
மீட்லெஸ்மண்டே குழுவினர் தமது மதிய உணவினை பெற்றுக் கொள்வதற்காக சிறந்த இடம் ஒன்றினை தேடியபோது குயிக்தாய் அவர்களின் தெரிவாக இருந்தது. கொழும்பில் அமைந்திருக்கும் மெயிட்லான்ட் பிளேசில் அது உள்ளது. அது ஒரு ரெஸ்டாரன்ட் என்பதுடன் தாய்லாந்து உணவுகளை குறிப்பாக அதிர்ச்சி தரும் வகையில் பலவகையான மரக்கறி உணவுகளை வழங்கும் ஒரு இடமாகும்.
உணவுகளும் குடி பானங்களும்
உணவகத்தில் எமது மீட்லெஸ் மண்டே திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக நாம் பொரித்த பீன் தயிர் மற்றும் காளான் ஆகியவற்றை ஆரம்பத்தில் ஓடர் செய்திருந்தோம். அந்த பட்டர் கலந்த காளான் பொரியல் மிகவும் சிறப்பான வகையில் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு உணவுகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதேநேரம் அந்த உணவானது மிகவும் ஆழமாக பொரிக்கப்பட்ட அதேநேரம் பட்டர் மற்றும் மிளகாய் வெள்ளைப் பூடு தக்காளி சோஸ் கலக்கப்பட்டு மிகவும் அழகாக காணப்பட்டது. அதேநேரம் பொரிக்கப்பட்ட அந்த உணவும் மிளகாய் வெள்ளைப்பூடு சோசுடன் சுவையாக காணப்பட்டது.

பிரதான உணவாக நாம் மரக்கறி பிரைட் ரைஸ் ஒன்றிற்கு ஆடர் செய்திருந்தோம் உண்மையில் அசைவம் இல்லாத திங்கள் செய்தியுடன் இணைந்திருப்பதாக அந்த முடிவு எடுக்கப்பட்டது அத்துடன் காளான் (675 ரூபா) மேலும் வெள்ளைப் பூடு கலந்த கங்குன் (725 ரூபா) போன்றவை ஆடர் செய்யப்பட்டிருந்தன. இந்த உணவுகளின் அளவானது இரண்டு அல்லது மூன்று பேருக்கு போதுமானதாக இருந்தது. ஆனாலும் அது ஒவ்வொருவரினதும் அளவினை அடிப்படையாகவே கொண்டு தீர்மானிக்க முடியும். சோறு சரியான வகையில் ஈரலிப்பாகவும் தேவையான அளவில் மசாலாக்களை கொண்டதாகவும் இருந்ததால் மேலதிகமாக சுவையூட்டுவதற்கு எதனையும் சேர்க்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. காளான் வகைகள் மாற்று வழியில் சிந்திப்பதற்கு வழிவகுத்தது. எம்மைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த தெரிவாகவே இருந்தது. இந்த கறியானது சகல மசாலாக்களையும் சரியான முறையில் கொண்டதாக அமைந்தது. தேங்காய் பால் இதற்கு மிகவும் பொருத்தமானதாக காணப்பட்டது. மேலும் இந்தக் கறியானது பிரைட் ரைஸ் உணவுக்கு மிகவும் சரியான தெரிவாகவே இருந்தது என்பதனை நம்மால் உணர முடிந்தது. அதேபோல கீரை வரவேற்கத்தக்க தெரிவாக இருந்த அதேவேளை நன்றாக சமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது.
இங்கு பலவகையான குடிபானங்கள் காணப்படுகின்றன. உடன்குடி பானங்கள் முதல் குளிர்ந்த தேநீர் வரையில் பல பிரிவுகள் காணப்பட்டன. எண்ணைத் தன்மை உடைய இந்த உணவுகள் அனைத்தையும் உட்கொண்ட பின்னர் அந்த கொழுப்புத் தன்மையை நீக்குவதற்காக நாம் கிரீன் டீ ஒன்றுக்கு ஆர்டர் செய்திருந்தோம் அது உண்மையில் அசைவம் இல்லாத திங்கள் உணவுக்கு புத்துணர்ச்சி தரும் முடிவாக இருந்தது.

முடிவு
இந்த உணவின் பின்னர் நாம் மிகவும் மகிழ்வாக இருந்தோம். இந்த சூழல் மிகவும் அமைதியான சூழலாக காணப்பட்டதுடன் போதிய இடத்தினை கொண்டதாகவும் அமைந்திருந்தது. மேலும் இயற்கை ஒளி உள் வருவதற்கான சாத்தியங்களும் அதிகளவில் காணப்பட்டன. உண்மையில் இந்த தாய் உணவகத்தின் சிறப்பு பற்றி கூறுவதாக இருந்தால் சகல விடயங்களையும் கூறமுடியும். மரத்திலான தளபாடங்கள் மூங்கிலாலான மேசை விரிப்புகள் மிகவும் கவர்ச்சிகரமான இருந்தது அதேநேரம் குறித்த உணவகத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர் ஏனெனில் அந்த உணவுகள் சுவையானதாகவும் திருப்திகரமானதாகவும் அமைந்தன.