ஆரோக்கியமும் கருணையும் நிறைந்த இலங்கைக்காக….


பாக்யா விக்கிரமசிங்க – (name of the author)

அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது சாதாரண உணவு முறை மாற்றத்தை காட்டிலும் மிகவும் முக்கியமான வாழ்க்கை முறை மாற்றமாகும். தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்க வழக்கத்துக்கு மாறுவது பல காரணங்களுக்காக நிகழலாம். இலங்கை பல்வேறு கலாசாரங்கள் மதங்கள் பெறுமானங்களை கொண்ட ஒரு சமூகமாகும். பொறுப்புடன் வாழ்தல் மற்றும் இரக்கம் ஆகியவை இலங்கைக்கு புதியவிடயம் அல்ல.  அதன் காரணமாக இலங்கையை பொறுத்தவரையில் அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது மிகவும் இயற்கையானதாகும். இலங்கை இன்னமும் விவசாயம் சூழ்ந்த ஒரு நாடாக இருக்கும் நிலையில் இது மிகவும் இலகுவான விடயமாக காணப்படுகிறது. விலங்குகளின் நலன்புரி பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைத்தல், இலங்கை சமூகம் முன்னெடுக்கக்கூடிய ஆரோக்கியமான வாழ்வு ஆகியவற்றினை நோக்கிய ஒரு படியாக உலகளவில் முன்னெடுக்கப்படும் மீற்லெஸ்மன்டே திட்டத்துடன் ஒத்து செல்லும்வகையில் வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை தவிர்க்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.

தாவர அடிப்படையிலான உணவின் பலன்கள்

தாவர அடிப்படையிலான உணவுக்கு ஒரு முறை தேர்வு செய்வது பல நன்மைகளை தரும், குறிப்பாக விலங்குகளின் பாதுகாப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களை விட்டு வெளியேறுவதன் மூலம் உடலாரோக்கியத்தை மேம்படுத்தல், பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் , காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு இசைவாக்கமடைதல் மற்றும் சூழலை பாதுகாத்தல், வாரத்தில் ஒரு நாளைக்காவது தாவர அடிப்படையிலான உணவை பெறுவதன் மூலம்  சாத்தியமான மற்றும் அதிக  உடலரோக்கிய நன்மைகளை பெற முடியும்.

மீற்லெஸ் மண்டே மூலம் கிடைக்கும் மிக முக்கியமான நேரடி தாக்கங்களில் ஒன்றாக விலங்குகளின் நலன்புரியிலக்கறையுள்ள ஒரு  சமூகத்தை செயற்திறன் மிக்கதாக உருவாக்க முடியும். தாவர அடிப்படையிலான உணவை நோக்கி நகரும்போது சூழல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் பாரிய தாக்கங்களேற்படுகின்றன. அசைவ உணவு நுகர்வை குறைப்பதன் மூலம்  காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மிகமோசமான விளைவுகளை கட்டுப்படுத்தவும் அதற்கான இசைவாக்கமடைதலையும் நோக்கிய பண்புகளில் தனி நபர்களின் பங்களிப்புக்கள் கணிசமான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவகையிலான பங்களிப்பினை வழங்கமுடியுமென காலநிலை மாற்றம் மீதான நிபுணர்கள் குழு கூறுகின்றமை ஆகியவை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இறைச்சி நுகர்வை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை தழுவி மற்றும் குறைப்பதை நோக்கி கணிசமான தனிப்பட்ட பங்களிப்பை நோக்கி வழிவகுக்கலாம்.

அசைவமற்ற உணவை  தெரிவு செய்தல் & வெளியேற்றங்களை குறைத்தல்

கன்சா (CANSA) என்ற அமைப்பின் கொள்கை மற்றும் பிரசார இணைப்பாளரான திருமதி வொசிதா விஜேநாயக்க, இந்த விடயம் தொடர்பாக கருத்துக்களை வெளியிடும்போது,  அதாவது அசைவமற்ற உணவின் மூலமாக சுற்றுச்சூழலுக்கான நன்மைகள், அதேவேளை காலநிலை மாற்றத்தை நோக்கிய நகர்வுகள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பாக அவர் குறிப்பிடும்போது விலங்குகள் பண்ணையானது காலநிலை மாற்றம் தொடர்பான மிகவும் முக்கியமான தாக்கங்களை கொண்டிருந்தது. அதேவேளை பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் மிகவும் முக்கியமான வகிபாகத்தினை அது கொண்டிருந்ததையும் ஏற்க முடிந்தது. இது போன்ற சில முன்னெடுப்புக்கள் மூலம் உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஆளுமையை அது கொண்டிருந்தது. அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களை பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவதற்கும் அது உதவியாக இருந்தது. விலங்கு பண்ணையானது குறிப்பிடத்தக்க அளவிலான இயற்கை வளங்களை அதேவேளை காடுகளை அழித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவதாகவும் இருந்தது. அத்துடன் காற்று மற்றும் நீர் ஆகியவற்றிற்கு இதன்மூலம் கேடுகள் விளைவிப்பதற்கான சாத்தியங்களும் அதிகளவில் காணப்பட்டன.

வொசித்தா விஜேநாயக்கா மேலும் குறிப்பிடுகையில், இவ்வாறான செயற்பாடுகளில் தாக்கங்கள் பக்கங்கள் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தின் மீதான மிக மோசமான தாக்கங்கள் ஆகியவற்றை நோக்கிய விளைவுகளை கொண்டவர் சுழற்சிமுறை செயற்பாடுகளாக இவை காணப்பட்டன விலங்குகளிலிருந்து நாம் விலகி நிற்கும் போது அல்லது இதன்மூலம் நாம் விலகி நிற்கும் போது காலநிலை மாற்றத்தில் இருந்து ஏற்படும் பாதிப்புகளை முகம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இதில் கொள்வதற்குரிய உதவியினை இது வழங்குவதாக உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை வடிவத்துக்கு மாறுதல்

பணி நெருக்கடி உடைய இன்றைய இந்த உலகில் ஆரோக்கியமானதும் போஷணை உடையதுமான உணவினை உண்ணும் பழக்கவழக்கம் மக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் அசைவற்ற உணவு பழக்க வழக்கம் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை நோக்கிய ஒரு நகர்வாக அமையும் அசைவமற்ற உணவினை நோக்கி செல்வதன் மூலம் பல எண்ணிக்கையிலான ஆரோக்கியமான பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

விளையாட்டு சமாதானம் கல்வி ஊக்குவிப்பு மற்றும் அபிவிருத்தி என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவரான திரு பிரியந்த பத்திரன குறிப்பிடும்போது, இன்றைய நவீன சமூகத்தின் மத்தியில் மக்கள் தமது ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதற்கு ஆரம்பித்துள்ளனர். இதில் உடல்ரீதியான செயற்பாடுகள் குறைக்கப்பட்டு உணவு நுகர்வு வழிமுறைகள் பல வடிவங்களில் உள்வாங்கப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்ட உணவு ஒருவருடைய உடல் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. உடல் பருமன் உடலில் கொழுப்பு மட்டும் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இதன் மூலமாக அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் மூலமான செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஆகியவை காணப்படாத நிலையில் இது மேலும் இருமடங்காக அதிகரிக்கின்றது.

அதாவது ஆரோக்கியம் மற்றும் ஏனைய பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து தவறி இருக்கும் சமூகத்தை காணமுடிகின்றது. அத்துடன் சிறுவர்கள் உட்பட உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் சமூகம் அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கொண்ட வாழ்க்கை முறை ஒன்றை பின்பற்றுவதற்கு ஒவ்வொரு உணவு தொடர்பாகவும் நீங்கள் மிகவும் சரியான தெளிவினை மேற்கொள்ள வேண்டும் அதாவது ஒருவருடைய சுய மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பினை வழங்கும் வகையிலான முயற்சியாக இது முன்னெடுக்கப்படும்.தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்கவழக்கத்தை நோக்கி நகரும் செயற்பாட்டின் ஸ்திரமான பெறுமானங்கள் இந்த நலன்கள் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன் சிறந்த ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஒரு சந்தர்ப்பத்தில் மனச்சாட்சி உடைய முடிவினை எடுப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மீற்லெஸ் மண்டே என்ற இயக்கம் மகிழ்ச்சியானதும் ஆரோக்கியமானதும் கருணை நிறைந்ததுமான சமூகம் அனைவருக்கும் உருவாக்கப்படுவதற்கான சிறந்த வழிமுறையாக உள்ளது. அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சிறந்ததாகவே அமையும்.

On Key

Related Posts

தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம்

இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று

‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு