காலநிலை மாற்ற தணிப்புக்காக இறைச்சி நுகர்வை குறைத்தல்..

ஏப்ரல் 22 ஆம் திகதி எவ்வாறான சிறப்பினை கொண்டிருக்கின்றது என்பதை நோக்கினால், பூமி தினம் என்ற யதார்த்தத்தை காட்டிலும் 170 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் காலநிலை மாற்ற பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் இன்று காணப்படும் சூழ்நிலையானது காலநிலை மாற்றம், மிகவும் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக இருக்கும் நிலையில் சூழலுக்கு இசைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது கணிசமான அளவில் காலநிலை மாற்றத்தினை தடுப்பதில் வகிபாகத்தை கொண்டிருந்தது. விலங்குகள் மீதான கொடூரங்கள் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக சூழல் சம்பந்தமான பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு காலநிலை மாற்றம் உலக வெப்பமயமாதல் விடயங்களில் விலங்குகளின் பங்களிப்பில் பரந்தளவிலான கவலை காணப்படுகிறது.

இறைச்சி கைத்தொழில் மற்றும் பசுமை குடில் வாயு வெளியேற்றங்கள்

காபன் டயோக்சைட், மெதேன், நைட்ரோஸ் ஒக்சைட் வெளியேற்றுங்கள் காரணமாக காலநிலை மாற்றம் பாரியளவான பாதிப்பினை கொண்டிருக்கின்றது. அதேவேளை விலங்குகளின் எண்ணிக்கையானது உணவுக்காக அதிகரிக்கப்பட்டு வருகின்றமை மிக முக்கியமான காரணியாகவும் அமைகின்றன. விலங்குகளின் விநியோகச் சங்கிலி மற்றும் வாழ்க்கை வட்டம் ஆகியவை காரணமாக சூழலுக்கு ஏற்படும் தாக்கங்கள் வருடாந்த உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்திற்கு 51 வீதமான பங்களிப்பினை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையில் உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் இயற்கையான சமி பாட்டு செய்முறை மற்றும் விலங்குகள் தொடர்பான செயற்பாடுகளில் சீரற்ற முகாமைத்துவம் காரணமாக வாயு வெளியேற்றங்கள் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நைட்ரோஸ் ஒக்சைட் வெளியேற்றமானது சீரற்ற முகாமைத்துவம் மற்றும் ஏனைய செயற்பாட்டு முறைகள் பிரயோக முறைகள் காரணமாக ஏற்படுகின்றது. காபன் டயோக்சைட் விலங்குகள் துறையில் எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்று நோக்கினால், விலங்குகளை வளர்க்கும்போது பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் காரணமாக அதேபோல உணவு உற்பத்தி செயற்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் பதனப்படுத்துதல் ஆகியவை காரணமாகும் அது ஏற்படுகின்றது.

தொடர்ச்சியாக விலங்குகள் பண்ணையானது ஒன்பது வீதமான மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட கரியமில வாயு வெளியேற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. அத்துடன் 37 விதமான மனிதர்கள் மூலமான மெதேன் வாயு, 65 வீதமான மனிதர்கள் மூலமான நைட்ரோச் ஒக்சைட் வாயு வெளியேற்றத்திற்கு அது காரணமாக அமைகின்றது. அதுமட்டுமல்லாமல் காடழிவுக்கான முக்கியமான காரணியாகும் பண்ணைகள் காணப்படுகின்றன விவசாய பணிகளில் இருந்து கார்பன் வாயு வெளியேறுதல் போன்ற செயற்பாடுகள் காரணமாகவும் காபன் வெளியேற்ரம் ஏற்படுகின்றது

காலநிலை மாற்றத்துக்கான தீர்வாக உணவுமுறை மாற்றம்.

காலநிலை மாற்றம் குறித்து அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் முக்கியத்துவம் வாய்ந்த அண்மைய அறிக்கையில் உணவு முறை மாற்றத்தின் மூலம் வெளியேற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே நுகர்வினை குறைப்பதற்கான பரந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாததாகும். சூழல் ரீதியிலான ஆபத்துக்களை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை மேம்படுத்தும் வகையில் இதனை முன்னெடுக்க வேண்டும். பல்வேறு ஆய்வுகளின் மூலம் 2050ஆம் ஆண்டில் இறைச்சி நுகர்வானது 75 வீதமாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  2020இல் சீனா மாத்திரம் 20 மில்லியன் இறைச்சி மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை நுகருமென எதிர்பார்க்கப்படுகிறது. 2006 – 2050ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் மனித சனத்தொகையானது 35 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப் பட்டிருக்கும் நிலையில் அந்த எதிர்வுகூறலை முன்வைத்திருக்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த விடயம் காலநிலை மாற்றத்திற்கு நெருக்கடியை வழங்கும் ஒன்றாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது உலகளாவிய ரீதியில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக விலங்குகள் அடிப்படையிலான பசுமைக்குடில் வாயு வெளியேற்றமும் இரட்டிப்பாகும்.

இந்த நிலையில் விலங்குகள் அடிப்படையிலான உற்பத்திகளை வேறு மாற்று வழிகள் மூலம் நிரப்பிக் கொள்வதற்காக செயல்திறன்மிக்க தந்திரோபாயங்கள் முழுமையாக அமுல்படுத்த வேண்டிய தேவை உள்ளது. உணவுக்கு பதிலாக அதன் விகிதாசாரத்தை குறைந்த அளவில்

கொண்டிருக்கும் புரட்சி உணவினை அறிமுகம் செய்வதை காட்டிலும் மிகவும் சரியான தெரிவை மாற்றீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

விலங்குகள் மீதான கொடூரங்களை ஒழிப்பதற்காக விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட பண்ணை துறையினை அல்லது விவசாயத்தினை கட்டுப்படுத்துவது மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் போட்டியான விடயம் அல்ல. உலக வெப்பமயமாதலுக்கு விலங்குகளின் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகின்றது என்பதனையும் அவர்கள் முக்கிய காரணியாக கொள்ள வேண்டும். பூமி தினத்தில் விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாம் பிரசாரங்களை மேற்கொள்ளும் நிலையில் பூமியில் சகல உயிரினங்களினதும் ஸ்திரமான வாழ்வினை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

References

http://www.telegraph.co.uk/technology/2016/04/21/earth-day-2016-five-facts-to-inspire-you-and-how-to-get-involved/

http://www.worldwatch.org/files/pdf/Livestock%20and%20Climate%20Change.pdf

http://www.fao.org/agriculture/lead/themes0/climate/en

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு