ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது  தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று நாம் கருத்தில் கொள்ளும் போது எமது அன்றாட வாழ்வின் ஆரோக்கிய செயற்பாடுகளும் சூழலியல் தொடர்பில் எமது இருப்புக்களை நிலைபெறும் வகையில் பாதுகாக்கும் செயற்பாடுகளையும் நாம் உள்ளடக்கிக்கொள்வது அவசியமாகின்றது. இங்கே அனைத்து வாழ் உயிர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நிலையான உற்பத்தி உணவை வழங்கும் போது, ​​இயற்கை வளங்களின் சீரழிவைக் குறைத்து புவியினை பாதுகாக்க  வேண்டிய அவசரத் தேவை எல்லோர் மத்தியிலும் காணப்படுகிறது.

உமிழ்வு, நிலம், நீர் மற்றும் பல்லுயிர் இழப்பு  ஆகியவற்றில் விலங்கு சார்ந்த உணவுகள் முக்கிய பங்கு வகிப்பதால், காலநிலை மாற்றம் மற்றும் வள பிரித்தெடுத்தலுக்கு விவசாயம் பெரிதும் உதவுகிறது என்பது பலதரப்பட்ட ஆய்வு முனைவோரின் கருத்துக்களாக காணப்படுகிறது. ஆம் நிச்சயம் ஓர் முறை சிந்திக்கின்றபோது விவசாயம் என்பது ஒருபடிநிலையில் உதவுகின்றது என்றே கூறமுடியும்.

விலங்கு நலன் உரிமைகளை பேணி பாதுகாப்பது என்பது உலகளவில் கடைபிடித்துவரும் ஒரு முறைமை ஆகும். இன்றைய காலகட்டத்திலும் சரி, கடந்த காலங்களிலும் சரி விலங்கினங்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்வாங்கப்படுகின்றன . அவற்றை  பேணி பாதுகாப்பது என்பது எங்கள்  எல்லோர்களினதும் கடமையாகும். விலங்குகள் இன்று தொழிற்சாலைகள் ,ஆடைத்தொழில் , விலங்கு விவசாயம்  போன்ற பல செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக உலகில் காணப்படும் பண்ணை விலங்குகளில் ” தொழிற்சாலை பண்ணை என்பது கோழிகள் , வான் கோழிகள் ,பசுக்கள் , பன்றிகள்  என்பவற்றை உணவுக்காக வளர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் இரசாயன நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகளாக விலங்குகள் துன்புறுத்தப்படுத்தல் என்பது எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. 

இத்தகைய காரணங்கள் மத்தியில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத உணவு தெரிவு முறைகள் சூழலுக்கும் சுகாதார ரீதியிலும் நன்மையை பெற்றுக்கொடுப்பவையாக காணப்படுகின்றது. அவை மேலும் விலங்குகளின் நன்மைகள் மற்றும் அவ் உயிரினங்களின் சுதந்திரத்துக்கு வழிகொடுப்பவையாகவும் விலங்குகள் சாரதா உணவு முறைகள் அமைகின்றது என்பதில் ஐயமில்லை. அவ்வகையான உணவு முறைகளே விலங்குகளை பாதுகாக்கும் ஓர் உணவு பரம்பல் முறை எனலாம்.  அத்துடன் காலநிலையை கட்டுப்படுத்துவதற்கும் நட்பு முறையிலான செயற்பாடுகளை கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த வகையிலே விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான  உணவு தேர்வு முறையாக  தாவர அடிப்படையிலான உணவு முறைகளை நாம் கூறிக்கொள்ளலாம். இது ஒரு பரஸ்பர அதி உயர் சைவ உணவுமுறையாக பார்க்கப்படுகின்றது. இதனையே வீகன்(Vegan) உணவு என அழைக்கின்றோம். இன்று உலகில் பல மக்களினுடைய உணவுத்தேர்வுகளில் இவ் உணவுவகையை அவர்களது ஆரோக்கியத்துக்காக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாவர அடிப்படையிலான புரதத்தால் நிறைந்த உணவுகளாக காணப்படுவதுடன் விலங்குகளினுடைய தயாரிப்புகள் எதுவும் அற்ற ஓர் அதி உயர் சைவ உணவுக்காக இவ் வீகன் உணவு வகைகள் காணப்படுகின்றன. இவ் தாவர அடிப்படையிலான புரதத்தில் நிறைந்துள்ள வீகன் சைவ உணவுகள் விலங்குகளால் பெறப்பட்ட புரதத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் புரதங்களையும் கொண்டிருக்கவில்லை என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. எனவே இவ் உணவுதெரிவு முறையானது விலங்கு சுரண்டல் மற்றும் அவற்றிற்கு ஏற்படும் கொடுமையை விலக்க முயற்சிக்கும் ஒரு உணவு வாழ்க்கை முறையாக வரையறுக்கப்படுவதுடன் குறிப்பாக விலங்குகளை பாதுகாப்பதற்கான ஓர் மாற்று வழியாக இது அமைகின்றது என்பதையும் நம்பமுடிகின்றது.

மேலும் சைவ உணவு பழக்கம் பல கலாச்சார மனப்பான்மைகளுடன் குறுக்கிடுகிறது, மேலும் உலகம் முழுவதிலும் உள்ள பலரிடமிருந்து வேறுபடுகிறது என்றே கூறலாம். எம்மால் ஒரு சிறிய பகுதியிலான நன்மையையே விலங்குகளுக்கு வகுப்பதற்காக பெயரோடும் நிலையானது ஒரு சிறிய மாற்றத்தில் இருந்து ஓர் பரஸ்பர மரியாதையை கொண்டு வரும் என்பது நிச்சயமாகிறது.

வீகன் உணவு வகைகளை தேர்ந்தெடுப்பதன் பொருட்டு எமது அன்றாட ஆரோக்கிய வாழ்வில் சாத்தியமான மாற்றங்களை கொண்டு வருகின்றது என பல கருத்துக்கள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. எங்களுடைய வாழ்க்கை முறையில் நாம் கடைபிடிக்கும் பல்வேறு வகையான செயற்பாடுகளே ஆரோக்கிய நிலையில் குறுக்கிடுபவையாக காணப்படுகின்றது. அனால் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் உணவு முறைகளில் இவ் வீகன் உணவின் அணுகு முறையானது எவ்வாறு நன்மையை தருகின்றது என்பதை நோக்கும் இடத்து பல நோய்களை கட்டுப்படுத்துவதற்கு தீர்வாக அமைகின்றது .

குறிப்பாக தாவர அடிப்படையிலான உணவுகள் உயர் இரத்த அழுத்தம் , இதய நோய் ,  நீரிழிவு , புற்று நோய் போன்றவற்றை குறைப்பதற்கும் அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கும் சுகாதார ஆரோக்கிய உணவு முறையாக இது ஒரு நம்பகமான தேர்வாக காணப்படுகின்றது. ஏனென்றால் மாமிச உணவுகளில் காணப்படும் கலோரியை விட இவ் உணவுகளில் குறைந்தளவிலான கலோரிகளே காணப்படுகின்றது.  மேலும் விளையாட்டு துறையில் பங்கேற்பவர்களுக்கு அதிகமாக செயல்திறன் ஊட்டத்தினை அளிப்பதில் இவ் வீகன் உணவு தேர்வுகள் முக்கியம் பெறுகின்றன. ஆம் இப்போது எங்களால் நினைத்துப்பார்க்க முடிகின்றது, விளையாட்டு துறையில் இருப்பவர்களை காலையில் ஏன் கடலை முதலான பீன்ஸ் போன்ற தானிய வகையை உண்பதற்கு பயிற்சியாளர்களை சிபாரிசு செய்கின்றனர். அவை ஊட்டச்சத்தினை வழங்குவதாகும் .

மேலும் இவ்வகையான உணவுமுறை தேர்வுகள் சூழலியல் ரீதியிலும் பங்களிப்பு செய்கின்றவையாக காணப்படுகின்றது.  இன்று உலகம் பூராகவும் முகம் கொடுக்கும் ஓர் பிரச்சனையாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது. அவற்றினை தணிப்பதற்கான செயன்முறையில் இவ் வீகன் உணவு வகைகள் மறைமுகமாக பங்களிப்பு செய்கின்றது. அதாவது புவி வெப்பமடைதல், பச்சை வீட்டு விளைவு வாயுக்களை வெளியேற்றத்தினை குறைப்பதற்கு இவை ஒரு மாற்றீடு வழியாக அமைகின்றது. 

எடுத்துக்காட்டாக ‘PETA’ (People for the Ethical Treatment of Animals) இந்த தரவுகளின் அடிப்படையில் விலங்கு விவசாயம் காரணமாக 18 சதவீதமான பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றது. எனவே இவை மொத்த உலகளாவிய போக்குவரத்து துறையில் ஏற்படும் உமிழ்வுகளிற்கு சமனாதாக காணப்படுகின்றது. இவ் தரவுகளின் ஒப்பிடுகை ரீதியில் தாவர அடிப்படையிலான உணவு முறைகளின் சாதகமான காரணிகள் எவ்வாறு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள முடிகின்றது. மேலும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூட ‘2010’ காலப்பகுதியில் விலங்கு விவசாய தொழில் உள்ளூர் முதல் உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்திற்கு சூழலியல் சார்பான பிரச்சனைக்கு பிரதிபலிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியிருந்தது. 

மேலும் கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையில் உணவுகள் தொடர்பில் பச்சை வீட்டு விளைவுகளின் உமிழ்வு எவ்வாறு மாறுபடுகின்றது என்பதனை நோக்கமுடியும்.

குறைந்தளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (Low GhGs)நடுத்தர அளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (Middle GhGs)உயரளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (High GhGs)
1Kg Co21-4 kg Co24 kg Co2
உருளைக்கிழங்குபாஸ்தாபாண்ஓட்ஸ்பிற தானியங்கள்காய்கறிகள்:- (வெங்காயம், பட்டாணி,கரட், சோளம் )பழங்கள்: (அப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், திராட்சை)பீன்ஸ் / பயறுகோழி இறைச்சி பால் , வெண்ணை, தயிர் முட்டை அரிசி நட்ஸ் பிஸ்கட் கேக் பழங்கள் : வாழைப்பழம் , பெரி , முலாம்பழம் காய்கறி : காளான்கள், பச்சை பீன்ஸ் , ப்ரோக்கோலிமாட்டிறைச்சி ஆட்டிறைச்சி பண்டி இறைச்சி மீன் சீஸ்

தரவுகள் மூலம் : NCBI

மேலே காட்டப்பட்ட தரவுகளின் வாயிலாக குறைந்தளவிலான பச்சை வீட்டு வாயுக்களின் உமிழ்வு தாவரம் சார்ந்த உணவுகளில் காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்ட முடியும். அதற்கு மேலாக உணவுக்காக சுரண்டப்படும் மீனினங்களின் வீழ்ச்சியை பார்க்கின்ற போது உலகின் முக்காவாசி மீனினங்கள் சுரண்டப்படுகின்றது. இங்கே எதிர்காலத்தின் இருப்பு என்பது உறுதி செய்யப்படுகின்றது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

அத்துடன் கால்நடை பிராணிகளான   கோழிகளிருந்து புரதத்தை உற்பத்தி செய்வதற்கு சோயாபீன்களில் இருந்து புரதத்தை உற்பத்தி செய்வதை விட மூன்று மடங்கு நிலப்பகுதி தேவைப்படுகின்றது. இதனால் பல இயற்கை பல்லுயிர் இனங்கள் சுரண்டப்பட்டு சூழல் சமநிலையில் மறைமுகமாக தாக்கத்தை உண்டுபண்ணுகின்றது.காலநிலை மாற்றத்தைத் தணிக்க பங்களிக்கும் உணவு மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு பொதுவான மேற்கத்திய உணவில் இருந்து குறைந்த இறைச்சி மற்றும் அதிக தாவரங்களைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு நிலையான உணவுப்பழக்கத்தையும் கவனத்தில் கொள்வது மிகவும் சிறந்ததாக அமையும் எனலாம்.

ஆரோக்கியமான உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது எளிமையான அணுகுமுறைகளில் ஒன்றாகும். எனவே தாவர அடிபையிலான உணவு முறைகள் சூழலுக்கு நன்மையை பயக்கின்றது என்பதுடன் காலநிலை மாற்றத்தினை தணிப்பதற்கு மறைமுகமாக அதனுடைய பங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் மூலம் கண்டுகொள்ள முடிகின்றது. 

சைவ உணவுகள் எமது அன்றாட வாழ்வில் நன்மை என்பதும் இவை விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத அவர்களுடைய சுதந்திரத்திற்கு வழிவகுக்கின்ற அதி உயர் உணவு முறையாக பார்க்கப்படுகின்றது. நிச்சயமாக அனைத்து உணவுக்காக வளர்க்கப்படும் விலங்கினங்களை காப்பாற்ற முடியாது. ஆனால் எம்மால் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்ற மனித நேயத்தில் வாரத்தில் இரண்டு தடவையாவது நாம் இவ் உணவுவகை தேர்வுகளை பழக்கிக்கொள்ளுதல் விலங்குகளின் வாழ்க்கைக்கான முக்கிய ஓர் விழிப்புணர்வு செய்தியாக நாங்கள் கருதலாம். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக நிலையான உணவு தேர்வுகளை செய்வதே ஒரு நல்ல பரிமாற்றம் ஆகும். 

உசாத்துணை நூல்கள்

  • N Meyer, A Reguant-Closa – Nutrients, 2017 – mdpi.com
  • NL Meyer – ACSM’s Health & Fitness Journal, 2015 – journals.lww.com
  • Nemecek T., Dubois D., Huguenin-Elie O., Gaillard G. Life cycle assessment of Swiss farming systems: I. Integrated and organic farming. Agric. Syst. 2011;104:217–232. doi: 10.1016/j.agsy.2010.10.002. 
  • Meatless Mondays. [(accessed on 10 August 2016)]; Available online: www.meatlessmonday.com.
வெசாக் தினத்தில் அமையும் “தன்சல்” எனும்  நன்கொடை பற்றிய ஓர் பார்வை

வெசாக் தினத்தில் அமையும் “தன்சல்” எனும் நன்கொடை பற்றிய ஓர் பார்வை

வெசாக் என்பது ஒரு மத மற்றும் கலாச்சார விழாவாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் வைகாசி மாதத்தில் முழு பௌர்ணமி நாளில் பௌத்த மதத்தினரால் அனுஷ்ட்டிக்கப்படுகிறது . இவ் தினம் ஆனது கவுதம புத்தரின் ஜனனம் , ஞானம் , முத்தி நிலைக்கு செல்வதை நினைவு கூறுகின்றது. சிறப்பாக இறை புத்தர் தனது காலத்தில் பிரசகித்த நல்வாழ்வு மற்றும் நல்ல நடைமுறைகளை எடுத்துயம்புகின்றது. இவ் தினம் ஆனது இலங்கையில் மட்டும் அல்லாது சிங்கப்பூர் , தாய்வான் , இந்தியா , யப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இவ் போயா  நாளில் இலங்கையில் பௌத்த சமயத்தவர்களின் வீடுகளில் மற்றும் தெருக்களில் வெசாக் கூடு என்று அழைக்கப்படும் வெசாக் விளக்குகள் ஏற்றப்படுகின்றது.  “ Dhamma “  புத்தரின் நினைவுக்கு ஒரு பிரசாதத்தை இவ் விளக்குகள் குறிக்கின்றன . பண்டைய காலங்களில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன . அதனை தொடர்ந்து வர்ணமயமான விளக்குகள்  வடிவங்களில் செய்யப்படடன.   பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பௌத்த மதத்தினரின் வாழ்வில் ஓர் தூய்மையை பிரதிபலிக்கும் வெண்மையான ஆடையும் பார்ப்பதற்கு சமாதானத்தை எல்லோர் மனதிலும் இறை புத்தர் வடிவில் நிலை பெற செய்யும் என்பதில் உறுதியானது. 

சிறப்பாக இவ் வெசாக் தினத்தின் போது நன்கொடைகள் , யாத்திரைகள் மற்றும் கிராம புறங்களில் இருந்து நகரங்களுக்கு பார்வையிடும் ஒரு பருவத்தை குறிக்கின்றது. மேலும் இவ் தினத்தில் தன்சல் வழங்குவது மிகவும் ஆத்மார்த்தமான புத்தபெருமானிற்கான கடமை என நினைவுபடுத்துகிறார்கள். தன்சல் என்பது உணவு , பானங்கள் , மற்றும் இனிப்புடன் கூடிய ஸ்டால்கள் ஆகும். இது தெருக்களில் அழகான கூடாரங்களை கொண்டு வடிவமைத்த மக்களிற்கு அவர்களது அன்பை பகிர்ந்துகொள்வதற்கும் அவ் உணவுகளை அவர்களுக்கு வழங்குவதாகவும் இது காணப்படுகிறது. பெரும்பாலான தன்சால் மாலையில் திறக்கப்படுகிறது, மக்கள் வெசாக் அலங்காரங்களைக் காண பயணிக்கும்போது அவர்களுக்கு உணவை பரிசளிப்பதாகவும் இது அமைகின்றது எனலாம் .

ஸ்டால்களில் பலவகையான சைவஉணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அட்டவணைகள் மற்றும் நாற்காலிகள் கொண்ட ஒரு மூடப்பட்ட இடத்தில் அரிசி மற்றும் கறியின் முழு உணவு, அல்லது வேகவைத்த பயறு அல்லது வேர் காய்கறிகளின் சிற்றுண்டி உணவு ஆகியவை மிகவும் பொதுவானவை. ஐஸ்கிரீம்  மற்றும் தேநீர்  பானங்கள் சாலையோரங்களால் வழங்கப்படுகின்றன. “தன்சலில் உணவை உட்கொள்வது என்ற கருத்து இனி ஏழைகளுக்கோ அல்லது பயணிகளுக்கோ கட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் மக்கள் மற்றும் சமூகங்களின் அனைத்து குறுக்கு பிரிவுகளுக்கும் திறந்திருக்கும்” என்பதை பல இலங்கை கல்வியலாளர்கள் கூறியுள்ளனர்.

இங்கே இவ் இரண்டு மத நாட்களில் உணவானது பொதுவாக நன்கொடையாக இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் சுகாதார சேவை திணைக்களம் தமது சேவையில் எவ்வகையான சுத்தமான உணவுகள் மக்களிற்கு சென்றடைகின்றது என்பதை உறுதியளிப்பதில் அவர்களது கடமையை செய்வதிலும் பாராட்டப்பட வேண்டியது.

இத்தகைய சிறப்பு மிக்க தினத்தை இன்றைய ஆண்டு மிகுந்த சமூக இடைவெளியை பேணுவதனுடன் நாம் செயற்பட வேண்டிய காலமாக  உள்ளது. “ COVID 19 “ எனும் தொற்று நோயினால் இன்றைய நாளில் தன்சல் ஐ மேற்கொள்ளமுடியாது. ஆனால் அவ் நன்கொடைகள் எதோ ஒரு வடிவத்தில் வறிய மக்களையும்  இவ் நோயால்  இடர்களை நோக்கும் சமூகத்துக்கும் எங்களான பங்களிப்பை வேறு வழிகளில் மேற்கொள்ள முடியும் என்பதில் அச்சமில்லை. இதனை இங்கு பலர் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நாம் நம்புகிறோம். அவர்களுக்கான பண உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அன்பளிப்பு செய்தல் மற்றும் பிற அன்பான செயல்கள் இவ் வெசாக் தினத்தில் மக்களுக்கான  ஓர் வேறுபட்ட  தன்சல் ஆக காணப்படும்.  ஒரு எதிர்கால சுபீட்ச்சத்தை எம் நாட்டில் எல்லோர் மத்தியிலும்  நோயின்றி கொண்டுவரும் என்ற பிரார்த்தனைகளை சிறப்பான இவ் புனித நாளில்  பிரார்த்திப்போமாக!

சித்திரை புத்தாண்டின்  வாழ்வியல் மற்றும் உணவு  முறைகள்.

சித்திரை புத்தாண்டின் வாழ்வியல் மற்றும் உணவு முறைகள்.

சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிக்கும் காலம் இவ் சித்திரை புத்தாண்டு ஆகும் . இது எல்லோரும் அறிந்ததே , தமிழ் – சிங்கள பண்டிகையாக காணப்படுகிறது . எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியையும் குடும்பத்தின் உறவினர்களுக்கு இடையில் அன்பை பகிர்ந்து கொள்ளும் ஓர் தருணம் ஆகும் .  இவ் புதுவருட பிறப்பை “சார்வரி புதுவருட பிறப்பு” என்று அழைக்கின்றோம் .இன்றைய தினம் (13.04.2020)வாக்கிய பஞ்சாங்க  படி பி.ப7.26 க்கு உதயம் ஆகின்றது . இன்று உலகை உலுக்கும் COVID 19 எனும் நோயினால் உலகமே பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் நோயினால் பீடிக்கப்பட்டவர்களை மீட்டு எடுக்கும்  ஓர் வருடமாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திப்போமாக !  

இங்கே,குறிப்பாக தமிழர்கள் சித்திரை புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் ?அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இவ் எழுத்துருவின் மூலம் தெரிந்துகொள்வோம் .  சைவ மக்கள் என்ற வகையில் இவ் நன்னாளில் அசைவம் துறந்து சைவ உணவு முறைகளை கடைபிடிப்பதே நியதி ஆகும்.

புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் மருத்து நீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மகிழ்வான தருணத்தை கொண்டிருத்தல் என்பது தமிழர் பண்பாட்டில் குடும்பங்களுக்கு இடையில் காணப்படுகின்றது. இங்கு மருத்துநீர் வைத்து தலைக்கு நீர் ஊற்றல்  என்பது எம்மை சுத்தப்படுத்தும் ஓர் முறையாகவும் முன்னோர்களின் தழுவலை பின்பற்றி வரும் செயன்முறையாகும் . 

மகிழ்வான இவ் தருணம் இனிமையானதாக அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுவையான சிற்றுண்டிகள் போன்ற சைவ உணவுவகைகளை தயாரிப்பது தமிழ் பண்பாடாகும் . குறிப்பாக இறைவனுக்கு படைப்பதற்காக எல்லோர் வீட்டிலும் பொங்கல் மேற்கொள்ளப்படும். இது இனிப்பு சுவையாக இருப்பதுடன் அரிசி , தேங்காய்ப்பால் , சீனி , சர்க்கரை , பயறு  பிளம்ஸ் , கச்சான் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும். இறைவனுக்கு படைத்த பின்பு ஒவ்வோர் குடும்பமும் ஒன்றாக இணைந்து களிப்புடன் அதனை உண்டு மகிழ்வார்கள் . 

புத்தாண்டு என்பது தனி ஒரு குடும்பமாகவோ , நபராகவோ கொண்டாடப்படுவது என்பது சிறந்த காரியம் அல்ல. அயலவர்கள் , உறவினர்கள் என அனைவரது வருகையால் தழைத்தோங்கும் தருணம் அது. எனவே எல்லோர் குடும்பமும் அவர்களது பூரிப்பை பகிர்தல் , அறுசுவை மிக்க பலகார உணவு வகைகளை தயாரித்தல் என்பது வழக்கம்.  பகிர்ந்துண்ணல் என்பது எல்லோர் மனிதம்களின்  பண்பு ஆகும்.  எனவே இவ் புத்தாண்டு தினத்தில் சைவ மக்கள் குறிப்பாக பயித்தம் உருண்டை , அரியதரம் , தோய்ப்பான் , சிப்பி , பால்ரொட்டி , கேசரி  மற்றும் முறுக்கு போன்ற பலகாரங்களை தயாரிப்பார்கள். 

இவை  ஆரோக்கியமான சூழல் உருவாகும் என்பதில் ஒவ்வொரு சிற்றுண்டிகளில் உள்ளடங்கும் பொருட்கள் எடுத்துயம்பும். பயிற்றமா , அரிசிமா, வறுத்த தேங்காய்ப்பூ , சீனி , சர்க்கரை , என்பவற்றை கொண்டு பயிற்றம் உருண்டை தயாரிக்கப்படுகிறது. 

அரிசி மா, அவைத்த கோதுமை மா , சீனி , தேங்காய்ப்பால் என்பவற்றை உள்ளடக்கி அரியதரம் , பால் ரொட்டி (சீனி உள்ளடங்காது)தோய்ப்பான் , சிப்பி என்பவை தயாரிக்க படுகின்றது. 

வறுத்த ரவை , சீனி , நெய் /மாஜரீன் , பாதம் , பிளம்ப்ஸ் , கச்சான்  என்பவற்றை உள்ளடக்கி கேசரி மேற்கொள்ளப்படுகின்றது. இது Vegan உணவு செயன்முறையில் இருந்து   வேறுபட்டது. ஆனால் Vegetarian உணவு  சார்ந்ததாக காணப்படுகின்றது. ஆனால் நெய்க்கு பதிலாக தேங்காய்ப்பாலை கலந்து இதனை தயாரிக்கும் போது இது எமக்கு ஒரு Vegan உணவு வகையை சேர்ந்ததாக பிரதிபலிக்கும். 

மேலும் எல்லாம் இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் நிச்சயம் எல்லோர் குடும்பத்திலும் ஓர் உறைப்பு பலகாரத்தையும் மேற்கொள்வார்கள்.  பெரும்பாலும் முறுக்கு தயாரிக்கடுகின்றது. இது கோதுமை மா / கடலை மா , மிளகாய் தூள் , உப்பு , மிளகுத் தூள் , சீரக தூள்  என்பவற்றை ஒன்றிணைத்து தயாரிக்கப்படுகின்றது. 


இங்கே உணவுக அனைத்தும் ஓர் ஆரோக்கிய உணவுவகையை சார்ந்தவையாக அமைவதையே காணலாம் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விருப்பப்பட்டு உட்கொள்ளும் பலகார வகைகளாகவும் மகிழ்வுடன் எல்லோரும் அந்நாளில் ஒன்றிணைந்து களிப்புடன் உண்ணும் உணவு பொருட்களாக இவை அமைகின்றது என்பதில் அச்சமில்லை. 

இவ் 2020 சித்திரை புத்தாண்டு  என்பது எல்லோருக்கும் ஓர் சவால் நிறைந்த வருடமாக அமைகின்றது. எல்லோரும் பாதுகாப்பாக  வீட்டில் தங்கியிருந்து பழமையான பல தகவல்களை ஆராய்வதிலும் எமது உணவு பழக்கவழக்கங்களில் உள்ள சிறப்பையும் நாங்கள் ஆராய்வது வீண் போகாது. நம் முன்னோர்கள் எவ்வளவு விசேடமாக இதனை கொண்டாடினார்கள் ? அவர்களது உணவு பழக்க வழக்கங்கள்  எத்தகையது ? என்று கேட்டு தெரிந்து கொள்ள இருக்கும் தாத்தா, பாட்டி மிகவும் அதிர்ஷ்டம். ஆம் என்னுடைய இவ் கருத்துக்களும் என் பாட்டி என் அம்மாவிற்கு கூறப்பட்ட விடயங்களின் தொகுப்பாகவே நான் இதை எழுதினேன். 

பாதுகாப்பான உலகை கட்டியமைப்பதற்கான ஓர் பிரார்தனையும் இவ்வருடம் எல்லோர் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இதற்கு ஓர் முற்றுகை இடுகிறேன். 

அனைவருக்கும்  இனிய சார்வரி புதுவருட பிறப்பு நல் வாழ்த்துக்கள்!

முதல்பார்வையில் மரக்கறி உண்பவனாக….

முதல்பார்வையில் மரக்கறி உண்பவனாக….

சேனாஷியா எக்க நாயக்கே

.நான் அசைவ உணவை விரும்பி உன்பவர். இந்த  சூழல் என்னை மன்னிக்கும் நிலை காணப்படுகிறது, ஆனால் எனது கலாசாரம் மேலெழுதல், கிடைக்கும் உணவுகளின் சாத்தியம் (இந்திய உணவு வகைகளுக்கு அப்பால்) ஆகியவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றன. அடிப்படையில் மரக்கறி உணவுகள் எந்த சந்தர்ப்பத்திலுமொரு தெரிவாக இருந்ததில்லை, பாண்,செரல், ஜாம், பட்டர் போன்றவற்றை காலை உணவுக்கு எடுக்கும்வரையில் இந்த நிலைப்பாடே காணப்பட்டது.

இந்த விடயங்கள் அனைத்துமொரு தொகுதியாக காணப்பட்டது அத்துடன் நான் இந்தியாவுக்கு எனது பட்டக் கல்விக்காக சென்றிருந்தேன், இந்த நிலையில் சகல காலப்பகுதிகளிலும் தெற்காசிய நாடுகள்  அனைத்தும் ஒரே மாதிரியான நடுகளென தெரிவிக்கப்பட்டது, ஆனால் உண்மை அதுவாக இல்லை . சில சமயங்களில் வறுமை அதிகளவாக இருந்தது அதே போல மிகவும் குறைவான அபிவிருத்தி.  அல்லது எனது விடயத்தில் அதிகளவான புரட்சி தேவைப்பட்டது அதற்கு நான் மிகவும் சிறிய அளவிலான கலாசார அதிர்ச்சியினை கொண்டிருந்ததுடன் அது ஒரு முதிர்ச்சியற்ற கூற்றாகவும்  இருந்திருக்கலாம். .(அதிர்ஷ்டவசமாக நாம் முச்சக்கர வண்டிகள் ஆட்டோக்கள் ரிக்ஷாக்கள் ஆகியவற்றினை கொண்டிருக்கின்றோம்) மக்கள் அங்கு கைவிடப்படுவதை  காட்டிலும் சகல விடயங்களிலும் குறிப்பாக மெக்டொனால்ட்ஸ் உட்பட சகல விடயங்களிலும் அதிகளவான மசாலா பயன்படுத்தப்பட்டிருந்தது

முதல் சில நாட்களில் சான்விச்களிலும் அது உள்வாங்கப்பட்டு இருந்தது. அதிகளவான சான்றுகள் அவ்வாறு இருந்தன. இந்தியாவில் இருந்த காலப்பகுதியை போன்ற காலப்பகுதியில் அதிகளவான பால் வகை உணவுகளை நான் முன்னொரு போதும் உட்கொண்டு இருக்கவில்லை சீஸ் சாண்ட்விச் சுடப்பட்ட சீஸ் சாண்ட்விச் மரக்கறி சான்விச் இன்னும் சீஸ் சாண்ட்விச் மும்மடங்கு சுடப்பட்ட சீஸ் சாண்ட்விச் என பலவகையாக அவை காணப்பட்டன. அத்துடன் சீஸ் வகை உணவுகள் இத்தாலி உணவினை ஒத்ததாக இருந்தபோதிலும் நான் அதனை அனுபவித்து இருக்கவில்லை.

ஏனென்றால் இந்த பிரச்சனையானது,  நான் இந்திய உணவினை ஒருபோதும் விரும்பாத நிலை முதல் ஆரம்பிக்கின்றது , பக்கமாக பிரியாணி ( பாகிஸ்தானி ஆப்கானிஸ்தான், பேசியன் ஆகியவற்றை கூறினாலும் அவை உறுதியானவை அல்ல) ஆகவே இது ஒரு குழப்பமானதாகவே இருந்தது.

இருந்தபோதிலும் குல்பர் ரோஸ் மாதிரி வடிவங்களில் அவற்றினை ஏற்றுக்கொள்ளும் நிலை,  இந்திய உணவுகளை நாம் முயற்சிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை உம்மால் உணரமுடிந்தது. அதாவது நான் ஒரு விடுதியில் வசித்தேன் எனக்கு அங்கு உணவு வழங்கப்பட்டிருக்கவில்லை இருந்தபோதிலும் அங்கு அதிகளவான மேகி காணப்பட்டதுடன் பாண் வகை  போன்ற இனிய உணவுகளும் சில சந்தர்ப்பங்களில் வழமையான உணவுகளும் அங்கு காணப்பட்டன

நன்று நான் அதனை முயற்சி செய்திருந்தேன் அத்துடன் இந்திய உணவையும் விரும்பியிருந்தேன் இந்தியாவுக்கு பின்னர் பல வருடங்கள் கழிந்த நிலையில் நான் சில சந்தர்ப்பங்களில் பன்னீர் பட்டர் மசாலா கோபி மஞ்சூரியன் மற்றும் வெள்ளைப்பூடு சீஸ் நாண் ஆகியவை தொடர்பாக நினைக்க முடிந்தது. ஆனால் உண்மையான கதை அல்லது மாற்றம் எனது முதலாவது வருடத்தின் நிறைவை நோக்கி நடந்திருந்தது. எனது அறையில் தங்கியிருந்த சக பாடியும் நானும் முதல் வருடத்தின் இறுதி செமிஸ்டரை மரக்கறி உணவுடன் கழிப்பதற்கு தீர்மானித்திருந்தோம்.  அது ஒரு புரட்சியான முடிவாக இருந்தாலும் பாரியளவில் பாதிக்கவில்லை. அது உண்மையில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகவே இருந்தது அத்துடன் அதன் முக்கிய விடயமாக நமது நண்பர்களும் ஆதரவை வழங்கியிருந்தார்கள். இருந்தபோதிலும் நான் வீட்டுக்கு செல்லும்போது மரக்கறி உணவை உட்கொள்ளும் விவகாரம் நாளாந்த அடிப்படையில் சகல நாட்களிலும் பொருந்தப் போவதில்லை. முதல் மூன்று மாதங்களும் நான் மரக்கறி உணவை உட்கொள்வதன் அத்துடன் மிகவும் மிருதுவான உணர்வினை நான் அனுபவித்ததை காட்டிலும் எனது தோளும் மிகவும் சுத்தமாகி வருவதனை உணரமுடிந்தது அதேபோல எனது உடலில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டன அவை நல்ல மாற்றங்கள் ஆகவே அமைந்திருந்தன.

என்னால் இதனை மீண்டும் செய்ய முடியுமாக நிச்சயமாக இருந்தபோதிலும் உடனடியாக அதனை செய்ய முடியாது ஏனென்றால் நான் எனது பெற்றோர்களுடன் வாழ்கின்றேன் நான் உண்ண விரும்பும் தெரிவினை சகல சந்தர்ப்பங்களிலும் என்னால் மேற்கொள்ள முடியாது. ஆனால் என்னால் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதற்கு முயற்சிக்க முடியும் அத்துடன் இந்த இரு விடயங்களையும் கருத்தில் கொண்டு அதாவது எனது உடல் மற்றும் வீடு நிகழ்ச்சித்திட்டம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு சில ஏற்பாடுகளை முன்னெடுக்க முடிந்தது அது வெறுமனே காணப்பட்டாலும் ஆதரவு மிக்கதாக இருந்தது.

இறைச்சி மற்றும் பாலுணவு குறைவான உற்பத்திகளை நோக்கிய உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐநாவின் அழைப்பு

இறைச்சி மற்றும் பாலுணவு குறைவான உற்பத்திகளை நோக்கிய உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐநாவின் அழைப்பு

உணவு வடிவங்களில் விலங்குணவு உற்பத்திகளில் இருந்து பாரிய மாற்றத்தை நோக்கி செல்லுதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் தரப்பினரின்  மாநாட்டின் இருபத்திரண்டாவது பதிவின் மூலம் ஒரு முக்கியத்துவத்தை வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கும் சில முக்கிய விடயங்களை உள்வாங்குவதற்கு முடியுமாக இருந்தது. பொருளாதார செயற்பாடுகளில் காணப்படும் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களை வகை பிரிப்பதன் மூலம் அதன் மூலமான சமூக தாக்கங்களை அந்த அறிக்கையானது அடையாளம் கண்ட அதே நேரம் முக்கியத்துவம் கொடுத்து கையாளப்பட வேண்டிய விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன் உலகளாவிய நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகியவை திறமான மட்டங்களில் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பதனையும் அது உறுதிப்படுத்துவதற்கான தன்மையினை கொண்டிருந்தது.  அந்த அறிக்கையின் பிரகாரம் விவசாய உற்பத்தி இறைச்சி மற்றும் பால் உணவுப் பொருட்களின் உற்பத்தி ஆகியவை உலகளாவிய நன்னீர் நுகர்வில்  70 வீதமான பகுதியை கொண்டிருந்தது. அத்துடன் அதற்காக மொத்த நில பயன்பாட்டின் 38 வீதமான பகுதி அதற்கு தேவைப்பட்டிருந்தது. 

அதேபோல உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்கு 14 வீதமான பங்களிப்பினை அவை வழங்கியிருந்தன ஆகவே விலங்குகளின் விநியோகச் சங்கிலி ஆனது காலநிலை மாற்றத்திற்கு மிகவும் முக்கியமான பங்களிப்பினை வழங்குவதாக அமைந்திருந்தது

காலநிலை மாற்றத்துக்கான பங்களிப்பு

முதலாவது தரவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் விலங்குகளிலிருந்து அதாவது மாடுகள் ஆடுகள் செம்மறி ஆடு போன்ற விலங்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் இறைச்சியானது அதிகளவானவெளியேற்றத்தை கொண்டிருந்தது. மாடு மற்றும் பண்ணை விலங்குகளின் பால் உற்பத்தி 41 மற்றும் 20 வீதமான வெளியேற்றங்களுக்கு வழிவகுக்கின்றது. அதேநேரம் பண்டி மற்றும் கோழிப்பண்ணை முட்டை போன்றவை மூலமாக முறையே 9 மற்றும் 8 வீதமான வெளியேற்றம் காணப்படுகிறது

கவலைக்கான காரணம் 

அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கையில், விவசாயத்தின் மூலமான தாக்கங்கள் சனத்தொகை பெருக்கம் விலங்குணவு உற்பத்திகளில் அதிகரிப்பு ஆகியவை காரணமாக கணிசமான அதிகரிப்பினை சந்திப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. அல்லது படிம எரிபொருள் போலல்லாது அதற்கு மாற்றீடான ஒன்றினை பெற்றுக்கொள்வது மிகவும் சிக்கலான விடயமாகும். மக்கள் உணவினை உட்கொள்ள வேண்டும் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான அளவில் தாக்கங்களை குறைப்பது உலகளாவிய ரீதியில் உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகின்றது. அதாவது விலங்குகளிலிருந்து நாம் வெளியேற வேண்டிய தெரிவே இங்கு காணப்படுகிறது.

அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டும் விடயங்களாக, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பு காணப்படும் சந்தர்ப்பங்களில் அதிகளவான புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை நோக்கி நகர்வது பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் என்ற ரீதியில் நிலையானவையாக காணப்படவில்லை. இந்த விடயங்களில் இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பொருட்களே அதிக புரதம் நிறைந்த உணவுகளாக கூறப்படுகின்றது. விலங்கு அதற்கான கேள்வியினை அதிகரிக்க செய்வது உலகளாவிய ரீதியில் காணப்படும் பண்ணை தொழில் துறையினருக்கு பல தடைகளை ஏற்படுத்தும் அதேநேரம் பண்ணை வளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.

 அத்துடன் வர்த்தகரீதியான செயற்பாடுகள் உள்வாங்கப்பட்டு இருக்கும் நிலையில் விலங்குகளின் நலன்புரி தொடர்பில் கவனம் செலுத்த முடியாத நிலை அங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. மேலதிகமாக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி இந்த விடயங்களில் அதிகளவான வெளியேற்றங்களை எதிர்காலத்தில் தரும் என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. அதிக அளவில் பயன்படுத்துதல் அந்த உயிரினங்களின் இறப்புகள் அதேபோல ஏனைய விலங்குகளின் இழப்பு ஏற்படும் ஆபத்துக்கள் போன்றவற்றையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறமுடியும். அத்துடன் பொருட்களையும் பிரச்சினையும் அதிக அளவாக உட்கொள்வது சுற்றுச்சூழலுக்கான தாக்கத்தினை ஏற்படுத்துவது மட்டுமன்றி எமது ஆரோக்கியத்திலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது உடற்பருமன் மற்றும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு அது காரணமாக அமைகின்றது.

வாழ்க்கை வடிவத்தில் மாற்றம் 

மற்றொரு வித்தியாசமான நோக்கில் நாம் ஒவ்வொருவரும் நமது உணவு பழக்கவழக்கங்கள் ஊடாக காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பினை வழங்குகின்றோம். பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் என்ற அடிப்படையிலும் எமது உணவு பழக்கங்கள் காரணமாக அமைகின்றன. பல்வேறு ஆய்வுகளின் மூலம் 2000 சராசரி கலோரிப் பெறுமானத்தை கொண்ட இறைச்சி வகை உணவு 2000 சராசரி கலோரிப் பெறுமானத்தை கொண்ட மரக்கறி  உணவினை காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகளவான பசுமை குடில் வாயு வெளியேற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. வேறுவிதமாக கூறுவதாக இருந்தால் அசைவ உணவுகளை உட்கொள்வோர் வெளியேற்றும் காபனின் அளவானது மரக்கறி உணவுகளை உட்கொள்வோர் காட்டிலும் இருமடங்கு அதிகளவாக காணப்படுகின்றது. என ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 உணவு வடிவங்களில் ஏற்படும் மாற்றம் விலங்கு மற்றும் பால் உற்பத்திப் பொருட்களில் நுகர்வினை உடனடியாக குறைந்த நிலையில்  பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கைக்கு பின்னரான பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இடைவெளியை காணப்படும் நீண்ட பிரதிபலிப்புகளை உணவு மற்றும் இறைச்சி உணவு பால் உணவு ஆகியவற்றில் காணப்படும் வீழ்ச்சி பாரிய பிரதிபலிப்புகளை கொண்டிருக்கும்.

இறைச்சி மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் இல்லாத உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுவது உலகளாவிய ரீதியில் மிகவும் அவசரமான தேவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார ரீதியானதும் சூழலுக்கு இசைவான மாற்றீடுகளை பரிந்துரை செய்திருக்கும் அந்த அறிக்கை மரக்கறி வகை உணவுகளை சுட்டிக்காட்டி இருக்கும் அதேவேளை இறைச்சி உற்பத்தித் துறைக்கு பதிலாக மரக்கறி சார் உணவு உற்பத்தி துறை ஸ்திரமான நுகர்வு மற்றும் உற்பத்தியை நோக்கி கொண்டு செல்ல முடியும். இதனால் ஆரோக்கியம் மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை ஒவ்வொரு தனி நபர்களும் கொண்டிருக்கும் கூட்டு பொறுப்புணர்வு உறுதிப்படுத்த படுகின்றது. காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் காணப்படும் பொறுப்புணர்வை அது சுட்டிக்காட்டுகின்றது. மேலும் இறைச்சி உற்பத்தி துறையினை மூடுதல் ஆகியவை ஸ்திரமான பண்ணை உற்பத்தி வடிவங்களுக்கு வழிவகுக்கும் அதேநேரம் கருணை நிறைந்த பண்ணை செயற்பாடுகளின் மூலம் விலங்குகளின்நலன்புரி உறுதிப்படுத்தப்படும்.

இலங்கையின் தேசிய தீர்மான பங்களிப்பும் கால்நடைகள் துறையும் 

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பின் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக ஐநாவின் ஏனைய நிறுவனங்களும் விவசாயம் மற்றும் பண்ணை தொழில் துறை ஆகியவற்றின் மூலம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக்கொண்டிருப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால் விநியோகச் சங்கிலி காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் அதே நேரம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. 

இந்த விடயத்தை நோக்கும்போது தெற்காசியா இலத்தின் அமெரிக்கா கரீபியன் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்கள் மிகவும் குறைவான உற்பத்தி முறைகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் இலங்கையும் இவ்வாறாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் உற்பத்தி மிகவும் குறைவாக காணப்பட்டாலும் தொகை அதிகமாகவும் இடங்களில் காணப்படும் குறைப்பு போன்றவை பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் சரிவினை காட்டுகின்றது. 

 காலநிலைக்கு உகந்ததும் கருணை நிறைந்ததுமான பண்ணை செயற்பாடுகளை அறிமுகம் செய்து அவற்றினை ஏற்றுக் கொள்வதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கும் அதே வேளை துறை ரீதியான பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் போதிய சரிவு காணப்படும்.

இலங்கையின் தேசிய தீர்மான பங்களிப்புகள் குறித்த அண்மைய ஏற்பாடுகளின் பிரகாரம் காலநிலை மாற்றங்கள் தொடர்பான செயற்பாடுகள் பண்ணை தொழிலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பண்ணை தொழில் துறையானது எதிர்காலத்தில் தேசிய பங்களிப்புகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்களுக்கு அமைவாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இருந்தபோதிலும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்த விடயம் குறிப்பிட்டளவான பங்களிப்பினை கொண்டிருக்கின்றது அத்துடன் விலங்கு மற்றும் பண்ணை தொழிலில் கவனம் செலுத்தப்படுமாக இருந்தால் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் வீழ்ச்சியடைவதற்கு அது காரணமாக அத்துடன் புரட்சி உற்பத்தியிலும் சரிவு ஏற்பட வேண்டிய தேவை தொடர்பாகவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேசிய மைய பங்களிப்புக்கள் தொடர்பான பரிந்துரைகளை அமல்படுத்தும் போது முக்கியமாக நாடு இரக்கம் நிறைந்த கொள்கைகளை அணுகு முறைகளை பின்பற்ற வேண்டும் இவை அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமல்ல காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் பாதிக்கப்பட்டுள்ளது

கொள்கை மாற்றத்தை நோக்கிய முதல் படிகள்

நாட்டின் தேசிய நிர்ணய பங்களிப்புகள் போன்றவற்றின் பகுதியாக இசைவாக நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு இலங்கை அடுத்து ஒரு நீல பசுமை யுகம் என்ற தொனிப்பொருளிலான மாநாடு மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் ஆசிய-பசுபிக் காலநிலை மாற்ற இசைவாக்கம் என்ற அமைப்பின் ஐந்தாவது மாநாடு 2018 அக்டோபர் 17 முதல் 19 வரையான திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

 இந்த மாநாடுகள் வெப்பநிலையை 2 சதம பாகையாக   ஏற்றுக்கொள்ளுதல் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளிகளை நீக்குதல் போன்ற விடயங்களில்   கவனம் செலுத்தியது. காலநிலை மாற்ற விடயங்களில் மரக்கறி உணவுகளை உட்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாக கருத்து கொல்லப்பட்ட நிலையில் இந்த மாநாடுகளில் வரவேற்பு உபசாரம் அசைவமற்ற இரவு உணவு விருந்தாக இடம்பெற்றிருந்தது. 

இந்த இந்த வரவேற்பு உபசாரம் 17ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் பேராளர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர்இதில் கலந்து கொண்டிருந்தனர். சூழலுக்கு உகந்தது விலங்குகளின் நலனில் அக்கறை கொண்ட அசைவமற்ற விருந்து இலங்கை அரசு அதிகாரிகள் விலங்குகளின் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் அக்கறையுள்ள ஒரு சூழலை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதனை சுட்டிக்காட்டி இருந்ததுடன் இந்த விடயம் மாற்று ஒரு வாழ்க்கை வடிவம் தேவை என்பதை நினைவூட்டுவதாகவும் அமைந்தது. 

சிறந்த சூழலை உருவாக்குவதில் நமது தனிப்பட்ட சமூக ரீதியிலான பொறுப்புணர்வை நிறைவேற்றுவதில் அசைவ உணவு நுகர்வு அதாவது சூழலுக்கு உகந்த உணவு வடிவங்களை மாற்றிக்கொள்வதற்கான தேவை இவ்வாறு காணப்படுகின்றது என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு சுட்டிக்காட்டி இருந்ததை போல இந்த இரவு உணவு விருந்துபசாரம் அந்த செய்தியினை வலியுறுத்துவதாக அமைந்தது. 

குறிப்புக்கள்:

1. UNEP (2010) Assessing the Environmental Impacts of Consumption and Production: Priority Products and Materials, A Report of the Working Group on the Environmental Impacts of Products and Materials to the International Panel for Sustainable Resource Management. Hertwich, E., van der Voet, E., Suh, S., Tukker, A., Huijbregts M., Kazmierczyk, P., Lenzen, M., McNeely, J., Moriguchi, Y.

2. Figure 1 sourced from Food and Agriculture Organization of the United Nations (FAO)Global Livestock Environmental Assessment Model (GLEAM) http://www.fao.org/gleam/results/en/

3. Figure 2 sourced from Wellesley, L., Happer, C., & Froggartt A.2015.Changing Climate, Changing Diets: Pathways to Lower Meat Consumption. Chatham House Report. The Royal Institute of International Affairs.London

4. Scarborough, P., Appleby, P.N., Mizdrak, A. et al. Climatic Change (2014) 125: 179. doi:10.1007/s10584-014-1169-1

5. Wellesley, L., Happer, C., & Froggartt A.2015.Changing Climate, Changing Diets: Pathways to Lower Meat Consumption. Chatham House Report. The Royal Institute of International Affairs.London

புது வருடம் புதிய தீர்மானங்கள்: அசைவமற்ற உணவுடன் வாழ்க்கை வடிவங்கள்

புது வருடம் புதிய தீர்மானங்கள்: அசைவமற்ற உணவுடன் வாழ்க்கை வடிவங்கள்

அவந்தி ஜெயசூர்யா 

புது வருடம் ஆரம்பிக்கும்போது நாம் நமது வாழ்க்கை மற்றும் நமது வாழ்க்கை வடிவத்தின் நம்மிடம் இருக்கும் தீயவற்றை கைவிடுதல் மற்றும் அடுத்த வருடத்தில் நாம் பின்பற்றவேண்டிய புதிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக நாம் சிந்திக்கின்றோம். உணவு பழக்க வழக்கம் நமது ஆரோக்கியம் மற்றும் நலன்புரி மற்றொரு முக்கிய விடயமாக இருக்கும் நிலையில் உணவின் தரம் சுத்தமான வாழ்க்கை வடிவம் மற்றும் சூழலுக்கு உகந்த சுவடுகள் விட்டுச் செல்லுதல் ஆகியவை தொடர்பாக நாமும் எமது புதிய வருட தீர்மானங்களின் போது கவனத்தில் கொள்ள வேண்டும்

தீர்மானம் 1/ ஆரோக்கியமான 2017ஐ நோக்கி 

தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை நோக்கிச் செல்வது உலகளாவியரீதியில் பிரபலமடைந்து வரும் புதிய வடிவமாக காணப்படுகின்றது. அசைவ உணவினை நாம் தெரிவு செய்வது எமது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலையில் ஒரு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. அமெரிக்க மற்றும் உணவியலமையதினால்  வெளியிடப்பட்டிருக்கும் தாவர மற்றும் அசைவற்ற உணவுகளை உட்கொள்ளுதல் தொடர்பான ஆய்வில் உணவுகளை குறைத்து தாவர உணவுகளை அதிகரிப்பதன் மூலம் குறிப்பிட்ட நோய்களில் இருந்து தப்பிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்ளும்போது அவை புரதம் 3 கொழுப்பு அமிலங்கள் இரும்புச்சத்து ஜிங்க் அயோடின் கல்சியம் மற்றும் டி பி12 போன்ற விட்டமின்கள் வழங்குவதாகவும் உள்ளது உயர் குருதி அழுத்தம் கொழுப்பு ரீதியான நோய்கள் இருதய நோய்கள் மற்றும் உடற்பருமன் ஆகியவை வராமல் தடுப்பதற்கு தாவர அடிப்படையிலான உணவுகளை தெரிவு செய்வது முக்கியமானதாகும். . ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை வடிவம் ஒன்றை நோக்கி நீங்கள் செல்வதாக இருந்தால் தாவர உணவுகளை தெரிவு செய்வது உங்களின் புதுவருட தீர்மானமாக அமையலாம்.

தீர்மானம் 2 சூழலுக்கு உகந்த வாழ்க்கை வடிவங்களை தெரிவுசெய்தல்

 உடனடியான உடல் ஆரோக்கிய நலன்கள் பெற்றுக்கொள்வதற்கு அப்பால் அசைவ உணவுகளை நோக்கி செல்வது நமது சூழல் மற்றும் சுற்றுச்சூழல் முறையில் பிறந்த தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. புள்ளிவிபரங்களின்படி விலங்கு பண்ணைகள் காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கும் காரணியாக அமைகின்றது. அத்துடன் மற்றும் பன்றி போன்ற இறைச்சிகள் உற்பத்தி செய்யப்படும் அதன் மூலம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் கணிசமான அளவில் உயர்வடைகிறது ஆராய்ச்சிகளின் மூலம் தாவர உணவுகளை நோக்கி நாம் செல்வது உணவினை அடிப்படையாகக் கொண்ட பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தினை 70 வீதமான குறைத்து 2050 ஆம் ஆண்டில் 8 மில்லியன் மனித உயிர்களை பாதுகாக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உங்களின் உணவு வடிவத்தில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நமது வெளியேற்றத்தின் குறைப்பதற்கு சிறிய பங்களிப்பை வழங்க முடியும் என்பதுடன் பசுமை உலகினை கட்டியெழுப்புவதில் சிறு முயற்சியையும் எடுக்க முடியும்.

தீர்மானம் 3 / விலங்கு நல ஆர்வலராதல்

 பொதுவாக நீங்கள் விலங்குகள் மீது அக்கறை கொண்டிருக்கும் அதே நேரம் அவற்றை விரும்புபவர்களாகவும் இருப்பதாக இருந்தால் இந்தவிடயத்தில் நீங்கள் வெற்றியாளர்களாக   அசைவ உணவுகளை தெரிவு செய்வது கொடூரமான அணுகுமுறைகள் உற்பத்தி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழியாக அமையும்.  அதே நேரம் விலங்குகளை நோக்கிய இரக்கமான மனப்பாங்கு தோன்றுவதற்கும் வழிசமைக்கும். உற்பத்தியை நுகர்வினை குறைப்பதன் மூலமும் பால் உற்பத்தி பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் உற்பத்திப் பொருட்களுக்கான கேள்விகளால் அதிகரித்துச் செல்லும் துறையின் செயற்பாடுகளை திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வழிசமைக்கும் கடந்த காலங்களில் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு இருக்கும் நிலையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் ஆக இருந்தால் பாலுணர்வில் பொருளாதார ரீதியாக விதமான வடிவங்களை பெறுவதற்கு வழிசமைக்கும் . 

அதன் மூலமாக குறிப்பாக விலங்குப் பண்ணை துறைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் நலன்புரி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மிகவும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும். அத்துடன் விலங்கு மற்றும் பால் உணவுப் பொருட்களின் கேள்வியினை விநியோக வடிவங்களை அளவீடு செய்வதன் மூலமாக கைத்தொழில் மயமாக்கப்பட்ட வர்த்தக உற்பத்தி பொறிமுறைகளில் தங்கியிருப்பதை காட்டிலும் அதிலிருந்து மாற்றி மாற்றி மேற்கொள்வதற்கு வழிசமைக்கும் வர்த்தக ரீதியான முறைகளில் விலங்குகள் தமது சித்திரவதைகள் கொடூரங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியாத நிலை காணப்படும் நிலையில் கொடூரமாக கருணையான செயற்பாடுகள் மூலம் விலங்குகளின் பொதுவான நலன்புரி உறுதிப்படுத்த முடியும்.

அசைவம் அற்ற வாழ்க்கை வடிவத்துக்கு மாறுதல் 

நீண்ட காலமாக பின்பற்றிய நமது பழக்கவழக்கங்களை குறிப்பாக உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது மிகவும் சவாலான விடயம் தான் தாவர அடிப்படையிலான உணவுகளை நோக்கி செல்வது முக்கியமான விடயமாக இருக்கின்றது. இது உணவினை திட்டமிடுதல் கொள்வனவு செய்தல் சமைத்தல் உணவகங்களை தெரிவு செய்தல் போன்ற விடயங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். இந்த மாற்றத்திற்கான ஒரு ஆரம்ப முயற்சியாக காணப்படும் நிலையில் வாரத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் தாவர அடிப்படையிலான உணவுகளை நீங்கள் தெரிவு செய்யமுடியும் ஒரு தடவை நீங்கள் அசைவ உணவுக்கு செல்வதாக இருந்தால் நீங்கள் பாரிய அளவில் உங்களுடைய அசைவ உணவு தேவையை குறைக்க முடியும் இறுதியில் அசைவ நுகர்வினை முற்றாக நிறுத்த முடியும் அந்த சந்தர்ப்பம் முதல் நீங்கள் பாரியளவிலான தாவர அடிப்படையிலான உணவினை தெரிவு செய்யும் காரணத்தினால் பால் உற்பத்திப் பொருட்களையும் குறைப்பதற்கான செல்ல முடியும் ஆகவே புதிய வருடம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு சூழலுக்கு உகந்தது ஆரோக்கியமானதும் முழுவதுமான தெளிவாக அசைவற்ற வாழ்க்கை வடிவம் சிறந்ததாக அமையும்