எல்லோர் மனதில் யாழ் என்ற பெயர் யாழ்ப்பாண உணவு வகைகளை பிரதிநிதித்துவ படுத்துவதற்காகவே அமையும் என்பதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆம் எமது குழு சைவ உணவு தொடர்பில் ஓர்கண் யாழ் உணவகத்தின் மீதும் கொண்டிருந்தது. ஏனெனில் பொதுவாக யாழ்ப்பாணம் சைவ உணவு வகைகளிற்கு மிகவும் பெயர் போகின்ற இடமாகும். No 56, Vaverst Place , Marine , Colombo 6 இல் அமைந்துள்ள இவ் உணவகம் சைவ மற்றும் அசைவ உணவுகள் அனைத்தையும் யாழ் சுவையுடன் தயாரிப்பதினை நோக்கமாக கொண்டிருக்கின்றது .

எமது “Meatless Monday SL” குழுவிலிருந்து நான் சுரம்யா மற்றும் ரமேஷ் மதிய உணவு தொடர்பில் ஓர் மதிப்புரையை மேற்கொள்வதற்கான நோக்கில் மதிய உணவை உட்கொள்ள சென்றிருந்தோம். நாம் சென்றிருந்தது அதிகமான வெப்ப காலநிலை என்பதால் முதலில் குளிர்பானம் அருந்துவதற்கு ஒப்புக்கொண்டோம் . தர்பூசணி , எலுமிச்சை மற்றும் மாம்பழம் நிறைந்த பானத்தை நாம் தெரிந்து கொண்டோம். அத்துடன் மதிய உணவு தொடர்பிலான மெனு வையும் புரட்டினோம்.


மெனுவில் சைவத்திற்காக வரையறுக்கப்பட்ட உணவு வகைகளில் நான் சைவமரக்கறி பிரைட் சாதத்தை ஐ சுவைக்க விரும்பினேன் . ரமேஷ் சம்பா நிறைந்த மரக்கறி பொதியை பெற்றுக்கொண்டார் . அதே வேலையில் சுரம்யா குத்தரிசி நிறைந்த மரக்கறி உணவை பெற்றார். அங்கு சைவம் சார்ந்த உள்ளூர் மரக்கறிகள் வீட்டில் உட்க்கொள்ளும் சுவையுடன் எம் பார்வைக்கு தென்பட்டது .
யாழ்ப்பாண சைவ உணவுகள் முறையே ஒரு கீரை வகையை சார்ந்த கறிவகை , மஞ்சள் நிறைந்த உவர்பற்ற கறிவகை மற்றும் உறைப்பு கறி என்பன எப்பொழுதும் ஒரு ஆத்மார்த்தமான தூய்மை உணவாக தென்படும் . இதுவே யாழ் உணவகத்தில் நாம் கண்டுகொண்டோம் . ஆரோக்கியம் நிறைந்த சைவ உணவாக எங்கள் கண்களில் தென்பட்டது .



பிரியாணி ஆனது அனைத்து மரக்கறிகளை நறுக்கி அவற்றுள் கலந்திருந்த நிலையில் அவற்றுடன் ஓர் உறைப்பு நிறைந்த மரக்கறியினையும் விநியோகித்திருந்தனர் . ரமேஷ் மற்றும் சுரம்யா ஏனைய அனைத்து மரக்கறிகளுடனும் உட்க்கொண்டிருந்தனர். மற்றைய மரக்கறிகள் ஆரோக்கியத்தன்மையையும் அது சூழலுக்கு எவ்வாறு நன்மை விளைவிக்கும் என்பதில் நான் அவ் மரக்கறிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு விரும்பினேன். உண்மையில் திருப்தியான உணர்வினை நாம் பெற்றுக்கொண்டோம்.

சைவ உணவு என்பதில் ரசம் , பாயசம் இல்லாத சைவ கடைகள் எங்கே உள்ளது ? நாங்கள் அதன் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தோம் . சூடான ரசம் மற்றும் பாயசம் எங்கள் மனதை இன்னும் ஈர்த்தது. பெரும்பாலும் இன்று சிலர் , பாயாசத்திற்கு பசுப்பால் சேர்ப்பதை நாங்கள் அவதானித்திருந்தோம் . அந்த வகையில் பாயாசத்திற்கான உட் பொருட்கள் யாது என சேவையாளியை பார்த்து எங்களுடைய வினாக்கள் திருப்ப பட்டது. ஆம் , அவர் தேங்காய் பாலின் கலப்பு பற்றி தெரிவித்திருந்தார். மிகவும் சுவையான பூரண திருப்தி எங்கள் மூவரில் காணப்பட்டது.


சுரம்யா பழவகை ஏதாவது ” Dessert ” இல் உட்கொள்வதற்கு விரும்பினாள் . அந்தவகையில் பப்பாளி , அன்னாசி , வாழைப்பழம் நிறைந்த ஓர் பழ குவளையை பெற்றிருந்தோம் .

அத்துடன் சைவ உணவு தொடர்பில் ஓர் மதிப்புரையை பெற்றுக்கொள்வதற்கான அறிவை நாம் பெற்றிருந்தோம். சைவ உணவு என்பது எங்கள் மனதில் ஓர் தூய்மையை உணரவைக்கும் செயல் ஆகவும் அமைந்தது.