கறி உணவுகளை உட்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாக கருத்து கொல்லப்பட்ட நிலையில் இந்த மாநாடுகளில் வரவேற்பு உபசாரம் அசைவமற்ற இரவு உணவு விருந்தாக இடம்பெற்றிருந்தது. 

இந்த இந்த வரவேற்பு உபசாரம் 17ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் பேராளர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர்இதில் கலந்து கொண்டிருந்தனர். சூழலுக்கு உகந்தது விலங்குகளின் நலனில் அக்கறை கொண்ட அசைவமற்ற விருந்து இலங்கை அரசு அதிகாரிகள் விலங்குகளின் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் அக்கறையுள்ள ஒரு சூழலை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதனை சுட்டிக்காட்டி இருந்ததுடன் இந்த விடயம் மாற்று ஒரு வாழ்க்கை வடிவம் தேவை என்பதை நினைவூட்டுவதாகவும் அமைந்தது. 

சிறந்த சூழலை உருவாக்குவதில் நமது தனிப்பட்ட சமூக ரீதியிலான பொறுப்புணர்வை நிறைவேற்றுவதில் அசைவ உணவு நுகர்வு அதாவது சூழலுக்கு உகந்த உணவு வடிவங்களை மாற்றிக்கொள்வதற்கான தேவை இவ்வாறு காணப்படுகின்றது என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு சுட்டிக்காட்டி இருந்ததை போல இந்த இரவு உணவு விருந்துபசாரம் அந்த செய்தியினை வலியுறுத்துவதாக அமைந்தது. 

குறிப்புக்கள்:

1. UNEP (2010) Assessing the Environmental Impacts of Consumption and Production: Priority Products and Materials, A Report of the Working Group on the Environmental Impacts of Products and Materials to the International Panel for Sustainable Resource Management. Hertwich, E., van der Voet, E., Suh, S., Tukker, A., Huijbregts M., Kazmierczyk, P., Lenzen, M., McNeely, J., Moriguchi, Y.

2. Figure 1 sourced from Food and Agriculture Organization of the United Nations (FAO)Global Livestock Environmental Assessment Model (GLEAM) http://www.fao.org/gleam/results/en/

3. Figure 2 sourced from Wellesley, L., Happer, C., & Froggartt A.2015.Changing Climate, Changing Diets: Pathways to Lower Meat Consumption. Chatham House Report. The Royal Institute of International Affairs.London

4. Scarborough, P., Appleby, P.N., Mizdrak, A. et al. Climatic Change (2014) 125: 179. doi:10.1007/s10584-014-1169-1

5. Wellesley, L., Happer, C., & Froggartt A.2015.Changing Climate, Changing Diets: Pathways to Lower Meat Consumption. Chatham House Report. The Royal Institute of International Affairs.London

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு