சித்திரை புத்தாண்டின் வாழ்வியல் மற்றும் உணவு முறைகள்.

சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிக்கும் காலம் இவ் சித்திரை புத்தாண்டு ஆகும் . இது எல்லோரும் அறிந்ததே , தமிழ் – சிங்கள பண்டிகையாக காணப்படுகிறது . எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியையும் குடும்பத்தின் உறவினர்களுக்கு இடையில் அன்பை பகிர்ந்து கொள்ளும் ஓர் தருணம் ஆகும் .  இவ் புதுவருட பிறப்பை “சார்வரி புதுவருட பிறப்பு” என்று அழைக்கின்றோம் .இன்றைய தினம் (13.04.2020)வாக்கிய பஞ்சாங்க  படி பி.ப7.26 க்கு உதயம் ஆகின்றது . இன்று உலகை உலுக்கும் COVID 19 எனும் நோயினால் உலகமே பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் நோயினால் பீடிக்கப்பட்டவர்களை மீட்டு எடுக்கும்  ஓர் வருடமாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திப்போமாக !  

இங்கே,குறிப்பாக தமிழர்கள் சித்திரை புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் ?அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இவ் எழுத்துருவின் மூலம் தெரிந்துகொள்வோம் .  சைவ மக்கள் என்ற வகையில் இவ் நன்னாளில் அசைவம் துறந்து சைவ உணவு முறைகளை கடைபிடிப்பதே நியதி ஆகும்.

புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் மருத்து நீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மகிழ்வான தருணத்தை கொண்டிருத்தல் என்பது தமிழர் பண்பாட்டில் குடும்பங்களுக்கு இடையில் காணப்படுகின்றது. இங்கு மருத்துநீர் வைத்து தலைக்கு நீர் ஊற்றல்  என்பது எம்மை சுத்தப்படுத்தும் ஓர் முறையாகவும் முன்னோர்களின் தழுவலை பின்பற்றி வரும் செயன்முறையாகும் . 

மகிழ்வான இவ் தருணம் இனிமையானதாக அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுவையான சிற்றுண்டிகள் போன்ற சைவ உணவுவகைகளை தயாரிப்பது தமிழ் பண்பாடாகும் . குறிப்பாக இறைவனுக்கு படைப்பதற்காக எல்லோர் வீட்டிலும் பொங்கல் மேற்கொள்ளப்படும். இது இனிப்பு சுவையாக இருப்பதுடன் அரிசி , தேங்காய்ப்பால் , சீனி , சர்க்கரை , பயறு  பிளம்ஸ் , கச்சான் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும். இறைவனுக்கு படைத்த பின்பு ஒவ்வோர் குடும்பமும் ஒன்றாக இணைந்து களிப்புடன் அதனை உண்டு மகிழ்வார்கள் . 

புத்தாண்டு என்பது தனி ஒரு குடும்பமாகவோ , நபராகவோ கொண்டாடப்படுவது என்பது சிறந்த காரியம் அல்ல. அயலவர்கள் , உறவினர்கள் என அனைவரது வருகையால் தழைத்தோங்கும் தருணம் அது. எனவே எல்லோர் குடும்பமும் அவர்களது பூரிப்பை பகிர்தல் , அறுசுவை மிக்க பலகார உணவு வகைகளை தயாரித்தல் என்பது வழக்கம்.  பகிர்ந்துண்ணல் என்பது எல்லோர் மனிதம்களின்  பண்பு ஆகும்.  எனவே இவ் புத்தாண்டு தினத்தில் சைவ மக்கள் குறிப்பாக பயித்தம் உருண்டை , அரியதரம் , தோய்ப்பான் , சிப்பி , பால்ரொட்டி , கேசரி  மற்றும் முறுக்கு போன்ற பலகாரங்களை தயாரிப்பார்கள். 

இவை  ஆரோக்கியமான சூழல் உருவாகும் என்பதில் ஒவ்வொரு சிற்றுண்டிகளில் உள்ளடங்கும் பொருட்கள் எடுத்துயம்பும். பயிற்றமா , அரிசிமா, வறுத்த தேங்காய்ப்பூ , சீனி , சர்க்கரை , என்பவற்றை கொண்டு பயிற்றம் உருண்டை தயாரிக்கப்படுகிறது. 

அரிசி மா, அவைத்த கோதுமை மா , சீனி , தேங்காய்ப்பால் என்பவற்றை உள்ளடக்கி அரியதரம் , பால் ரொட்டி (சீனி உள்ளடங்காது)தோய்ப்பான் , சிப்பி என்பவை தயாரிக்க படுகின்றது. 

வறுத்த ரவை , சீனி , நெய் /மாஜரீன் , பாதம் , பிளம்ப்ஸ் , கச்சான்  என்பவற்றை உள்ளடக்கி கேசரி மேற்கொள்ளப்படுகின்றது. இது Vegan உணவு செயன்முறையில் இருந்து   வேறுபட்டது. ஆனால் Vegetarian உணவு  சார்ந்ததாக காணப்படுகின்றது. ஆனால் நெய்க்கு பதிலாக தேங்காய்ப்பாலை கலந்து இதனை தயாரிக்கும் போது இது எமக்கு ஒரு Vegan உணவு வகையை சேர்ந்ததாக பிரதிபலிக்கும். 

மேலும் எல்லாம் இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் நிச்சயம் எல்லோர் குடும்பத்திலும் ஓர் உறைப்பு பலகாரத்தையும் மேற்கொள்வார்கள்.  பெரும்பாலும் முறுக்கு தயாரிக்கடுகின்றது. இது கோதுமை மா / கடலை மா , மிளகாய் தூள் , உப்பு , மிளகுத் தூள் , சீரக தூள்  என்பவற்றை ஒன்றிணைத்து தயாரிக்கப்படுகின்றது. 


இங்கே உணவுக அனைத்தும் ஓர் ஆரோக்கிய உணவுவகையை சார்ந்தவையாக அமைவதையே காணலாம் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விருப்பப்பட்டு உட்கொள்ளும் பலகார வகைகளாகவும் மகிழ்வுடன் எல்லோரும் அந்நாளில் ஒன்றிணைந்து களிப்புடன் உண்ணும் உணவு பொருட்களாக இவை அமைகின்றது என்பதில் அச்சமில்லை. 

இவ் 2020 சித்திரை புத்தாண்டு  என்பது எல்லோருக்கும் ஓர் சவால் நிறைந்த வருடமாக அமைகின்றது. எல்லோரும் பாதுகாப்பாக  வீட்டில் தங்கியிருந்து பழமையான பல தகவல்களை ஆராய்வதிலும் எமது உணவு பழக்கவழக்கங்களில் உள்ள சிறப்பையும் நாங்கள் ஆராய்வது வீண் போகாது. நம் முன்னோர்கள் எவ்வளவு விசேடமாக இதனை கொண்டாடினார்கள் ? அவர்களது உணவு பழக்க வழக்கங்கள்  எத்தகையது ? என்று கேட்டு தெரிந்து கொள்ள இருக்கும் தாத்தா, பாட்டி மிகவும் அதிர்ஷ்டம். ஆம் என்னுடைய இவ் கருத்துக்களும் என் பாட்டி என் அம்மாவிற்கு கூறப்பட்ட விடயங்களின் தொகுப்பாகவே நான் இதை எழுதினேன். 

பாதுகாப்பான உலகை கட்டியமைப்பதற்கான ஓர் பிரார்தனையும் இவ்வருடம் எல்லோர் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இதற்கு ஓர் முற்றுகை இடுகிறேன். 

அனைவருக்கும்  இனிய சார்வரி புதுவருட பிறப்பு நல் வாழ்த்துக்கள்!

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு