மீற்லெஸ் மண்டே ஶ்ரீலங்கா – சிலிகான் ட்ரஸ்ட்டின் ஒரு திட்டம்

அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது சாதாரண உணவு முறை மாற்றத்தை காட்டிலும் மிகவும் முக்கியமான வாழ்க்கை முறை மாற்றமாகும். தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்க வழக்கத்துக்கு மாறுவது பல காரணங்களுக்காக நிகழலாம்.

சிலிக்கான் ட்ரஸ்ட் அமைப்பனது எச் எஸ் ஐ இந்தியா அமைப்புடன் இணைந்து மீற்லெஸ் மண்டே நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தத் திட்டம் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கும் வெற்றியின் அடிப்படையில் இலங்கையிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை பல்வேறு கலாசாரங்கள் மதங்கள் பெறுமானங்களை கொண்ட ஒரு சமூகமாகும். பொறுப்புடன் வாழ்தல் மற்றும் இரக்கம் ஆகியவை இலங்கைக்கு புதியவிடயம் அல்ல.  அதன் காரணமாக இலங்கையை பொறுத்தவரையில் அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது மிகவும் இயற்கையானதாகும். இலங்கை இன்னமும் விவசாயம் சூழ்ந்த ஒரு நாடாக இருக்கும் நிலையில் இது மிகவும் இலகுவான விடயமாக காணப்படுகிறது. விலங்குகளின் நலன்புரி பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைத்தல், இலங்கை சமூகம் முன்னெடுக்கக்கூடிய ஆரோக்கியமான வாழ்வு ஆகியவற்றினை நோக்கிய  ஒரு படியாக உலகளவில் முன்னெடுக்கப்படும் மீற்லெஸ்மன்டே திட்டத்துடன் ஒத்து செல்லும்வகையில் வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை தவிர்க்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.

சிலிகான் ட்ரஸ்ட் இயக்கம் தேசிய மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களையும் ஊடக பிரசாரங்களையும் மேற்கொண்டு மக்களுக்கான ஒரு அரங்கத்தை அமைப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

01.அசைவ மற்ற திங்கள் திட்டம் எவ்வாறு விலங்குகளின் உரிமைகளை பாதுகாக்கின்றது

பண்ணை தொழிற்சாலைகள் மிகவும் பாரிய வர்த்தகத்துறையாக மாறியுள்ளது. பண்ணை சொந்தக்காரர்களும் வர்த்தகர்களும் உற்பத்திப் பொருட்களை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவை பாதிப்புகள் நிறைந்தவையாகும் காணப்படுகின்றன. இதற்கு முகம் கொடுக்கக்கூடிய பல்வேறு செயற்பாடுகள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதன் காரணமாக பண்ணை விலங்குகளுக்கு சிந்திக்க முடியாத பாதிப்புகள் ஏற்படும். மீற்லெஸ் மண்டே இவ்வாறான உற்பத்திப் பொருட்களுக்கான கேள்விகளை குறைப்பதாக அமையும் அதேவேளை ஸ்திரமான செயற்பாடுகள் மூலமாக உற்பத்திக்காக இவர்களை ஊக்குவிக்கும்.

02. சூழலுக்கான நலன்கள்.

சூழலுக்கான அசைவமற்ற தெரிவானது ஒவ்வொருவரினதும் காபன் அடிச்சுவட்டின் அளவை வெகுவாக குறைக்கின்றது. இவ்வாறாக வாரத்தில் ஒரு நாள் அசைவத்தை தவிர்ப்பது நாடளாவிய ரீதியில் இருக்கும் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்பட்டால் இவ்வாறான நலன்கள் கிடைக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க முடியும். அத்துடன் நீர் போன்ற வளங்கள் பயன்படுத்தப்படுவதும் குறைவடையும் சந்தர்ப்பம் உள்ளது. ஏனென்றால் பண்ணை ஒன்றை பராமரிக்கும்போது அதற்கு அதிகளவான நீரின் பயன்பாடு தேவையாக உள்ளது. அசைவமற்ற தெளிவினால் இதுகூட குறைவடையும் சாத்தியங்கள் உள்ளன.

பல்வேறு ஆய்வுகள் மூலமாக தொழிற்சாலைகள் மூலமான விவசாய உற்பத்திகள், ஒரு நகரத்தில் ஒரு நாளில் உருவாகும் கழிவுப் பொருட்களுக்கு சமமான கழிவுப் பொருட்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அசைவத்தில் இருந்து  அசைவமற்ற நிலையை நோக்கி செல்வது உலகின் இருப்புக்கு வழிவகுக்கும் பசுமை குடில் வாயு வெளியேற்றத்தை குறைப்பதன் மூலமாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் வெகுவாக குறைவடையும்.

03. உடலாரோக்கிய நலன்கள்

அசைவம் இல்லாத உணவுகளை பின்பற்றுவோர் மறதி, உடற்பருமன், மூட்டுவாதம், உயர் குருதி அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகிய பாதிப்புகளிலிருந்து விலக்கப்பட்டவர்கள் உள்ளனர். மரக்கறிகள் பலன்கள் ஆகியவை இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றினை தடுப்பதற்கான சாத்தியங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் அசைவம் தவிர்க்கப்படும் போது நீரிழிவு போன்ற பொதுவான நோய்களிலிருந்தும் விடுபட முடியும். தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை உட்கொள்வது உள்வாங்கப்படும் மொத்த கலரியின் அளவினை குறைப்பதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளது. அத்துடன் ஆரோக்கியமான உடல்நிலை இதன்மூலம் பேணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீரிழிவு நோயினை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறான நலன்கள் மூலமாக தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்கவழக்கத்தை நோக்கி நகர்வது இவ்வாறான நலன்களை பெற்றுக்கொள்ளும் என்ன சுட்டிக்காட்ட பட்டுள்ளது.

அத்துடன் மகிழ்வானதும் ஆரோக்கியமானதும் கருணை நிறைந்ததுமான சமூகத்தை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்காக உருவாக்குவதற்கும் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் இதன்மூலம் ஒரு நாளில் ஒரு தருணத்தில் சிறந்த உலகினை உருவாக்குவதற்கான மனச்  சாட்சியான முடிவினை எடுப்பதற்கான அவசியத்தையும் அது சுட்டிக்காட்டுகின்றது. மீற்லெஸ் மண்டே நிகழ்ச்சித்திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பான சரியான தகவல்களை வழங்குவதில் , உணவுத் தேவைகள், அசைவமற்ற உணவு முறை தயாரிப்பு படிமுறைகள்,  ஊடகங்களின் வகிபாகம், உள்ளூர் பாடசாலைகளை ஊக்குவித்தல், ஹோட்டல்கள் மற்றும் தனிநபர்களை இந்த செயற்பாடுகளில் இணைத்துக்கொள்ளுதல் போன்றவையும் இந்த விடயத்தில் காணப்படலாம்.  

விலங்குகள் ,சூழல் ஆகியவற்றின் நலன்களுக்காக வாரத்தில் ஒரு நாளை அசைவற்ற நாளாக மாற்றுவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை  தேசிய உலக சமூகத்தினை திசைதிருப்பும் முன்னெடுப்பிற்காக இலங்கையில் பொறுப்புமிக்க சமூகம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியின் அங்கமாக சிலிக்கான் ட்ரஸ்ட் அமைப்பு இந்தத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Sources

http://www.meatlessmonday.com/about-us/why-meatless/

http://www.theguardian.com/lifeandstyle/2010/jul/18/vegetarianism-save-planet-environment

http://www.huffingtonpost.ca/gabriel-wildgen/a-plantbased-diet-in-2016_b_9219944.html

The Triple Whopper Environmental Impact of Global Meat Production

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு