ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று நாம் கருத்தில் கொள்ளும் போது எமது அன்றாட வாழ்வின் ஆரோக்கிய செயற்பாடுகளும் சூழலியல் தொடர்பில் எமது இருப்புக்களை நிலைபெறும் வகையில் பாதுகாக்கும் செயற்பாடுகளையும் நாம் உள்ளடக்கிக்கொள்வது அவசியமாகின்றது. இங்கே அனைத்து வாழ் உயிர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நிலையான உற்பத்தி உணவை வழங்கும் போது, ​​இயற்கை வளங்களின் சீரழிவைக் குறைத்து புவியினை பாதுகாக்க  வேண்டிய அவசரத் தேவை எல்லோர் மத்தியிலும் காணப்படுகிறது.

உமிழ்வு, நிலம், நீர் மற்றும் பல்லுயிர் இழப்பு  ஆகியவற்றில் விலங்கு சார்ந்த உணவுகள் முக்கிய பங்கு வகிப்பதால், காலநிலை மாற்றம் மற்றும் வள பிரித்தெடுத்தலுக்கு விவசாயம் பெரிதும் உதவுகிறது என்பது பலதரப்பட்ட ஆய்வு முனைவோரின் கருத்துக்களாக காணப்படுகிறது. ஆம் நிச்சயம் ஓர் முறை சிந்திக்கின்றபோது விவசாயம் என்பது ஒருபடிநிலையில் உதவுகின்றது என்றே கூறமுடியும்.

விலங்கு நலன் உரிமைகளை பேணி பாதுகாப்பது என்பது உலகளவில் கடைபிடித்துவரும் ஒரு முறைமை ஆகும். இன்றைய காலகட்டத்திலும் சரி, கடந்த காலங்களிலும் சரி விலங்கினங்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்வாங்கப்படுகின்றன . அவற்றை  பேணி பாதுகாப்பது என்பது எங்கள்  எல்லோர்களினதும் கடமையாகும். விலங்குகள் இன்று தொழிற்சாலைகள் ,ஆடைத்தொழில் , விலங்கு விவசாயம்  போன்ற பல செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக உலகில் காணப்படும் பண்ணை விலங்குகளில் ” தொழிற்சாலை பண்ணை என்பது கோழிகள் , வான் கோழிகள் ,பசுக்கள் , பன்றிகள்  என்பவற்றை உணவுக்காக வளர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் இரசாயன நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகளாக விலங்குகள் துன்புறுத்தப்படுத்தல் என்பது எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. 

இத்தகைய காரணங்கள் மத்தியில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத உணவு தெரிவு முறைகள் சூழலுக்கும் சுகாதார ரீதியிலும் நன்மையை பெற்றுக்கொடுப்பவையாக காணப்படுகின்றது. அவை மேலும் விலங்குகளின் நன்மைகள் மற்றும் அவ் உயிரினங்களின் சுதந்திரத்துக்கு வழிகொடுப்பவையாகவும் விலங்குகள் சாரதா உணவு முறைகள் அமைகின்றது என்பதில் ஐயமில்லை. அவ்வகையான உணவு முறைகளே விலங்குகளை பாதுகாக்கும் ஓர் உணவு பரம்பல் முறை எனலாம்.  அத்துடன் காலநிலையை கட்டுப்படுத்துவதற்கும் நட்பு முறையிலான செயற்பாடுகளை கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த வகையிலே விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான  உணவு தேர்வு முறையாக  தாவர அடிப்படையிலான உணவு முறைகளை நாம் கூறிக்கொள்ளலாம். இது ஒரு பரஸ்பர அதி உயர் சைவ உணவுமுறையாக பார்க்கப்படுகின்றது. இதனையே வீகன்(Vegan) உணவு என அழைக்கின்றோம். இன்று உலகில் பல மக்களினுடைய உணவுத்தேர்வுகளில் இவ் உணவுவகையை அவர்களது ஆரோக்கியத்துக்காக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாவர அடிப்படையிலான புரதத்தால் நிறைந்த உணவுகளாக காணப்படுவதுடன் விலங்குகளினுடைய தயாரிப்புகள் எதுவும் அற்ற ஓர் அதி உயர் சைவ உணவுக்காக இவ் வீகன் உணவு வகைகள் காணப்படுகின்றன. இவ் தாவர அடிப்படையிலான புரதத்தில் நிறைந்துள்ள வீகன் சைவ உணவுகள் விலங்குகளால் பெறப்பட்ட புரதத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் புரதங்களையும் கொண்டிருக்கவில்லை என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. எனவே இவ் உணவுதெரிவு முறையானது விலங்கு சுரண்டல் மற்றும் அவற்றிற்கு ஏற்படும் கொடுமையை விலக்க முயற்சிக்கும் ஒரு உணவு வாழ்க்கை முறையாக வரையறுக்கப்படுவதுடன் குறிப்பாக விலங்குகளை பாதுகாப்பதற்கான ஓர் மாற்று வழியாக இது அமைகின்றது என்பதையும் நம்பமுடிகின்றது.

மேலும் சைவ உணவு பழக்கம் பல கலாச்சார மனப்பான்மைகளுடன் குறுக்கிடுகிறது, மேலும் உலகம் முழுவதிலும் உள்ள பலரிடமிருந்து வேறுபடுகிறது என்றே கூறலாம். எம்மால் ஒரு சிறிய பகுதியிலான நன்மையையே விலங்குகளுக்கு வகுப்பதற்காக பெயரோடும் நிலையானது ஒரு சிறிய மாற்றத்தில் இருந்து ஓர் பரஸ்பர மரியாதையை கொண்டு வரும் என்பது நிச்சயமாகிறது.

வீகன் உணவு வகைகளை தேர்ந்தெடுப்பதன் பொருட்டு எமது அன்றாட ஆரோக்கிய வாழ்வில் சாத்தியமான மாற்றங்களை கொண்டு வருகின்றது என பல கருத்துக்கள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. எங்களுடைய வாழ்க்கை முறையில் நாம் கடைபிடிக்கும் பல்வேறு வகையான செயற்பாடுகளே ஆரோக்கிய நிலையில் குறுக்கிடுபவையாக காணப்படுகின்றது. அனால் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் உணவு முறைகளில் இவ் வீகன் உணவின் அணுகு முறையானது எவ்வாறு நன்மையை தருகின்றது என்பதை நோக்கும் இடத்து பல நோய்களை கட்டுப்படுத்துவதற்கு தீர்வாக அமைகின்றது .

குறிப்பாக தாவர அடிப்படையிலான உணவுகள் உயர் இரத்த அழுத்தம் , இதய நோய் ,  நீரிழிவு , புற்று நோய் போன்றவற்றை குறைப்பதற்கும் அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கும் சுகாதார ஆரோக்கிய உணவு முறையாக இது ஒரு நம்பகமான தேர்வாக காணப்படுகின்றது. ஏனென்றால் மாமிச உணவுகளில் காணப்படும் கலோரியை விட இவ் உணவுகளில் குறைந்தளவிலான கலோரிகளே காணப்படுகின்றது.  மேலும் விளையாட்டு துறையில் பங்கேற்பவர்களுக்கு அதிகமாக செயல்திறன் ஊட்டத்தினை அளிப்பதில் இவ் வீகன் உணவு தேர்வுகள் முக்கியம் பெறுகின்றன. ஆம் இப்போது எங்களால் நினைத்துப்பார்க்க முடிகின்றது, விளையாட்டு துறையில் இருப்பவர்களை காலையில் ஏன் கடலை முதலான பீன்ஸ் போன்ற தானிய வகையை உண்பதற்கு பயிற்சியாளர்களை சிபாரிசு செய்கின்றனர். அவை ஊட்டச்சத்தினை வழங்குவதாகும் .

மேலும் இவ்வகையான உணவுமுறை தேர்வுகள் சூழலியல் ரீதியிலும் பங்களிப்பு செய்கின்றவையாக காணப்படுகின்றது.  இன்று உலகம் பூராகவும் முகம் கொடுக்கும் ஓர் பிரச்சனையாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது. அவற்றினை தணிப்பதற்கான செயன்முறையில் இவ் வீகன் உணவு வகைகள் மறைமுகமாக பங்களிப்பு செய்கின்றது. அதாவது புவி வெப்பமடைதல், பச்சை வீட்டு விளைவு வாயுக்களை வெளியேற்றத்தினை குறைப்பதற்கு இவை ஒரு மாற்றீடு வழியாக அமைகின்றது. 

எடுத்துக்காட்டாக ‘PETA’ (People for the Ethical Treatment of Animals) இந்த தரவுகளின் அடிப்படையில் விலங்கு விவசாயம் காரணமாக 18 சதவீதமான பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றது. எனவே இவை மொத்த உலகளாவிய போக்குவரத்து துறையில் ஏற்படும் உமிழ்வுகளிற்கு சமனாதாக காணப்படுகின்றது. இவ் தரவுகளின் ஒப்பிடுகை ரீதியில் தாவர அடிப்படையிலான உணவு முறைகளின் சாதகமான காரணிகள் எவ்வாறு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள முடிகின்றது. மேலும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூட ‘2010’ காலப்பகுதியில் விலங்கு விவசாய தொழில் உள்ளூர் முதல் உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்திற்கு சூழலியல் சார்பான பிரச்சனைக்கு பிரதிபலிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியிருந்தது. 

மேலும் கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையில் உணவுகள் தொடர்பில் பச்சை வீட்டு விளைவுகளின் உமிழ்வு எவ்வாறு மாறுபடுகின்றது என்பதனை நோக்கமுடியும்.

குறைந்தளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (Low GhGs)நடுத்தர அளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (Middle GhGs)உயரளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (High GhGs)
1Kg Co21-4 kg Co24 kg Co2
உருளைக்கிழங்குபாஸ்தாபாண்ஓட்ஸ்பிற தானியங்கள்காய்கறிகள்:- (வெங்காயம், பட்டாணி,கரட், சோளம் )பழங்கள்: (அப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், திராட்சை)பீன்ஸ் / பயறுகோழி இறைச்சி பால் , வெண்ணை, தயிர் முட்டை அரிசி நட்ஸ் பிஸ்கட் கேக் பழங்கள் : வாழைப்பழம் , பெரி , முலாம்பழம் காய்கறி : காளான்கள், பச்சை பீன்ஸ் , ப்ரோக்கோலிமாட்டிறைச்சி ஆட்டிறைச்சி பண்டி இறைச்சி மீன் சீஸ்

தரவுகள் மூலம் : NCBI

மேலே காட்டப்பட்ட தரவுகளின் வாயிலாக குறைந்தளவிலான பச்சை வீட்டு வாயுக்களின் உமிழ்வு தாவரம் சார்ந்த உணவுகளில் காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்ட முடியும். அதற்கு மேலாக உணவுக்காக சுரண்டப்படும் மீனினங்களின் வீழ்ச்சியை பார்க்கின்ற போது உலகின் முக்காவாசி மீனினங்கள் சுரண்டப்படுகின்றது. இங்கே எதிர்காலத்தின் இருப்பு என்பது உறுதி செய்யப்படுகின்றது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

அத்துடன் கால்நடை பிராணிகளான   கோழிகளிருந்து புரதத்தை உற்பத்தி செய்வதற்கு சோயாபீன்களில் இருந்து புரதத்தை உற்பத்தி செய்வதை விட மூன்று மடங்கு நிலப்பகுதி தேவைப்படுகின்றது. இதனால் பல இயற்கை பல்லுயிர் இனங்கள் சுரண்டப்பட்டு சூழல் சமநிலையில் மறைமுகமாக தாக்கத்தை உண்டுபண்ணுகின்றது.காலநிலை மாற்றத்தைத் தணிக்க பங்களிக்கும் உணவு மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு பொதுவான மேற்கத்திய உணவில் இருந்து குறைந்த இறைச்சி மற்றும் அதிக தாவரங்களைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு நிலையான உணவுப்பழக்கத்தையும் கவனத்தில் கொள்வது மிகவும் சிறந்ததாக அமையும் எனலாம்.

ஆரோக்கியமான உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது எளிமையான அணுகுமுறைகளில் ஒன்றாகும். எனவே தாவர அடிபையிலான உணவு முறைகள் சூழலுக்கு நன்மையை பயக்கின்றது என்பதுடன் காலநிலை மாற்றத்தினை தணிப்பதற்கு மறைமுகமாக அதனுடைய பங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் மூலம் கண்டுகொள்ள முடிகின்றது. 

சைவ உணவுகள் எமது அன்றாட வாழ்வில் நன்மை என்பதும் இவை விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத அவர்களுடைய சுதந்திரத்திற்கு வழிவகுக்கின்ற அதி உயர் உணவு முறையாக பார்க்கப்படுகின்றது. நிச்சயமாக அனைத்து உணவுக்காக வளர்க்கப்படும் விலங்கினங்களை காப்பாற்ற முடியாது. ஆனால் எம்மால் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்ற மனித நேயத்தில் வாரத்தில் இரண்டு தடவையாவது நாம் இவ் உணவுவகை தேர்வுகளை பழக்கிக்கொள்ளுதல் விலங்குகளின் வாழ்க்கைக்கான முக்கிய ஓர் விழிப்புணர்வு செய்தியாக நாங்கள் கருதலாம். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக நிலையான உணவு தேர்வுகளை செய்வதே ஒரு நல்ல பரிமாற்றம் ஆகும். 

உசாத்துணை நூல்கள்

  • N Meyer, A Reguant-Closa – Nutrients, 2017 – mdpi.com
  • NL Meyer – ACSM’s Health & Fitness Journal, 2015 – journals.lww.com
  • Nemecek T., Dubois D., Huguenin-Elie O., Gaillard G. Life cycle assessment of Swiss farming systems: I. Integrated and organic farming. Agric. Syst. 2011;104:217–232. doi: 10.1016/j.agsy.2010.10.002. 
  • Meatless Mondays. [(accessed on 10 August 2016)]; Available online: www.meatlessmonday.com.
On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு