எம்மைப்பற்றி

தாவரங்கள்மூலமான உனவுகலின் நன்மைகள் , சூழல், மற்ரும் ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்தல் மற்றும் இறைச்சி நுகர்வினை குறைத்தல் ஆகியவற்றினை பிரதான இலக்காக கொண்ட உலகளாவிய மீட்லெஸ்மண்டே  பிரசார நடவடிக்கைகளின் வெற்ரியின் பலனாக மீட்லெஸ்மண்டே ஶ்ரீலங்கா உருவாக்கப்பட்டது

உலகளாவிய ரீதியில் விலங்குகளின் நலன்புரியினை ஊக்குவிப்பதன் ஊடாக துன்புறுத்தலற்ற வாழ்வதற்கான சூழலை விலங்குகளுக்கு அமைத்தல் , மற்றும் சகல விலங்குகளையும் பாதுகாத்தலை நோக்கி செயற்படும்  முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஹியூமானே சொசைட்டி இன்டர்நேஷனல் / Humane Society International (HSI)  , நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சிலிக்கான் ட்ரஸ்ட்(SLYCAN Trust) அமைப்பானது  செயற்திறன் மிக்க பங்களிப்பினை வழங்கி  வரும் இலங்கையின் விலங்குகளின் நலன்புரி தொடர்பான செயற்பாடுகளுடன் இணங்க காலநிலை மாற்றத்தின் மிகமோசமான தாக்கங்கள் ,ஆரோக்கியம் மற்றும் விலங்குகள் மீதான துன்புறுத்தல்கள் ஆகிய விடயங்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவுகளை நோக்கி செல்லவேண்டிய தேவை மீதான பிரசார மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மீற்லெஸ்மண்டே திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தனிபட்ட ஆரோக்கியம், சூழல்,மற்றும் விலங்குகளின் நலன்புரி ஆகிய நன்மைகள் இதன்மூலம் கிடைக்கப்பெறுகிறது என்ற  புரிதலுடன்  நுகர்வோர் வாரத்தில் ஒரு நாள் அசைவமற்ற உணவினை உண்ண வேண்டும் என்பதே  இந்த பிரசாரநடவடிக்கையின் முக்கிய விண்ணப்பம் அல்லது கோரிக்கையாகும்.